valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 January 2012

சீரடிக்கு சாயிபாபா இறங்கி வருதல் !

  இப்பொழுது,  எந்த வேலையாக ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்ய வேண்டும்; வேறு விதமாக சொன்னால், எந்தவிதமான சிரமமான காரியம் avarkalai மனித உருவம் எடுத்துக் கொண்டு இவ்வுலகிற்கு வரச் செய்கிறது என்னும் காரணத்தைக் கேளுங்கள். 
     
     கதை கேட்கும் மகா ராஜர்களே, உங்களுடைய பாத தூளியான எனக்கு, உங்களுடைய கவனத்தை வேண்டி கெஞ்சுவதில் வெட்கம் ஏதுமில்லை. 
   
    ஒரு ஞானியின் சரித்திரம் கிளிப்பூட்டக் கூடியது. அதிலும், இது சாயி கதாமிர்தம். விசுவாசமுள்ள பக்தர்களே இதை நிறையப் பருகி அஆனந்தம் அடையுங்கள். 
    வர்ணாசிரம தர்மத்தை பிராமணர்கள் மதிக்காத போதும், பிராமணர் அல்லாதவர்கள் பிராமணர்கள் ஆவதற்கு முயற்சி செய்யும் போது, கண்டிக்கும் நோக்கத்தில் மத குரு மார்கல் அவமதிக்கப் படும் போதும் , தர்ம சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட விதிகளை யாரும் மதிக்காதப் போதும், ஒவ்வொருவனும் தன்னை தானே பேரறிஞனாக நினைத்துக் கொள்ளும் போதும் இவ்வகையில் ஒருவனை ஒருவன் போட்டி போட்டுக் கொண்டு மிஞ்சுவதற்கு முயலும் போதும் யாரும் யாருடைய அறிவுரையும் கேட்க விரும்பாத போதும் ; -

      செய்யத் தக்க காரியம் - செய்யத் தகாத காரியம், thinnath தக்க பொருள் - thinnath தகாத பொருள் என்று பாராமல்  aasaara விதிகள் அலட்சியம் செய்யப் படும் போதும், பலர் முன்னிலையில் பிராமணர்களே மது அருந்தி மாமிச போஜனம் செய்யும் அளவிற்கு சீரழிந்து போகும் போதும், -

     அடித் தளத்து மக்கள்   இன்னல் பட்டு குமுறும் வகையில் அராஜகத்தையும் அடக்குமுறையையும் வலுவடையச் செய்யும் போதும், மத பிரிவுகளுக்கிடையில் துவேசம் என்னும் தீ தூண்டி விடப் படும் போதும் ஞானிகள் அவதாரம் செய்வதற்கான நேரம் பழுது விட்டது எனக் kollalaam. 

      விசித்திரமான லீலைகள் நிரம்பியதும் பரம பவித்திரமான கதைகளை கொண்டதுமான ஞானியின் சரித்திரத்தைக் கேட்பதால் நம்முடைய காதுகள் தூய்மை அடையட்டும்.

     அவரே எல்லா இந்திரியங்களையும் இயக்குபவர்; இக்காவியம் எழுதும் புத்தியையும் கொத்தார். அவருடைய உந்துதலாலேயே இக்காவியம் சுலபமாகவும் கிராமமாகவும் வெளிவருகிறது. 

     அவர் எல்லாருடைய இதயத்திலும் உறைகிறார். இப்பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் எங்கும் செல்கிறார். இவ்வாறிருக்க நான் கவலைப் படுவதே வீண் அன்றோ.?

     அவருடைய உன்னதமான குணங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தால் மனம் சலனமற்று உறைந்து போகிறது. எவ்வாறு வார்த்தைகள் அவரை விவரிக்க முடியும்?  திடமான மௌனம்தான் ஒரே வழி.

      மூக்கு மலரின் நறுமணத்தை முகர்கிறது; தோல் குளிரையும் வெப்பத்தையும்  உணர்கிறது; கண்கள் அழகைப் பார்த்து அனுபவிக்கின்றன. ஒவ்வொன்றும் தனக்கு வேண்டிய இன்பத்தை தேடிக் கொள்கிறது. 
     நாக்கு சர்கரையின் இனிமையை சுவைக்கத்தான் செய்கிறது. ஆயினும், நாவால் அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு விவரிக்க இயலாது. அதுபோலவே, சாயியின் அற்புதமான குணங்களை என்னால் விரிவாக சொல்ல முடியவில்லை. 

      சத் குருவே விரும்பும்போதுதான் தேர்ந்தேடுதவர்களுக்கு உணர்வூட்டி, விவரணத் திற்கு  அப்பாற்பட்டதை  சொற்பொழிவோடு மிக விரிவாகவே பிரவசனம் செய்ய வைக்கிறார்.