valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 November 2011

காவியம் எழுத பாபா சம்மதித்தது

இவ்வேளை (சரித்திரம் எழுதுவது) அவ்வளவு சாமானியம் இல்லையென்றாலும், மரியாதையுடனும் பக்தியுடனும், நான் அவருடைய ஆணையை சிரமேற் கொண்டேன்.  பாபாவைப் போன்ற   ஒரு தர்ம தாதா  (கொடைவள்ளல்) இருக்கும்பொழுது , நான் ஏன் ஒரு தாழ்மையான நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்?



     அவர் சில பக்தர்களை கோயில்கள் கட்ட வைத்தார். வேறு சிலரை நாம சங்கீர்த்தனம் (பஜனை) செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்தார்; சிலரை தீர்த்த யாத்திரை செல்ல வைத்தார்; என்னை எழுத வைத்தார்!

     அவர்களின் நடுவே நான் பாமரன். கருணைக் கடலும் தயா சாகரமுமான சாய் என்னிடம் என்ன நற்குணம் கண்டு என் மீது பிரியம் அடைந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. 

    ஆயினும், இதுவே குருவருள் செய்யும் அற்புதம். ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமும் ஆயினும் ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்து பழுத்துக் குலுங்கும் அன்றோ!

     வருங்காலத்தில் சிலர் ஆசிரமங்களை அமைப்பர்; சிலர் கோயில்கள் கட்டுவர்; சிலர் நதிக் கரைகளில் படித்துறையும் கட்டுவர். ஆனால், நாமோ ஒற்றையடி பாதையிலேயே சென்று சாயியின் சரித்திரப் பாடத்தைப் படிப்போம். 

     சிலர் பய பக்தியுடன் பாபாவுக்கு பூஜை செய்கிறார்கள். சிலர் அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்துவிடுகிறார்கள். என்னடைய மனமோ பாபாவின் பெருமைகளை பாட வேண்டுமென்று ஆவல் கொண்டது. 

     நான் எல்லாம் சிறிது சிறிது தெரிந்தவன்; எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவன் அல்லேன். இந்நிலைமையால், என்னுடைய தகுதியின்மை (சரித்திரம் எழுத) என்னமோ வெட்ட வெளிச்சம்! அப்படியிருக்க, நான் ஏன் இந்தப் பிரமாண்டமானதும் கடினமானதுமான பணியை ஏற்றுக் கொண்டேன்? 

     எம்முயற்சியும்  செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பேன் ஆனால், ஆக்ஞையை பங்கபடுத்திய குற்றத்திற்கு ஆளாவேன்.  ஆணையை நிறைவேற்றவேண்டு மென்று இறங்கலாமேன்றால், என்னால் சரிவரச் செய்து முடிக்கக் கூடிய காரியமாகத் தெரியவில்லையே!

    சமர்த்த சாயியின் நிஜமான நிலைமையை யார்தான் துல்லியமாகவும் முழுமையாகவும் விவரிக்க முடியும்? பக்த ஜனங்களுக்காக அவரே அருள்செய்து, விவரிக்கும் சக்தியை யாருக்காவது அளித்தால்தான் இது முடியும். 

     வார்த்தைகளுக்கு எட்டாத விஷயத்தை விவரிக்க நான் ஏன் முயல்கிறேன் என்று எவரும் யூகம் செய்ய நான் இடமேதும் கொடுக்க விரும்பவில்லை. 


    நான் பேனாவைக் கையிலெடுத்தவுடன் பாபா என்னுள் இருக்கும் 'நான்' எனும் கர்வத்தை அடக்கி, அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறாக, சரித்திரம் எழுதியவன் பெருமை அவருடையதே! 

      இதுவோ ஒரு முனிவரின் சரித்திரம்! அம் முனிவரே அன்றி  வேறு யார் இதை எழுத முடியும்? புரிந்துகொள்ள முடியாத பாபாவின் குணாதிசியங்களை புரிந்து கொள்ள முயல்வது, ஆகாயத்தை அனைத்துக் கொள்ள முயற்சி செய்வதற்கு ஒப்பானது. 

    இப்பொழுது மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்று, பாமரனாகிய எனக்கு விளங்க வில்லை. உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள தேவரீர் என் புத்திக்கு வலி காட்ட வேண்டும். 


     அவருடைய யுத்திகளை அவரே அறிவார்.எண்ணத்தால் கற்பனை செய்ய முடியாத அவருடைய மாயா சக்தி ஊமையையும் தேவ குருவைப் போன்று பேச வைக்கிறது. முடவனையும் மேரு மலையை தாண்ட வைக்கிறது. 

     நான் உம்முடைய பாதங்களின் தாசன். என்னை உதாசீனம் செய்து விடாதீர். என்னுடலில் சுவாசம் ஓடும் வரை உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும். 

     கதைக் கேட்க்கும் ஜனங்களே! இக் காவியத்தின் பிரயோஜனம் என்ன என்பதை புரிந்துகொண்ட விட்டீர்கள். சாயியே இக்காதையை எழுதச் செய்வார். தவறு, தவறு தம் பக்த கோடிகளின் மங்களத்திர்காக  இக்கதையை  தாமே எழுதுவார்.