valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 March 2012

ஷிர்டி சாயி பாபா ..!

                                                           பாட்டு 

எக்காளம் ஊதுகிறது. கொம்பு வீரமுழக்கம் செய்கிறது; மணிகள் 
'தணதண'வென்று சப்திக்கின்றன.
 ஒளிரும் இடுப்புப்பட்டையுடன் சோப்தார் உமக்கு கட்டியம் கூறுகிறார்.
(10 )

ஆரத்தி சமயத்தில் உம்முடைய திவியாசனத்தில் அமரும்போது  நீர் விஷ்ணு; 
பிரதோஷகாலத்தில் துனியருகில் உட்காரும்போதோ, நீர் காமனை எரித்தவர் 
(சிவன்)   (11 )

மும்மூர்த்திகளின்  லீலைகளையும் உம்மிடம் பிரதிதினமும் அனுபவிக்கிறோம்;
ஓ பாபா சாயீ!  (12 )

அப்படியிருப்பினும் என் மனம் அனாவசியமாக அலைகிறது; 
அதை நிலைப்படுத்த வேண்டுமென்றே இப்பொழுது நான் பிரார்த்திக்கிறேன்; 
(13 )

அதமர்களில் அதமனும் ம்ஹாபாதகனுமான நான் உமது பாதங்களை 
 சரணமடைகிறேன். 
வந்தேன் தாஸ்கனு, ஓ குருராயா! மூன்று தாபங்களையும் நிவாரணம் செய்யும்.  (14 )

ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவத்தைக் கழுவித்தள்ளுவதர்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள்; ஆனால், கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக் கொள்ள, முனிவர்களின் பாதங்களை அடைக்கலமாக அடைகிறாள்.

சாயி பாதங்களை விட்டுவிட்டு, கங்கைக்கும் கோதாவரி க்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; முனிவரின் இந்த ஸ்தோத்திர த்தை கேட்டல் போதும்; சுவாரசியமான சாயியின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலோ கேட்டாலோ போதுமானது.

கோனாயீ , தெய்வப் பிராப்தியாக நாமதேவேரைக் குழந்தியாகப் பீமாரதி நதியில்  கண்டெடுத்தார்; தமால், கபீரை பாகீரதி நதியில் முத்துச் சிப்பிக்குள் கண்டெடுத்தார். 

அவ்வாறே ஸ்ரீ சாயீ நாதர் தம் பக்தர்களுக்காக, ஷிர்டி கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தினடியில் பதினாறு வயது பாலகனாகத் தோன்றினார். 

அவர், தோன்றும்போதே கனவிலும் புலனின்பங்கள் அறியாத பிரம்ம ஞானி, மாயையைத் துறந்தவர்; முக்தி அவருடைய  பாதங்களில் பணிந்து கிடந்தது.

எந்த தேசத்தில், எந்தப் பவித்திரமான வம்சத்தில், எந்தத் தாய்தந்தையர்க்கு பாபா பிறந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

தாய் யார்? தந்தை யார்? பூர்விகம் எவருக்கும் தெரியாது. எல்லாரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அயர்ந்து போனார்களே தவிர, யாருக்கும் சரியான விவரம் கிடைக்கவில்லை.