valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 March 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்

தாயையும் தந்தையையும் உறவினர்களையும் நண்பர்களையும் ஜாதியையும் வம்சத்தையும் -- ஏன், சகல சாம்ராஜ்யத்தையும் துறந்துவிட்டு, ஜனங்களின் நன்மைக்காக அவர் ஷீரடியில் தோன்றினார். 


ஷீரடியின் வயதான மூதாட்டி ஒருவர், நானா சோப்தாரின் தாயார், பாபாவின் அற்புதமான பழக்கங்களையும் நடத்தையையும் பற்றி அடிக்கடி பேசுவார்.

அதிசுந்தரமான இவ்விளவல் ஆரம்பத்தில் வேப்பமரத்தடியில், ஆழமான தியானத்தில் உட்கார்ந்த நிலையில், முதன்முதலாகக் காணப்பட்டான். என்று அம்மூதாட்டி தெரிவித்தார். 

இக் கவர்ச்சிமிகு இளைஞன் இளம்பிராயத்திலேயே கடுமையாகத் தவம் செய்வது கண்டு மக்கள் அதிசயித்தனர். கொளுத்தும் வெயிலும் கடுங்குளிரும் அவனுடைய தவநிலையில் ஒன்றாகவே இருந்தன. 

இந்தப் பிஞ்சு வயதில் எவ்வளவு கடுமையான தவம்! கிராம மக்கள் இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். இவ்வதிசய பாலயோகியை தரிசனம் செய்யச் சுற்றுப்புற கிராம மக்கள் ஷீரடியில் குழுமினர்.

பகலில் அவன் யாருடைய சங்கத்தையும் நாடவில்லை; இரவில் எவருக்கும் எதற்கும் பயப்படவுமில்லை. "எங்கிருந்து இந்த பாலன் வந்திருப்பான்?" இந்த ஒரு கேள்வி எல்லாருடைய மூளையையும் குடைந்தது. 

எவ்வளவு வசீகரமான முகம், எவ்வளவு சுந்தரமான உருவம்! பார்த்தாலே நமக்கு அகத்திலிருந்து அன்பு பொங்குகிறது. அவன் யாரையும் நாடிப் போகவில்லை. இரவும் பகலும் வெப்ப மரத்தின் அருகிலேயே இருந்தான்.

எல்லாரும் வியப்படைந்தனர்; எவ்வளவு அசாதரணமான பையன்! பிஞ்சு பிராயத்தினன். மனோஹரமான ரூபமுடைய்வன். எப்படி அவனால் வெட்ட வெளியில் இரவும் பகலும் இருக்க முடிகிறது?

வெளிப்பார்வைக்கு இளைஞன் தான். ஆனால், செய்கைகளில் அவன் சான்றோர்களையும் மிஞ்சினான்; வைராக்கியத்தின் பூரண அவதாரமாக ஜொலித்தான். எல்லாராலும் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. 

ஒருநாள் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. சில மனிதர்கள் கண்டோபா சாமி பிடித்து பெருமூச்சு விட்டுக் கொண்டு , ஆ ,  ஊ , என்று உரக்கக் குரலெடுத்து ஆடினார். ஜனங்கள் அவர்களைச் சில பிரச்சினைகள் (கேள்விகள்) கேட்க ஆரம்பித்தனர். 

"ஓ கண்டோபா தேவரே! பாக்கியசாலிகளான இப்பையனின் பெற்றோர்கள் யார்? எங்கிருந்து, எப்படி, இங்கு எவன் வந்தான்? நீங்களாவது இதற்கு விடை கண்டுபிடித்து எங்களுக்கு சொல்லுங்கள்" என்று ஒருவன் கேட்டார்.

கண்டோபா மொழிந்தார். "போ, ஒரு கூந்தாலி (கடப்பாரை) கொண்டுவா, நான் காட்டும் இடத்தில் தோண்டு, இவ்விடத்தில் உங்களுடைய கூந்தாளிகளால் தோண்டுங்கள். உங்களுக்கு இவ்விளவலைப் பற்றிய விவரங்களனைத்தும் கிடைக்கும்.