ஷீர்டி சாயி சத்சரிதம்
"அதை விடுத்து ஒரே தூங்கிவிழுகிறார். அவருடைய கை, கல் போலக் கனக்கிறது. "பகத்" என்று நான் விளிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து தூக்கம் கலைந்து அவரை நிலைகுலையைச் செய்கிறது.-
"தரையிலேயே நிலைப்பட உட்காரமுடியாதவர், ஸ்திரமான ஆசனம் இல்லாதவர், தூக்கத்திற்கு அடிமையாகிய மனிதர், உயரத்தில் எப்படித் தூங்கமுடியும்?"
'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட; மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வலையில் அவர் நடக்கட்டும். (பிறரைப் பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராகச் செயல்படாதே.) இந்த அறிவுரையை பக்தர்களின்மீது இருந்த அநுராகத்தினால் (காதலால்) பாபா சமயம் பார்த்து அளித்தார்.
சாயிநாதரின் செய்கைகள் மனித அறிவுக்கெட்டாதவை ! ஹேமாட் அவருடைய பாதாரவிந்தங்களில் இணைந்து கொள்கிறேன். கிருபையுடன் என்னை ஆசீர்வதித்த காரணத்தால், அவரும் என்னை அகண்டமாக நினைவுகொள்கிறார்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில் , 'குருபாத மஹிமை' என்னும் நாற்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.