valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 April 2012

சாந்த் பாடீல் அந்த அவளியாகப் போகும்போது, பக்கீர் கூப்பிடும் சப்தம் கேட்டது. "ஒய்! இங்கு வாரும், வாரும்! கொஞ்சம் சில்லும் பிடிதுவிட்டுப் போகலாம்! வந்து இந்த நிழலில் சிறிது நேரம் இளைப்பாறும்" என்று பக்கீர் அழைத்தார்.

பக்கீர் அப்பொழுது கேட்டார், "இந்தச் சேணம் எதற்காக?"  பாட்டீல் பதிலுரைத்தார். "என்னுடைய பெண்குதிரை தொலைந்து போய்விட்டது, ஐயனே!" பக்கீர் சொன்னார், "போம், அந்த ஓடைக்கரையில் தேடும்." பாடீல் அவ்வாறே தேடினார். ஆஹா! குதிரை உடனே அகப்பட்டு விட்டது.

சாந்த் பாடீல் வியப்பிலாழ்ந்து போய் தமக்குள்ளேயே பேசிக் கொண்டார். "சந்தேகமேயில்லை, நான் சந்தித்தது ஒரு அவலியாதான்! (முஸ்லீம் ரிஷி). இந்த அற்புதமான செய்கைக்கு ஈடிணையே இல்லை. அவர் ஒரு சாதாரணர் என்று எப்படிச் சொல்ல முடியும்?"

பிறகு, அவர் குதிரையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மாமரத்தடிக்கு வந்தார்.  பக்கீர் அவரைத் தமது பக்கத்தில் அமர வைத்தார். தம்முடைய கைகளால் ஒரு நெருப்பிடுக்கியை எடுத்தார்.

அடுத்து, பக்கீர் சிம்டாவை (நெருப்பிடுக்கி) பூமியில் செருகினார். அதே இடத்திலிருந்து எரியும் தணல் ஒன்றை பூமியிலிருந்து எடுத்தார். தணலைத் தம் கையிலிருந்த சில்லிமுக்குள் வைத்துவிட்டு சட்காவை எடுத்தார்.

ஏனெனில், சாபியை (கை  சுடாமல் இருப்பதற்காக  சில்லிமின் மீது சுற்றப்படும் ஈரத்துணி) நனைப் பதற்கு தண்ணீர் இல்லை. சட்காவால் பூமியின் மேல் அடித்தார். அடித்த இடத்திலிருந்து தண்ணீர் பெருகியது.

சாபியை நீரில் நனைத்து சில்லிமின் மேல் சுற்றிக் கொண்டார். சில்லிமில் சிறிது புகைபிடித்து விட்டு, சாந்த் பாடீலையும் புகை பிடிக்க வைத்தார். இதையெல்லாம் பார்த்த பாடீலுக்கு தலை சுற்றி மயக்கம் வரும்போல் இருந்தது.

 பாடீல் பக்கீரைத் தமது வீட்டிற்கு வருகை தந்து தமது இல்லத்தை புனிதப் படுத்துமாறு வற்புறுத்தினார். இம்மாதிரியான லீலைகள் புரிவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்த பக்கீர், பாடீலுக்கு இவ்வணுக் கிரகத்தைச் செய்தார்.

அடுத்த நாள், பக்கீர் பாடீலுடன் தங்குவதற்காக கிராமத்தினுள்ளே சென்றார். சிறிது காலம் அவருடன் தங்கினார். பிறகு ஷீரடிக்கு திரும்பி வந்தார்.

சாந்த் பாடீல் தூப்கேடாவின் கிராம அதிகாரி. அவரது மனைவியின் மருமகன் ஷிர்டியிலிருந்த ஒரு பெண்ணை மணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப் பட்டு இருந்தது.

மனைவியின் இந்த மருமகன் கலியாணம் செய்துகொள்ளும் பருவத்தை அடைந்தான். ஷிர்டி கிராமத்து பெண்ணை மணம் செய்துகொள்ளும் பாக்கியமும் பெற்றான்.!

ஆகவே, மாட்டு வண்டிகளுடனும் குதிரைகளுடனும் கலியாணக் கோஷ்டி, உரிய காலத்தில் ஷீரடிக்கு கிளம்பியது. பாபாவும் சாந்த்பாயின் மேலிருந்த பிரியத்தால் கோஷ்டியில் சேர்ந்து கொண்டார்.