valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இது, அஹங்காரத்தையும் வாசனைகளையும் மனவக்கிரங்களையும் உலகியல் வாழ்வில் ஏற்படக்கூடிய ஆசாபாசங்களையும் யுக்திகளையும் குயுக்திகளையும் அனைத்தையும் அவர் துனியில் ஆஹுதியாக இடுவது போலத் தோன்றியது.

கொழுந்துவிட்டெரியும் துனியில் கர்வம் பிடித்த ஞானத்தைக் கட்டைகளாகப் போட்டு, 'அல்லாமாலிக்' என்று சதா ஜபம் சொல்லி, அல்லாவின் கொடியை ஏற்றினார்.

மச்சொதி விசாலமான இடமா என்ன? இரண்டு தூலங்களுக்கு இடையே இருட்ன்ஹா சிறய இடந்தானே! இங்கேதான் அவர் உட்கார்ந்தார்; வளையவந்தார். எல்லாரையும் சந்தித்தார். உறங்கினார்; வசித்தார்.

தரை விரிப்புகள், திண்டுகள், எல்லாம் பக்தர்கள் பெருகப் பெருக இப்போது வந்து விட்டன. ஆனால், ஆரம்ப காலத்தில் பக்தர்கள் யாரும் பயமின்றி அவரை அணுக முடியவில்லை.

1912  ஆம் ஆண்டிலிருந்து எல்லா மாற்றங்களும் ஏற்பட்டன. அந்த வருடத்திலிருந்துதான் மசூதியின் உருவமே மாற ஆரம்பித்தது.

முட்டிக்கால் ஆழத்திற்குப் பள்ளம் பள்ளமாக இருந்த மசூதியின் தரை, பக்தர்களின் அன்பார்ந்த சேவையால் ஒரே இரவில் சரளைக் கற்கள் நிரவப்பட்டுத் தளமிடப்பட்டது.

மசூதியில் வசிக்க வருவதற்கு முன்னால், பாபா பக்கீர்கள் தாங்கும் இடமான தகியாவில் தங்கினார். அங்கு பல காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்.

இந்தத் தகியாவில் வசித்தபோதுதான் பாபா கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு கஞ்சிராவின் தாளத்திற்கேற்றவாறு நளினமாக நடனம் ஆடினார். இனிமையான குரலில் பாடினார்.

ஆரம்ப காலத்தில் சமர்த்த சாயி விளக்குகள் பல ஏற்றுவதில் மிக ஆவல் கொண்டிருந்தார். இதற்காகத் தாமே போய்க் கடைக்காரர்களிடம்  எண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தார்.

தகர டப்பாவைக் கையிலெடுத்துக் கொண்டு போய், மளிகைக் கடைகாரர்களைத் தாமே பிச்சை கேட்டு வாங்கிவந்து, அகல் விளக்குகளை நிரப்புவார்.

பிறகு, அவர் கோயிலிலும் மசூதியிலும் பிரகாசமாக விளக்குகளை ஏற்றுவார். இது சில நாள்களுக்கு தொடர்ந்து நடந்துவந்தது.

விளக்குகளைத் தொழுவத்தில் அவருக்கு ஆர்வம் அதிகம். விளக்குகளின் திருநாளான தீபாவளியைக் கொண்டாடுவார். துணியைத் துண்டுகளாகக் கிழித்து, முருக்கித் திரிகளாக்கி, மசூதியில் விளக்குகள் எரிப்பார்.

எண்ணையையப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் இலவசமாகத்தான் கொண்டுவந்தார். கடைகாரர்களின் மனதுள் கபடம் புகுந்து, 'போதும் இந்தச் சனியன் பிடித்த தொல்லை' என்று நினைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து பாபாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.