valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது!




 "உலகியல், ஆசைகள் பலவிதமானவை. ஆயினும் நான் யார் என்னும் சூக்குமம் புரிந்துவிட்டால், அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். -

    "நான் மனமோ புத்தியோ இந்திரியங்களோ இல்லை ; மகத்தான இப் பிரபஞ்சமும் இல்லை; தோன்றாத நிலையிலிருந்த பிரமாண்டமும் இல்லை. ஆரம்பமே இல்லாத பழம்பொருளான நான், சாக்ஷி மாத்திரமே. " - 

    " இவ்வாறாக குணங்களையும் இந்திரியங்களையும் கடந்து நிற்கும் என்னை புலனின்பங்கள் கவர்வது இல்லை. நான் இல்லாத இடமே இல்லை. நான் செயல் புரிபவனும் இல்லை. செயல் புரிய வைபவனும் இல்லை. -

     "மனமும் புத்தியும் இந்திரியங்களும் மனித உடலின் தூலமான கருவிகள் என்றுணர்ந்து விட்டால், பற்றற்ற மனப்பான்மை ஞானத்தை வெளிப்படுத்திக் கொண்டுவரும். -


      "மனிதன் தான் யார் என்பதை மறந்து போவதே மாயை. எல்லா இருப்புகளுக்கும் சாரமான என்னை அறிந்துகொள்வதே உள்ளிருக்கும் தூய பூரனாந்தத்தை  பெறுவதாகும். 

     "மனதின் தாவல்கள் அனைத்தும் எல்லாப் பிரியங்களையும் தசை திருப்பிவிடப் பட்ட என்னைப் போன்றவருக்கு அதுவே உண்மையான வழிபாடாகும். இந்த சிதானந்ததை அனுபவித்து சுத்த ஞானமில்லை. -

    "இந்த ஆத்மாவே முழு முதற் பொருள். சுத்த ஞானம் பிரம்மம்; ஆனந்தம் பிரம்மம். இந்த பிரபஞ்சமே ஒரு பிரமை; ஆதலால் அதைப் பற்றிய மாயைகளை உற்பத்தி செய்கிறது. உண்மையில் பிரம்மம் நானே. -

    " நான் வாசுதேவன்; ஓம் என்பதும் நானே; நான் நித்தியன்; சுத்தன்; புத்தன்; சிரத்தையுடனும் உண்மையான பக்தியுடனும் என்னை வழி படுவது சுய உயர்வு அளிக்கும். 

     "இவ்வாறாக என்னை யார் என்று தெரிந்துகொண்டு, யதார்த்தமாக பூஜை செய்ய வேண்டும். மேலும், முழு மனதுடன் என்னை சரணாகதி அடைந்து என்னுடன் கலந்து விட வேண்டும். "

     கடலுடன் கலந்துவிட்ட நதி திரும்பி வரமுடியுமா? கடல்தன்னை ஆலிங்கனம் செய்துகொண்ட பிறகு நதி என்னும் தனிப் பட்ட அடையாளத்தை வைத்துக் கொள்ள முடியுமா?

     எண்ணையில் நனைக்கப்பட்ட திரியானது, தீபத்தின் ஜோதியை சந்தித்தால், அதனுடைய ஒளி மிகுந்து ஜ்வாலையாக எரிகிறதன்றோ? அவ்வாறே, முனிவர்களின் பொன்னடிகளில் சேர்ந்து விட்ட நம் முனேற்றமும். -

  'அல்லா மாலிக்' என்ற உயிரூடத்தை தவிர வேறெதையும் பற்றி சிந்தனை செய்யாதவரும் சாந்தமானவரும் தேவைகளும் ஆசைகளும் இல்லாதவரும் சம தரிசனம் உடையவருமானவர் பிரமத்திலிருந்து வேறு பட்டவராக எவ்வண்ணம்  இருக்க முடியும்? 
 
    பற்றின்மை, அகந்தையின்மை, இரட்டை என்னும் மாயை இன்மை, தன்னுடையது என்று எதையும் வைத்துக் கொள்ளாத தன்மை, இந்த நான்கு தெய்வீகமான குணங்கள் எங்கு இருக்கின்றனவோ, அங்கு 'நான்' என்ற உணர்வு எப்படி இருக்க முடியும்?

     தாத்பரியம் என்னவென்றால் இம்மாதிரியான எட்டு தெய்வீக குணங்களும் ஸ்ரீ சாயியினுடைய உடலில் சம்பூர்ணமாக இருக்கும்பொழுது என்னுடையது என்னும் உணர்வுக்கு இடமேது.? அவரை விடுவிடு தனி நிலை அடையாளத்தோடு நான் எவ்வாறு இருக்க முடியும்? 

     என்னுடைய பிரக்ஞை, பிரபஞ்சத்தையே வியாபிக்கும் அவருடைய பிரக்ஞையில் ஒரு சிறு துளியே. ஆகவே, என்னுடைய அகங்காரத்தை சாயியின் பாதங்களில் சமர்பிப்பதே அவருக்கு செய்யும் முற்றும் முழுமையான சேவையாகும். 

      'எனக்கு சேவை செய்தும், என்னுடைய புகழை பாடியும், முழு மனதுடன் என்னை சரணாகதி அடைபவன் என்னுடன் ஐக்கியமாகி விடுகிறான்.' பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மத் பாகவதத்தில் அழுத்தமாக எடுத்துரைக்கிறார். 



    வண்டை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் புழு, அந் நினைவினாலேயே வண்டாக மாறி விடுகிறது. அது போலவே, சிஷ்யனும் தன்னுடைய குருவை நிஜமான பக்தியுடன் வழி பட்டு குருவைப் போலவே ஆகி விடுகிறான். 
    

     'போல' என்னும் வார்த்தையில் மறைமுகமாக பிரிவினைதொனி ஒலிக்கிறது.  இதை  குருவால் ஒருகணமும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் சிஷ்யனின்றி குருவேது?  சிஷ்யனை குருவிடமிருது பிரித்துப் பார்க்க முடியாது. 

     நான் யாரை வழி பட ஆணையிட்டேனோ அவரை சித்தரித்து விட்டேன். இங்கே எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சந்தர்பத்திற்கு புஷ்டி அளிப்பதாக கருதுவதால் அதை இங்கு விவரிக்கிறேன். 


     பாபாவின் குணாதிசயங்களால் கவரப் பட்டு ஒரு ரோகிலா ஷீரடிக்கு வந்தான். ஷீரடியில் பல நாட்கள் தங்கினான். அவ்வாறு தங்கியபோது அவனுக்கு பாபாவின் மீது அளவில்லாத பிரேமை வளர்ந்தது. 

    உடற்கட்டில் புஷ்டியான எருமைக் கடா போன்றிருந்த அவன், நடத்தையில் கட்டுப்பாடு இல்லாதவன்; பிடிவாதி; எவர் சொல்லும் கேட்க மாட்டான். பாதங்கள் வரை தொங்கும் கப்ணியை உடையாக அணிந்துகொண்டு வந்து, மசூதியில் தங்கி விட்டான்.

     அவன் விருப்பட்ட போதெல்லாம்  பகலிலும் இரவிலும் மசூதியிலோ சாவடியிலோ குரானின் ஸ்லோகங்களை உச்சமான குரலில் ஓதுவான்.

     சாய் மகாராஜ் என்னவோ சாந்தசொருபம்தான்.; ஆனால், கிராம மக்கள் சோர்ந்து போயினர். எல்லாருடைய தூக்கமும் கெட்டு போகும் ரீதியில் நடுநிசியிலும் அவன் போடும் இரைச்சல் தொடர்ந்தது. 
     பகல் நேரத்தில் சுட்டெரிக்கும்  வெயிலில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்து விட்டு வந்த கிராமத்து மக்கள், இரவில் சுகமான நித்திரையில்லாததால்  அவதிப் பட்டனர். இந்நிலைமை, மக்களை கடுமையாக எரிச்சல் அடைய செய்தது.