valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 April 2012

காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும் (ஷிர்டி சாய் சத் சரிதம் )

முன்பு சொன்ன காதையைத் தொடர்வோம். திடீரென்று சாய் காணாமற்போனது, மறுபடியும் சந்ட்த்பாடிலின் கோஷ்டியுடன் திரும்பி வந்தது, இவை பற்றி விவரங்களை கூறுகிறேன். கேளுங்கள். 

பூந்தோட்டம் போடுவதற்காக பாபா எவ்வாறு தாமே தண்ணீர் கொண்டுவந்தார் என்பது பற்றியும் கண்காகிஈர் போன்ற ஞானிகளைச் சந்தித்தது பற்றியுமான புனிதமான காதைகளைக் கேளுங்கள். 

பாபா சில காலம் ஷிர்டியிலிருந்து காணாமற் போயிருந்தார். மறுபடியும் முஸ்லீம் கனவானுடன் (சாந்த்பாடீல்) ஷீரடிக்கு வந்த கலியாணக் கோஷ்டியில் இந்த ரத்தினம் கண்டுபிடிக்கப் பட்டது. 

தேவிதாஸ், அதற்கு முன்பாகவே ஷீரடியில் வாழ்வதற்கு வந்து விட்டிருந்தார். பிறகு, ஜானகிதாஸ் கோஸாவியும் ஷீரடியில் வாழ வந்து சேர்ந்தார்.

இந்த விவரங்களை எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கிறேன். கேட்பவர்களே, பயபக்தியுடன் கேட்கும்போது ஆழ்ந்த கவனுமும் வையுங்கள். 

சாந்த் பாடீல் என்னும் பெயர் கொண்ட பாக்கிய சீலரான முஸ்லிம் ஒருவர், ஔவ்ரந்காபாத் ஜில்லாவைச் சேர்ந்த தூப்கேடா என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 

ஒரு முறை ஔவ்ரந்காபத் பிரயாணத்தில் அவருடைய பெண் குதிரை தொலைந்து போயிற்று. இரண்டு மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. "இனிமேல் அது கிடைக்காது!"

என்றெண்ணி, பாடீல் முற்றிலும் மனமுடைந்து போனார். குதிரையை இழந்தது பற்றி துக்கமும் வேதனையும் அடைந்தார். கடைசியில் அவர் குதிரையின் சேணத்தை முதுகின்மேல் போட்டுக் கொண்டு வந்த வழியே வீடு திரும்பினார்.

ஔவ்ரந்காபாதிலிருந்து 9 மைல்கள் கடந்து வந்தபின், பாதையோரத்தில் ஒரு மாமரம் இருந்தது. மாமரத்தினடியில், சாந்த் பாய் அந்த மனிதருள் மாணிக்கத்தைக் கண்டார்.

கப்னி ஆடை, கையில் தொப்பி, கமக்கதில் சட்கா -  புகையிலையைக் கசக்கி சில்லிமில் அடைத்துகொண்டிருக்கும்போதே ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.