valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 February 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்..!

சாயியின் புனிதமனான சங்கமே நமக்கு ஆகமமும் நிகமமும் ஆகும். அதுவே நமது வாழ்கையின் துன்பங்களையும் வலிகளையும் போக்கும்; எளிதான முக்தி மார்க்கமும் சாயியின் அண்மையே.

சமர்த்த சாயியயை தரிசனம் செய்வதே நமது யோக சாதனம்; அவருடன் சம்பாஷனை செய்வது பாவங்களை துடைத்துவிடும் உபாயம்.

அவருடைய பாதங்களை மென்மையாகப் பிடித்துவிடுவது என்பது கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமமாகும் திரிவேனியில் செய்யும் புண்ணிய ஸ்நானம். அவருடைய பாத தீர்த்தத்தை பருகுவது வாசனைகளை நிர்மூலமாக்கி விடும்.

அவருடைய ஆணை நமக்கு வேதவாக்காகும். அவருடைய பிரசாதமான ஊதியை (விபூதி) உட்கொள்வது, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் புண்ணியம் சேர்ப்பதாகும்.

சாயியே நம்முடைய பர பிரம்மம். அவரிடத்தில்தான் நமது ஆன்மீக மேனிலை இருக்கிறது. சாயியே ராமன்; சாயியே கிருஷ்ணன்; சாயியே நமது நிஜமான அடைக்கலம்.

சாயி இரட்டை சுழல்களுக்கு (இன்பம் / துன்பம் - விருப்பு / வெறுப்பு போன்றவை ) அப்பாற்பட்டவர். அவர் உல்லாசப்படுவதும் இல்லை; விசனப் படுவதும் இல்லை; அவர் தம்மிலேயே மூழ்கியவர். எக்காலத்தும் முடிவான உண்மையானவர்.

ஷிர்டியை மூலஸ்தானமாக வைத்துக்கொண்டு பாபாவினுடைய செல்வாக்கு பஞ்சாபிற்கும் கல்கத்தாவிற்கும் குஜராத்திற்கும் தக்கானதிற்கும் கர்நாடகத்திற்கும் - அகில இந்தியாவிற்கும் பரவியது.

ஷிர்டியிலிருக்கும் சாயிபாபாவின் சமாதி எல்லா சாதுக்களும் மகான்களும் கூடுமிடும். போகும் மார்க்கத்தில் ஒவ்வொரு காலடிக்கும் உலகபந்தங்கள் இற்று விழுகின்றன.

அவருடைய சமாதியை தரிசனம் செய்வதே பிறவிப்பயனை அளிக்கும்போது, வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்த மகானுபாவர்களின் பாக்கியத்தை நான் எவ்வாறு விவரிக்க முடியும்?

மசூதியின்மேலும் புட்டி வாடாவின் மேலும் (சமாதி மந்திர்) அழகான கொடிவரிசைகள் வானளாவி, பக்தர்களை 'வா, வா' என்று தம் கைகளால் கூப்பிடுவதுபோல பறக்கின்றன.

பாபா ஒரு மகான் என்கிற பெருமை கிராமம் கிராமமாகப் பிரசித்தி ஆயிற்று. சிலர் அவரிடம் நேர்த்திக்கடன் பிரார்த்தனை செய்துகொண்டு, சிரத்தையுடன் விரதம் இருந்து பயன்பெற்றனர். சிலர் தரிசனம் செய்வதாலேயே மனவமைதி அடைந்தனர்.

வருபவர்களுடைய மன ஓட்டம் எப்படி இருந்தாலும், எண்ணங்கள் சுத்தமாக இருப்பினும் கெடுதலாக இருப்பினும், தரிசனமாத்திரத்தில் அவருகளுடைய மனம் நிம்மதியையும் சாந்தியையும் அடைகிறது. மக்கள் தமக்குள்ளேயே ஆச்சரியமடைந்தனர்.

பண்டரிபுரத்து விட்டல் - ரகுமாயி தரிசனம் தரும் அற்புதமான அதே அனுபவம் பக்தர்களுக்கு பாபாவால் ஷீரடியில் அளிக்கப்பட்டது.

யாராவது இதை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட கருத்தாக நினைத்தால், அவர்களுடைய சந்தேகம் நிவர்த்தியாகுமாறு, தீவிர விட்டல்பக்தரான கௌலீபுவாவின் கூற்றைக் கேட்கட்டும்.

கௌலீபுவா ஒரு பண்டரிபுரத்து வார்க்கரி. (பக்திமார்காதின் ஒரு பிரிவு) பண்டரிபுரத்திற்கு முறை தவறாது வருடாவருடம் சென்றதுபோலவே பாபாவின் மீதிருந்த பக்தியால் ஷரிடிக்கும் வந்தார்.

சுமைதூக்க ஒரு கழுதையும் துணைக்கு ஒரு ஷிஷ்யனையும் அழைத்துக் கொண்டு, கௌளீபுவ "ராம்க்ரிஷ்ணஹாரி - ராம்கிருஷ்ணஹாரி " என்று ஜபம் செய்துகொண்டே புனிதப் பயணம் செய்தார்.

தொண்ணூற்றைந்து பிராயதினராகிய அவர், வருடத்தில் நான்கு மாதங்களை கோதாவரியின் கரையிலும், மீதி எட்டு மாதங்களை பண்டரிபுரத்திலும் கழித்தார். இவ்வாறு பயணம் செய்ததால், அவரால் பாபாவை வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் செய்யமுடிந்தது.

பாபாவின் முகத்தை பார்த்துப் பார்த்து அவர் பணிவுடன் கூவுவார். "இவரே பண்டரினாதரின் அவதாரம். தீனதயாளர்; அனாதைகளின் நாதர்! -

"காவி வேஷ்டி கட்டிவிட்டால் ஞாநியாகிவிட முடியுமா என்ன? முடியவே முடியாது. எலும்பு தேய உழைத்து குருதி தண்ணீராக மாறுமாறு பாடுபட வேண்டும். -

"ஒன்றுமில்லாமல் ஒருவன் எப்படி தேவனாக முடியும்! சாயி நடமாடும் பண்டரிநாதன். இவ்வுலகமே ஒரு மாயை என்று அசையாத நம்பிக்கையுடன் அதன் பின்னால் இருக்கும் தெய்வீகத்தை பார். "

பண்டரிநாதரை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடும் அந்த அடியாரின் கருத்தும் சொற்களும் மேற்கண்டவாறு இருக்கும்போது, பாமரனாகிய என்னுடைய அனுபவம் என்னவாக இருக்க முடியும்? கதை கேட்பவர்களே இதை அனுமானம் செய்து கொள்ளலாம்.

நாமச்மரனத்தில் மிகப் பிரீதியுடைய பாபா, "அல்லா மாலிக் - அல்லா மாலிக்" என்று இடைவிடாது உரத்து ஜபம் செய்தது மல்லாமல், அடிக்கடி தம் பக்தர்களை இரவும் பகலும் இடைவிடாது ஏழுநாள்கள் நாம ஜபம் அவர் முன்னிலையில் செய்ய வைத்தார்.

ஒருமுறை, தாசகனு நாம சப்த சாகம் செய்யும்படி ஆணையிட்டார். தாசகனு சொன்னார். "செய்கிறேன். ஆனால், விட்டல் எனக்குப் பிரசன்னாமாக வேண்டும்".