valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 January 2012

ஷிர்டி சாய் பாபா இறங்கி வருதல்

ஷிர்டி சாய் பாபா இறங்கி வருதல் 

     பேத பாவத்தை அழித்து பிரபஞ்சம் அனைத்தும் பிரம்மம் olir வதை கண்டு , நகரும் நகரா பொருள்கள் adangiya  சிருஷ்டியின் அழகை பிரித்து பார்க்க முடியாத பிரம்மத்தின் அழகாகவே paarkum kannotam. 

     இப் பிரபஞ்சமே நான் எனும் நான்தான். என்னும் ஞானம் உதித்த பின் கிடைக்கும் சுகத்தை evaraal விவரிக்க முடியும்.?

     அவ்வாறே பிரபஞ்சமும் தானும் ஒன்றே என்ற அனுபவம் வந்த பின், தன்னிடம் இருந்து வேறானது எதுவமே இல்லை என்று தெரிந்த பின், யாரை விரோத பாவமாக பார்ப்பது. யாரிடம் பயப்படுவது. 
     மங்கள் வேடாவில் தாமாஜி, சஜ்ஜன் கட்டில் , சமர்த raamathaas , வாடியில் நரசிம்ம சரஸ்வதி , athaip போலவே ஷீரடியில் சாய் நாதர். 

      ivvulaga வாழ்வு நடப்பதற்கும் கடப்பதற்கும் மிக கடினமானது. ஞானத்தின் உருவானவனே  ஜெயித்து சாந்தியை ஆபரணமாக அணிகிறான். 
     வைஷ்ணவர்களின் புகலிடமும் உதார குணாமுள்ளவர்களிலேயே , உதாரண மாணவரும் கர்ணனைப் போன்ற கொடையாளியுமான சாய், ஆன்மீக ஞானம் அருள்வதில் ரசமாவார். 

     அழியக் கூடிய பொருளில் ஆசை வைக்காது தமக்குள்ளேயே மூழ்கிப் போய், மனித வாழ்வின் உச்ச நிலையையே லட்சியமாக கொண்டவர். அவருடைய நிலையை எவ்வாறு வர்ணிக்க முடியும். ?

     அவருக்கு பூவுலக வாழ்வில் செல்வமும் இல்லை, தரித்திரமும் இல்லை. அவர் மேலுலக சுகங்களை நாடவும் இல்லை, வெறுக்கவும் இல்லை. அவருடைய அந்தரங்கம் கண்ணாடியைப் போல் நிர்மூலமாக இருக்கிறது. பேச்சோ எப்பொழுதுமே அமிர்த மழை. 

      யாருடையப் பார்வைக்கு அரசனும் ஆண்டியும் தரித்திரனும், தீணனும் சமமாக தெரிகின்றனரோ, யார் மான அவமானங்களை kadanthavaro அவரே எங்கும் வியாபித்திருக்கும் பகவான். 

     அவர் பொதுமக்களோடு சகஜமாக பேசிப் பழகினார். அவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவதாசிகள் நாட்டியத்தையும் அங்க அசைவுகளையும் பார்த்தார். 

     பாரசீக இசை வடிவ பாட்டுக்களை ரசித்து தலையையும் ஆட்டினார். ஆனால், அவருடைய சமாதி நிலை களைய வில்லை. 
     அல்லாவின் நாமமே அவருடைய முத்திரை. உலகமே இருளின் இருளில் தூங்கி கொண்டிருக்கும்போது அவர் வெளிச்சத்தில் விழித்திருந்தார். மற்ற ஜீவா ராசிகளுக்கு எது பகலோ அது அவருக்கு இரவாக இருந்தது. உள்ளுக்குள்ளே அவர் ஆழமான சமுத்திரம் போன்று அமைதியாக இருந்தார்.