valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 April 2012

ஷிர்டி சாயி சரிதம்

மேலும், அவருடைய பூர்வஜன்ம புண்ணியத்தின் சேமிப்பாலும் பாக்கியத்தாலும் தந்தையின் தருமநெறி தவறாத வாழ்வாலும் ஸ்ரீ சாயியை தரிசனம் செய்தார். 

தரிசனம் செய்ய வந்ததற்கு ஆதிகாரணம், விதியால் ஆணையிடப்பட்டது போலத் தோன்றும் அவருடைய கால் ஊனமே. இங்கிலாந்திற்குச் சென்றின்றுந்தபோது பாதம் தடுக்கிக் காலுக்கு ஊனம் ஏற்பட்டது. 

துரதிருஷ்ட வசமானது போலத் தெரியும் இன் நிகழ்ச்சி மிக்க சுபகரமானதும் அபூர்வமானதுமாகவும் மாறி, சாயியினுடைய சன்னதிக்கு அழைத்துச் சென்றது. அவருடைய நற்செயல்களின் பலனே அது. 

தீட்சிதர் சாந்தோர்கரை சந்திக்க நேர்ந்தது. அவரிடமிருந்து சாயியினுடைய புகழைக் கேள்விப்பட்டார். சாந்தோர்கர் சொன்னார், "சாயி தரிசனம் செய்யும் அற்புதத்தைக் கொஞ்சம் பாருங்கள்! உங்களுடைய கால் ஊனம் பளிச்சென்று மறைந்து விடும்!"

தீஷிதர் தமது கால் ஊனத்தைப் பெரிய குறைபாடாக கருதவில்லை. உண்மையான ஊனம் மனதில்தான் இருக்கிறது என்று சொல்லி, அதைக் கலைந்துவிடுமாறு பாபாவை வேண்டிக்கொண்டார். 

மனிதவுடல் என்பது என்ன? வெறும் மாமிசமும் எலும்புகளும் இரத்தமும் தோலில்அடங்கிய பைதானே ! நசிக்க கூடிய பொருள்களும் உலகியில் மூட்டைகளும் ஏற்றப்பட்ட பாரவண்டிதானே! கால் சிறிது ஊனமாக இருப்பது என்ன பெரிய நஷ்டம்?

முதன்முறையாக தீக்சிதர் 1909 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சாயியைப் புண்ணிய தரிசனம் செய்தார். 

அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறுபடியும் சாயி தரிசனம் செய்வதற்காக ஷிர்டி சென்றார். அம்முறை அவர் அங்கு அதிக நாட்கள் தங்க வேண்டுமென்பதை நிறைவாக் உணர்ந்தார். 

தம்முடைய கம்பனிப் பங்குகளில் இருபத்தைந்தை விற்று, யாத்திரிகர்களுக்கு உபயோகப்படும் வகையில் தகரக்கூரை வேய்ந்த ஒரு கொட்டகை கட்டலாம் என்று முதலில் எண்ணம் தோன்றியது. 

பிறகு, கொட்டகைக்குப் பதிலாக ஒரு சத்திரமே கட்டிவிடலாம் என்று முடிவு செய்து விட்டார். அடுத்த வருடமே, கட்டட வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு, சுபமாக ஓர் அடிக்கல் நாட்டப்பட்டது. 

அந்த நாள் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, பாபாவினுடைய அனுமதி பெறப்பட்டது. அதையே சுபசகுனமாக எடுத்துக் கொண்டு அடிக்கல் வேலை நிறைவேற்றப் பட்டது. 

அழைப்பிதல் கொடுத்தாலும் வருவார் என்று எதிர்பார்கமுடியாத தீட்சிதரின் சகோதரர், அதிருஷ்டவசமாக அந்த நாளில் அந்த சுப முகூர்த்தத்தில் அங்கு இருந்தார். 

ஸ்ரீ தாதாசாஹெப் காபர்டே, அதற்கு மிகவும் முன்னதாகவே தனியாக ஷீரடிக்கு வந்திருந்தார். வீடு திரும்புவதற்கு பாபாவிடமிருந்து அனுமதி பெறுவது சிரமமாக இருந்தது.