valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 March 2011

பாபாவின் தரிசனம்!

இதை எழுதுவதன் காரணம்:-
     கோதுமை மாவு அரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொத்து வியாதியை தடுத்து அழித்ததான சாய்பாபாவின் அற்புதத்தை கண்டோம். நான் சாயி பாபாவின் அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக்கிளர்ச்சியுடன் கேட்டிருக்கிறேன். அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்தது, சாயி பாபாவின் பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது, அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும், அறிவுருத்துவதுவாகவும்  இருப்பதுடன், அவர்களின் பாவங்களையும் நீக்குமாதலின் நான் சாயி பாபாவின் புனித வரலாற்றையும் அவருடைய அறவுரைகளையும் வரையத் தொடங்கினேன். ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்திரத்துக்கோ, பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று. அஃது உண்மையும் பெரியதுமான வழியே காண்பிக்கிறது.  
     இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி சாயி பாபாவைக் கேட்க முடியவில்லை. பாபாவின் நெருங்கிய அடியவருமான திரு. மாதவராவ் தேஷ்பாண்டே என்ற சாமாவிடம் பாபாவிடம் எனக்காக கேட்கும்படி வேண்டினேன். அவர் எனது எண்ணத்திற்காக பாபாவிடம் வாதாடினார். "இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்புகிறார். நான் ஒரு ஏழை பக்கிரி என்று கூறாதீர்கள். ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவி அளிப்பதாக கூறினால் அவர் எழுதுவார். அன்றித் தங்கள் திருவடி கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும் . தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது." சாயி பாபா இவ்வேண்டுகோளை செவிமடுத்ததுடன்  உருகி, உதி என்னும் திருநீறு  அளித்து ஆசீர்வதித்து  தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என் தலை மேல் வைத்து "இவர் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் ஆகிவற்றை தொகுத்து, குறிப்புகள் வைத்துக் கொள்ளட்டும். நான் இவருக்கு உதவி செய்வேன். அவர் ஒரு புறக் கருவியே ஆவார். என்னுடைய வரலாற்றை நானே எழுதி, என்னுடைய அடியவர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும். அவர்தம் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்து விடட்டும். வாழ்க்கையில் இங்ஙனம் செய்பவனுக்கே நான் மிகவும் உதவி புரிகிறேன். " என்று கூறினார். 
     "விவாதம்" என்னும் சொல்லானது ஹேமாட் பந்த் என்னும்   பட்டத்தை  நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க நான் கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது. அதையே இப்போது கூறுகிறேன். காகாசாஹேப் தீட்சித், நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்பு  கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஷிர்டிக்குப் போய் பாபாவின் தரிசனத்தை பெறும்படி வலியுறுத்தினார்கள் .   ஆயின் இடையில் கிளம்பிய எதோ ஒன்று என்னை ஷீரடிக்கு போக விடாமல் தடுத்தது. லோனவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான். எனது நண்பன் "வைத்தியமுறை" வேண்டுதல் முறைகளிலும் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார். ஆயின் காய்ச்சல் குறையவே இல்லை. முடிவாக தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் படுக்க வைத்தான். இதுவும் கூட பலனளிக்கவில்லை. இதைக் கேள்வியுற்றதும் "என் நண்பனின் மகனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்?  குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் ஷிர்டிக்குப் போக வேண்டும்.?" இம்மாதிரியாக எண்ணமிட்டு எனது ஷிர்டி விஜயத்தை ஒத்திப் போட்டேன். ஆயேன் தடுக்க முடியாதது நிறைவேறியே தீர வேண்டும். அக்தென் விஷயத்தில் பின்வருமாறு நடைபெற்றது. 
     பிராந்திய ஆபிசர் திரு சாந்தோர்கர் பஸ்சீனுக்கு சுற்றுலா  போய்க்கொண்டிருந்தார். தானாவிளுருந்து தாதருக்கு வந்து பஸ்சீனுக்கு செல்லும் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தார்.   இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது. அதில் அவர் ஏறி அமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் ஷிர்டி விசயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்து கொண்டார். எனது ஷிர்டி பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தி அளிக்க கூடியதாகவும் உர்ச்சாகமூட்டுவதாகவும் இருந்தது. எனவே நான் அன்றிரவே ஷீரடிக்கு புறப்படத் திட்டமிட்டேன். என்னுடைய சாமான்களை கட்டி முடித்து ஷீரடிக்கு புறப்பட்டேன். தாதருக்குப் போய் அங்கிருத்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு தாதருக்கு பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருந்தேன். வண்டி புறப்பட இருக்கும்போது ஒரு முஸ்லிம் பெரியவர் விரைவாக எனதுப் பெட்டிக்கு வந்தார். எனது முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு "போகும் இடம் என்ன?" என்று கேட்டார். நான் எனது திட்டத்தைக்  கூறினேன். பின்னர் அவர் என்னை தாதரில் நிற்காமல் போற்பந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட் மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுறுத்தினார். 
     இவ்வர்புதம் நிகழ்ந்திராவிடின் ஷீரடிக்கு திட்டமிட்டபடி அடுத்த நாளே போய்ச் சேராதிருப்பேன். பல இயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கி இருக்க  கூடும். ஆயின் அடுத்த நாள் காலை 9-30 மணிக்குள்ளாகவே ஷிர்டியை அடைந்தேன். திரு காகாசாஹேப் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இது 1910 ல் நிகழ்ந்தது. யாத்ரீக அடியார்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம்தான் இருந்தது. அது "சாடேவினுடைய வாடாவாகும்" குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம் பெற மிக ஆவலாய் இருந்தேன். மசூதியிநின்று திரும்பி வந்த பெரும் அடியவரான தாதாசாஹெப் நூலகர், சாயி பாபா வாடாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாய் பார்க்கலாம் என்று கூறினார். இதைக் கேட்ட உடனே நான் பாபாவிடம் ஓடி சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நானாசாஹெப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன். என்னுடைய புலன்களெல்லாம் திருப்தி அடைந்தன. நான் பசி தாகத்தை மறந்தேன். சாயி பாபாவின் பாதங்களைத் தொட்ட உடனே நான் வாழ்க்கையில் அதிகப் புத்துணர்ச்சி கொண்டவனாகவே மாறினேன். என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி சாயி பாபாவின் தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டவனாவேன். நீங்கள் சாயி பாபாவைக் கண்டுவிட்டீர்களானால் புற உலகு எல்லாம் சாயி பாபாவாகத் தோற்றமளிக்கும். 

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் வெற்றி கிடைக்கட்டும்!

                                                                                                             - இன்னும் வரும்