valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 March 2011

குருவின் தேவை!

சூடான  விவாதம்:-
     குருவின் தேவையைப் பற்றி எனக்கும் ,  பாலாசாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் ஷீரடிக்கு வந்த தினத்தன்று நடைப் பெற்றது. "நம் சுதந்திரத்தை நாம் என் இழக்க வேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்?" என்று நான் விவாதித்தேன். "நாம் நம்முடைய கடமையை செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார் ?" ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் .  சோம்பேறியாகத் தூங்குவதை தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்து விட முடியும்?" இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். திரு. பாடே கருமத்து (அன்றி தலைவிதிக்காக) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும். பெரியவர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிரார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் ஒருவழியில் செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தை தள்ளி விடுக. பெருமையும், அஹங்காரமும் உமக்கு உதவாது". கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றும் வழக்கம் போல ஒரு முடிவும் காணப்படவில்லை. நாங்கள் களைப்படைந்துவிட்டதால் முடிவாக நான் மன அமைதியை இழந்தேன். வலிவான  "சரீர அபிமானம்", அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையைஎன கண்டேன். அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம். 

     பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகாசாஹெப்  தீட்சித்தை பாபா பின்வருமாறு வினவினார். "சாடே வாடவில் என்ன நடந்து கொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது? " என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமாட்பன்ட் என்ன கூறுகிறார்?" இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாடே வாடாவானது மசூதியிநின்று நல்ல தூரத்தில் இருக்கிறது. சர்வ வியாபியாயும், அகத்திளுருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்கனம் அறிந்திருக்க முடியும்? 

 முக்கியமானதும் ஞானம் மிளிர்வதுமான பட்டம்:- 
     சாயி பாபா என்னை ஏன் "ஹெமாட்பந்த்" என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன். இச்சொல் "ஹெமாத்ரிய பந்த்" என்ற வார்த்தையில் இருந்து திருத்தப்பட்டதாகும். இந்த ஹெமாத்ரிய பந்த் யாதவ அரச வம்சத்தை சேர்ந்த ராம்தேவ், மகாதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ் பெற்ற மந்திரியாவார். கல்வி, கேள்வி நிரம்பப் பெற்று நற்பண்புகள் நிறையப் பெற்றவர். ஆஅனால் நான் முற்றிலும் மாறுபட்டவன். அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர என்னதான். எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்க்காக சூட்டப்பட்டது என்று விளங்கவில்லை. ஆனாலும் அதுகுறித்து தீவிரமாக சிந்தித்து அது என் அஹங்காரத்தை அழித்து , பணிவாகவும் , அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன். விவாதத்தில் எனக்கு உள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப் பட்டதாகும்.
    எதிர்கால நிகழ்ச்சிகளை  உற்று நோக்கில் பாபாவினது சொற்கள் (திரு. தபோல்கரை ஹெமாத் பந்த் என அழைத்தது ) முக்கியமானதும்  தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும். ஏனெனில் மிகவும் புத்திசாலிதனமாக சாயி சமஸ்தானத்தின் நிர்வாகங்களை கவனித்து எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்து முக்கியமானதும்  ஆத்மார்த்தமான விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை , "நான்" தன்மையை சரணமிடுதல். தன்னையுனர்தல் போன்றவற்றை குறிக்கும் "சாயி சத் சரித்திரம்" என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.  
     குருவின் தேவைப் பற்றி:-
      ஹெமாட்பந்த் , பாபா இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பன பற்றி எவ்விதக் குறிப்பும் விட்டுவைக்க வில்லை. ஆனால் காகாசாஹெப் தீட்சிதர் இவ்விஷயத்தைப் பற்றி தனது குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார். ஹெமாத் பந்தின், சாயி சந்திப்பின் அடுத்த நாளில் பாபாவிடம் காகாசாஹெப் தீட்சித் சென்று தான் ஷிர்டியை விட்டுப் போக வேண்டுமா எனக் கேட்டார். பாபா "ஆம்" என்றார். பிறகு எங்கே போவது?  என யாரோ கேட்டார். பாபா "உயர மேலே" என்று கூறினார். வழி எப்படிப் பட்டது என்று அம்மனிதர் பாபாவிடம் வினவினார். பாபா கூறினார், அங்கேப் போவதற்கு பல வழிகள் உள்ளன. இங்கு இருந்தும் (ஷிரிடியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது. பாதை கடினமானது. புலிகளும், ஓநாய்களும் வழியுள்ள காடுகளில் உள்ளன. நான் (காகாசாஹெப்) கேட்டேன். "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்து சென்றால் என்ன? அதற்கு பாபா கூறினார் " அப்போது கடினம் இல்லை . புலி, ஓநாய் , படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்து செல்வார். வழிகாட்டி இல்லையென்றால், காடுகளில் நீ காணாமல் போகலாம். அல்லது படுகுழியில்  விழும் அபாயம் இருக்கிறது". இந்த நிகழ்ச்சியின் பொது திரு. தபோல்கரும் அறை அருகே இருந்தார். இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார். 

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!