valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 12 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

சாயி பர பிரம்மத்தின் அவதாரம்; பக்கீரோ பிரமையே உருவானவர். ஷீரடியில் தேவி தாசரால் பரீக்ஷை செய்யப்பட்டபோது பிரமைகள் அனைத்தும் தூள் தூளாகிவிட்டன.

தேவிதாஸ் சுந்தரமான உருவமும் ஒளிவீசிய கண்களும் மனோஹரமான முகமும் படைத்தவர். ஷீரடிக்கு முதன்முதலாக அவர் வந்தபோது அவருக்குப் பாத்து அல்லது பதினொன்று வயதுதான் இருக்கும்.

ஒரு லங்கோட்டை மாத்திரம் கட்டிக்கொண்டு, இந்த பாலகன், வந்த புதிதில் மாருதி கோயிலில் தங்கினான்.

ஆப்பா பில்லும் மகால்சாபதியும் அடிக்கடி தேவி தாசரிடம் சென்றனர். காசிராமரும் மற்றவர்களும் இவருக்கு மளிகைச் சாமான்களையும் விறகையும் அளித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய முக்கியத்துவம் வளர்ந்தது.

பாபா கல்யாணக் கோஷ்டியுடன் வருவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, தேவிதாசர் ஷீரடியில் தங்குவதற்கு வந்துவிட்டார்.

தேவிதாசர் ஆப்பா பில்லுக்கு கரும்பலகையில் எழுதக் கற்றுக் கொடுத்தார். வெங்கடேச தோத்திரத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து கோஷ்டியாகப் பாராயணம் செய்ய வைத்தார். இவ்வகுப்புகளை அவர் தவறாது நடத்தினார்.

தேவிதாசர் மகா ஞானி. தாத்யாபா இவரைத் தம் குருவாகக் கொண்டார். காசிநாதரும் மற்றவர்களும் இவருடைய சிஷ்யர்களாகவும் அடியவர்களாகவும் ஆனார்கள்.

தேவிதாசர் முன்னிலையில் பக்கீர் கொண்டுவரப்பட்டார். தேவிதாசரும் பக்கீரும் சாஸ்திர ரீதியாக வாக்குவாதம் செய்தனர். தம்முடைய தவத்தின் சக்தியால் தேவிதாசர் பக்கீரை அடியோடு தோற்கடித்து விட்டார். பக்கீர் ஷிர்டியிலிருந்து விரட்டப்பட்டார்.

ஷிர்டியிலிருந்து தப்பியோடிய பிறகு, பக்கீர் வைஜாபுரிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஷீரடிக்கு வந்து சாய்நாதரை நமஸ்காரம் செய்தார்.

தாம் குருவென்றும் பாபா ஷிஷ்யரென்றும் எண்ணிய பிரமையனைத்தும் நிவர்த்தியாகி, மன்னிப்புக் கோரியதால் பக்கீர் தூய்மைடைந்து விட்டார். பாபாவும் அவரை முன்போலவே ஆதரித்தார்.

பாபவினுடைய வழிமுறைகள் இவ்வாறு ஆராய்ச்சிக்கும் காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை! நேரம் வந்தபோது பிரச்சினை தீர்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவரி பாபா பொறுமையாக குரு சிஷ்ய உறவுக்கு மதிப்புகொடுத்து வாழ்ந்தார்.

குருவென்று பக்கீர் தமக்குத்தாமே நினைத்துக் கொண்டால், அது முழுமையாக அவருடைய பொறுப்பாகிறது. ஆனால், சிஷ்யன் என்கிற முறையில் தமது கடமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை செவ்வனே செய்தார் பாபா. இதுதான் இக்காதையின் பாடமாகும்.



Thursday, 5 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆயினும், ஷிர்டி கிராம மக்கள் பாபாவின் அன்பார்ந்த பக்தர்கள்; அவர் மீது பந்தமும் பாசமும் கொண்டிருந்தனர். பாபாவிடமிருந்து அவ்வாறு பிரிந்திருந்தது அவர்களுக்கு முறையான செய்கையாக தோன்றவில்லை.

ஜவஹர் அலியின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாடிக் கொண்டது பற்றி கிராம மக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்ப பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

பொன்னும் அதன் காந்தியும் (பள பளப்பும் ), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்க முடியாதவர்கள். இருவருமே இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.

பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் ஷீரடிக்கு அழைத்துக் கொண்டு வரும்வரை, ஒருவரை ஒருவர்  பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் ஷிர்டியிலிருந்து ரஹாதா விலிருந்த இத்காவிற்குச் சென்றது.

ஆனால், பாபா இதற்கு  நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார்.  "இந்தப் பக்கீர் மகா கோபி; அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின் , அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்க மாட்டார். -

"நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்திலிருந்து திரும்பிவரும் தருணம் வந்து விட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக் கட்டி விடுவார்.

"பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்து விடும். போங்கள், போங்கள், உடனே இடத்தை காலி செய்து விட்டு ஷிர்டி போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்".

"அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரே!" என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாரதவிதமாக த்ரயும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.

"ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞனை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்து விடுங்கள்; அது நடக்காத காரியம்".

ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாக சொல்லி விட்டாலும், கடைசியில் அவரே கிராம மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், "உங்களுடன் என்னைச் ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லோரும் நம்முடன் இந்த பையனையும் அழைத்துக் கொண்டு போவோம்."

இவ்விதமாக பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி ஷீரடிக்கு வந்தார். அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லை!


Thursday, 28 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

பக்கீர் அதிகம் படித்தவர்; குர் ஆனை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருந்தார். சுயநலவாதிகளும் இறையுணர்வாளர்களும்  விசுவாசிக்களுமாகப் பலர் அவரைப் பின்பற்றினர்.

பக்கீர் ஓர் இத்காவைக் (முஸ்லீம்கள் தொழுகை செய்யும் சுவர்) கட்ட ஆரம்பித்தார். சில நாள்கள் கழித்தபின், அவர் வீரபத்திர சாமி கோவிலை இழிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இத்கா கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது; பக்கீர் கிராமத்திலிருந்து (ரஹாதா) விரட்டியடிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஷீரடிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.

பக்கீர் திறமை வாய்ந்த இனிமையான பேச்சாளி. கிராமமே அவரைக் கொண்டாடியது. அவர் பாபாவை மயக்கித் தம் வசப் படுத்திவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

"நீ எனக்கு சிஷ்யனாக இருக்கலாம்" என்று அவர் பாபாவிடம் கூறினார். சுபாவத்தில் விளையாட்டுப் பிரியராக இருந்த பாபா, அதற்கு ஒத்துக் கொண்டார். பக்கீர் மிகுந்த சந்தோஷத்துடன், பாபாவை ஷிர்டியிலிருந்து வெளியே அழைத்து கொண்டு போய் விட்டார்.

பிரசித்தி பெற்ற பாபாவை ஷிஷ்யனாக்கி, ஜவஹர் அலி குருவாகிவிட்டார். இருவரும் ரஹாதாவிற்குச் சென்று வாழ்வதென  முடிவு செய்தனர்.

குருவிற்கு ஷிஷ்யருடைய கலைகள் தெரியாது; சிஷ்யருக்கோ குருவினுடைய குறைபாடுகள் தெரிந்திருந்தன. ஆனால், ஒருபொழுதும் சிஷ்யர் குருவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. சிஷ்யனுடைய கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்தார்.

குருவினிடமிருந்து  எந்த ஆனை வந்தாம் சரி, யோக்கியமானதா (தகுதியுடையதா) அயோக்கியமானதா என்று பாராமல், அது உடனே நிறைவேற்றப் பட்டது. குருவின் வீட்டிற்குத் தண்ணீரும் சுமந்தார் சாயி.

இவ்வாறு குருவின் சேவையில் நாள்கள் ஓடின. ஆனால், ஷீரடிக்கு வருவதென்பது எப்போதோ ஒருநாள்தான் முடிந்தது. இம்மாதிரியான நிலை ஏற்பட்டபோது, இதனால் என்ன விளைந்த தென்பதைக்  கேளுங்கள்.

இந்நிலை தொடர்ந்து, பாபா பிரதானமாக ரஹாதாவிலேயே எப்பொழுதும் இருந்தார். மக்கள், பாபாவைப் பக்கீர் மந்திர சக்தியால் கட்டி விட்டார் என்றும் ஷீரடிக்கு இனி அவர் வரப் போவதே இல்லை என்றும் உணர ஆரம்பித்தனர்.

ஜவஹர் அலி யோகபலத்தால், பாபாவைத் தம்முடனேயே இருக்குமாறு கட்டி விட்டார் என்று மக்கள் நினைக்க, பாபாவின் திட்டம் முற்றும் மாறுபட்டதாக இருந்தது. தம்முடைய அஹங்காரத்தை நாசம் செய்ய இதை ஓர் உபயாமாகக் கொண்டார்.

சாயிக்கு ஏது கர்வமும் அஹந்தையும்? கதை கேட்பவர்கள் இவ்வாறு சிந்திப்பது இயற்கையே. ஆனால், அம்மாதிரியான நடத்தை மக்களுக்கு நல்லது செய்யும்; அது அவருடைய அவதாரத்தின் லட்சியம் அன்றோ!


Thursday, 21 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தினமும் நடக்கும் வழக்கப்படி, பாபா எண்ணெய் கேட்டுக்கொண்டு வந்தபோது அனைவரும் எண்ணெய் இல்லையென்று சொல்லிவிட்டனர். என்ன அற்புதம் விளைந்தது!

ஒரு வார்த்தையும் பேசாமல பாபா திரும்பி விட்டார். பழைய திரிகளைச் சீர் செய்து அகல் விளக்குகளில் பொருத்தினார். எண்ணெய் இல்லாமல் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கடைக்காரர்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாபா தகர டப்பாவை மசூதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து எடுத்தார். அதில் ஓரிரு துளிகள் எண்ணெய் இருந்தது; ஒரு மாலை விளக்கு ஏற்றுவதற்குக் கூடப் போதாது.

அந்த எண்ணையில் தண்ணீரை ஊற்றி, இறைவனுக்கு அர்பணிப்பது போலக் குடித்து விட்டார். பிறகு, அவர் வெறும் தண்ணீரை எடுத்துக் கொண்டார்.

தண்ணீரை அகல் விளக்குகளில் ஊற்றித் திரிகளை நனைத்தார். விளக்குகளை ஏற்றி, அவை பிரகாசமாக எரிவதைக் காண்பித்தார்.

சுவாலையுடன் தண்ணீர் எரிவதைப் பார்த்த கடைகாரர்கள் வியப்பிலாழ்ந்தனர். பாபாவிடம் பொய் சொன்னது தவறு என்று தங்களுக்குள்ளேயே pesik கொண்டனர்.

அணுவளவும் எண்ணெய் இல்லாது விளக்குகள் இரவு முழுவதும் எரிந்தன. எல்லா ஜனங்களும், கடைக்கார்களும் பப்வின் அருளைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்று சொன்னார்கள்.

"ஓ, பாபா எவ்வளவு அற்புதமான சக்தி பெற்றவர்!" என்பர் கடைகாரர்கள் ஆச்சரியப்பட்டனர்; பொய் சொல்லிப் பாவம் சேர்த்தது மட்டுமல்லாமல் பாபாவை அனாவசியமாக கோபப்படும்படி  செய்துவிட்டதையும் உணர்ந்தனர்.

இது இப்படி இருப்பினும், சினத்துக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்ட பாபா இதைப் பற்றச் சிந்திக்கவில்லை. அவருக்கு நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை எல்லா ஜீவராசிகளும் ஒன்றே.

(ஆசிரியர் மறுபடியும் காலத்தால் பின் நோக்கிப் போகிறார்)

மறுபடியும் அந்தக் காதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, மொஹித்தீன் தாம்போலி பாபாவை மல்யுத்தத்தில் வென்ற நிகழ்ச்சியிலிருந்து தொடரும் அக் காதையைக் கவனமாகக் கேளுங்கள்.

மல்யுத்த நிகழ்ச்சி நடந்த ஐந்தாவது வருஷம், அஹமத் நகரவாசியும் ஜவஹர் அலி என்னும் பெயர் கொண்டவருமான பக்கிரி ஒருவர் தம் சிஷ்யர்களுடன் ரஹாதாவிற்கு வந்தார்.

வீரபத்திரர் கோயிலுக்கு எதிரிலிருந்த மைதானத்தில் கொட்டாரம் போட்டுத் தங்கினர். இந்தப் பக்கீர் பெரும் அதிர்ஷ்டசாலி.

அதிர்ஷ்டசாலியாக இல்லாமல் இருந்தால், அவருக்கு எப்படி சாயியைப் போன்ற புகழ்ப் பெற்ற, மகிழ்ச்சியளிக்கும் சிஷ்யர் கிடைத்திருப்பார்?

கிராமத்தில் அநேக
மக்கள் இருந்தனர்; அவர்களில் பலர் மராட்டியர். மராட்டியர்களில் பகூ ஸ்தாபல் என்ற ஒருவர் பக்கீருக்குச் சேவகராக ஆகிவிட்டார். 


Thursday, 14 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இது, அஹங்காரத்தையும் வாசனைகளையும் மனவக்கிரங்களையும் உலகியல் வாழ்வில் ஏற்படக்கூடிய ஆசாபாசங்களையும் யுக்திகளையும் குயுக்திகளையும் அனைத்தையும் அவர் துனியில் ஆஹுதியாக இடுவது போலத் தோன்றியது.

கொழுந்துவிட்டெரியும் துனியில் கர்வம் பிடித்த ஞானத்தைக் கட்டைகளாகப் போட்டு, 'அல்லாமாலிக்' என்று சதா ஜபம் சொல்லி, அல்லாவின் கொடியை ஏற்றினார்.

மச்சொதி விசாலமான இடமா என்ன? இரண்டு தூலங்களுக்கு இடையே இருட்ன்ஹா சிறய இடந்தானே! இங்கேதான் அவர் உட்கார்ந்தார்; வளையவந்தார். எல்லாரையும் சந்தித்தார். உறங்கினார்; வசித்தார்.

தரை விரிப்புகள், திண்டுகள், எல்லாம் பக்தர்கள் பெருகப் பெருக இப்போது வந்து விட்டன. ஆனால், ஆரம்ப காலத்தில் பக்தர்கள் யாரும் பயமின்றி அவரை அணுக முடியவில்லை.

1912  ஆம் ஆண்டிலிருந்து எல்லா மாற்றங்களும் ஏற்பட்டன. அந்த வருடத்திலிருந்துதான் மசூதியின் உருவமே மாற ஆரம்பித்தது.

முட்டிக்கால் ஆழத்திற்குப் பள்ளம் பள்ளமாக இருந்த மசூதியின் தரை, பக்தர்களின் அன்பார்ந்த சேவையால் ஒரே இரவில் சரளைக் கற்கள் நிரவப்பட்டுத் தளமிடப்பட்டது.

மசூதியில் வசிக்க வருவதற்கு முன்னால், பாபா பக்கீர்கள் தாங்கும் இடமான தகியாவில் தங்கினார். அங்கு பல காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்.

இந்தத் தகியாவில் வசித்தபோதுதான் பாபா கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு கஞ்சிராவின் தாளத்திற்கேற்றவாறு நளினமாக நடனம் ஆடினார். இனிமையான குரலில் பாடினார்.

ஆரம்ப காலத்தில் சமர்த்த சாயி விளக்குகள் பல ஏற்றுவதில் மிக ஆவல் கொண்டிருந்தார். இதற்காகத் தாமே போய்க் கடைக்காரர்களிடம்  எண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தார்.

தகர டப்பாவைக் கையிலெடுத்துக் கொண்டு போய், மளிகைக் கடைகாரர்களைத் தாமே பிச்சை கேட்டு வாங்கிவந்து, அகல் விளக்குகளை நிரப்புவார்.

பிறகு, அவர் கோயிலிலும் மசூதியிலும் பிரகாசமாக விளக்குகளை ஏற்றுவார். இது சில நாள்களுக்கு தொடர்ந்து நடந்துவந்தது.

விளக்குகளைத் தொழுவத்தில் அவருக்கு ஆர்வம் அதிகம். விளக்குகளின் திருநாளான தீபாவளியைக் கொண்டாடுவார். துணியைத் துண்டுகளாகக் கிழித்து, முருக்கித் திரிகளாக்கி, மசூதியில் விளக்குகள் எரிப்பார்.

எண்ணையையப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் இலவசமாகத்தான் கொண்டுவந்தார். கடைகாரர்களின் மனதுள் கபடம் புகுந்து, 'போதும் இந்தச் சனியன் பிடித்த தொல்லை' என்று நினைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து பாபாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.



Thursday, 7 June 2012

ஷிர்டி சாயி பாபா சத் சரிதம்

பாபசாஹெப் அவரை சாயி தரிசனத்திற்கு அனுப்பிவைத்தார். சாயியினுடைய ஆசிர்வாதத்தால் நானா சாஹேபுக்கு ஒரு மகன் பிறந்தான்.

இதன் பிறகு, சாயியுனுடைய புகழ் வளர்ந்து, சாயி தரிசனத்திற்காக ஜனசமுதாயம் கூட்டங்கூட்டமாக ஷிர்டியை முற்றுகையிட்டது. இச் செய்தி ஜில்லாவின் தலைநகரமான அஹமத் நகரை  எட்டியது.

நானா சாஹேப் (நிம்காங்க்வ் வாசி) அஹமத் நகரத்திலிருந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வட்டத்தில் நல்ல செல்வகுக் கொண்டவர். அதிகாரிகளுடன் நன்கு பழகினார். அதிகாரிகளில் ஒருவருக்கு சிதம்பர கேசவ் என்று பெயர். ஜில்லா கலெக்டரின் காரியதரிசியாக வேலை பார்த்தவர்.

நானா சாஹேப் டான்கேலே, அவரை ஷிர்டிக்குக் கட்டாயமாக மனைவியுடனும் மக்களுடனும் நண்பர்களுடனும் சாய் தரிசனம் செய்ய வரச் சொல்லி ஒரு கடிதம் எழுதினார். இவ் விஜயம்  பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார்.

இவ்விதமாக பாபாவின் புகழ் பரவபரவ, ஒவ்வொருவராக ஷீரடிக்கு வர ஆரம்பித்தனர். பக்தர்களுடைய கூட்டம் பெருகியது.

பாபாவுக்கு எவருடைய சந்காதமும் தேவைப்படவில்லை எனினும், பகல் நேரத்தில் பக்த பரிவாரம் அவரைச் சூழ்ந்து கொள்ளும், சூரிய அச்த்மனதைற்குப் பிறகு, அவர் (ஷிர்டியிலிருந்த) பாழடைந்த மசூதியில் தூங்குவார்.

சில்லிமும் புகையிலையும் ஒரு தகர டப்பாவும் எப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தன. தழையத் தழைய  நீண்ட கப்னி ஒன்றை அணிந்து கொண்டு தலையை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு எப்பொழுதும் சட்காவைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.

சுத்தமான வெள்ளைத் துநியோன்றைத் தலைமேல் போர்த்து, இடக்காதிற்குப் பின்னால் ஜடாமுடியைப் போன்று இறுக்கமாக முறுக்கி, அழகான தலைப்பாகை போல் பாபா கட்டிக்கொண்டார்.

இம்மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு சில சமயங்களில் சேர்ந்தாற்போல் எட்டு நாள்களும் குளிக்காமல் இருப்பார். வெறும் பாதங்களுடந்தான் நடந்தார். ஒரு கோணிப் பையையே ஆசனமாகக் கொண்டார்.

இவ்வாறு, ஒரு கந்தல் கோணித் துணியே அவருடைய நிரந்தரமான ஆசனமாக அமைந்தது. மெத்தையின் சுகமென்பது என்னவென்றே அவருக்கு தெரியாது. மொத்தத்தில், எது கிடைத்ததோ அதில் திருப்தி அடைந்தார்.

நலிந்து போன பழைய சாக்குத் துணியே அவருடைய பிரியமான ஆசனம். சதா சர்வகாலமும் அது அவ்விடத்திலேயே இருந்தது.

ஆசனம், விருப்பு, எல்லாம் அதுவே. பாபா கோவணம் மட்டும் தரித்தார். வஸ்திரமோ போர்வையோ வேறு எதுவுமே இல்லை. குளிரை விரட்ட துனி (நெருப்பு) இருந்தது.

இடக்கையைக் கிராதியின்மீது வைத்துக் கொண்டு தெற்குப் பார்த்தவாறு இக் கோணிப் பை ஆசனத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, தம்மெதிரில் இருந்த துனியையே பாபா உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்.


Thursday, 31 May 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

ஒரு கோணிப் பையை ஆசனமாக ஏற்று, மற்றொரு கோணிப் பையை படுக்கை விரிப்பாக்கிக் கொண்டார். தாம் அணிந்து கொண்ட கந்தைத் துணிகளிலும் த்ரிருப்தி கண்டார்.

வறுமையே மகோன்னதமான சாம்ராஜ்யம்; பணகாரனுடைய ஆடம்பரத்தை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. 'அல்லா ஏழைகளையே நேசிக்கிறார்' என்று பாபா அடிக்கடி சொல்லுவார்.

கங்காகீருக்கும் வாழ்கையில் இந்நிலை ஒரு சமயத்தில் வந்தது. மல்யுத்தப் பிரியரான அவர், ஒரு முறை மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே திடீரென்று சலிப்படைந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தார்.

பிராப்தம் வந்த காலத்து, ஒரு சித்தருடைய வார்த்தைகள் அவருடைய காதுகளை அசரீரியாக வந்தடைந்தன. "இப்பூதவுடல் கடவுளிடம் விளையாடுவதில் கரைவதே சிலாக்கியம். "

அவர் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே, இவ்வநுக்கிரஹ ரூபமான வார்த்தைகள் அவருடைய காதுகளில் விழுந்தன. உலகியல் வாழ்க்கையைத் துறந்து இறைவனை தேடும் பாதையில் இறங்கி விட்டார்.

அவருடைய மேடம் புந்தாம்பே வுக்கு அருகில், கோதாவரி நதி இரண்டாகப் பிரிந்து மறுபடியும் கூடுவதால் ஏற்படும் தீவில் இருக்கிறது. சேவை செய்யும் ஆர்வமுள்ள சிஷ்யர்களும் அநேகர் அங்கு இருக்கின்றனர்.

நாள்கள் ஆக, ஆக , சாயி நாதர், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லி வந்தார். தாமாக யாரிடமும் பேசுவதில்லை.

பகல் நேரத்தில் வேப்பமரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். சில சமயங்களில் கிராம எல்லையான ஓடையின் கரையில் இருந்த ஒரு கருவேல மரத்தின் குறுக்கு வாட்டமாக வளந்த கிளையில் கீழ் அமர்ந்திருப்பார்.

சில நாள்களில் அவர் விருப்பபட்டபோது மதியத்திற்குப் பிறகு, கால்போனவாக்கில் நடந்து ஒரு மைல் தூரத்திலிருந்து நிம்காங்க்வ் கிராமதினருகில் செல்வார்.

புகழ்பெற்ற  த்ரியம்பக டங்களே நிம்காங்க்வினுடைய ஜாகீர்தாராக இருந்தவர். பாபா சாஹேப், அவருடைய வம்சத்தில் பிறந்தவர். பாபா இந்த பாபா சஹேப்பை மிகவும் நேசித்தார்.

நிம் காங்கிற்கு சிறு நடையாகப் போனபோதெல்லாம், பாபா அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடன் அந்நாள் முழுவதும் மிகுந்த பிரேமையுடன் பேசிக் கொண்டிருப்பார்.

பாபா சாஹேப்பிற்கு, நானா சாஹேப் என்னும் பெயர் கொண்ட தம்பியொருவர் இருந்தார். புத்திரப் பாக்கியம் இல்லாததால் நானா எப்பொழுதும் மன வருத்தத்துடன் இருந்தார்.

முதல் மனைவிக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படும் வாய்ப்பேதும் இல்லது போனதால், நானா இரண்டாவது மனைவியை மணந்து கொண்டார். ஆனால், எவராலும் குணானு பந்தத்திலிருந்து (முன் ஜன்ம வினைகளும் தளைகளும்) தப்பிக்க முடியாது. தெய்வத்தின் வழிகள் மர்மமானவை!