valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது...

பாபாவுக்கு இது ஒரு தொந்தரவாக இல்லாது இருந்திருக்கலாம். ஆனால், கிராம மக்களுக்கு இது ஒரு பெரும் பாடாக இருந்தது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ரோஹிலாவின் மேல் அவர்களுக்கு கடும் கோபம் விளைந்தது. 

     மரத்தில் உச்சியில் இருக்கும் பேயிக்கும்  கீழே இருக்கும் புளிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டவனைப் போல எவ்வளவு நாட்கள் அவர்கள் பொறுமையாக துன்பப்பட முடியும்? இரவு பகலாக அமைதியை தாக்கி எரிச்சலூட்டும் இரைச்சல் தொடர்ந்தது. பெரும் கவலைக்கிடமாகவும்  ஆகியது. 

     ரோஹிலா ஏற்கெனவே ஒரு கோபக்காரன். அது போதாதென்று அவனுக்கு பாபாவிடமிருந்து பெரும் ஊக்கம் கிடைத்தது. ஆகவே, வந்தபோது இருந்ததை விட அதிகமாக கட்டுக் கடங்காதவனாக ஆகிவிட்டான். 

     கர்வம் மிகுந்து திமிர்  பிடித்து கிராம மக்களை வசை மொழியில் திட்ட ஆரம்பித்தான். அவர்களை லட்சியம் செய்யாது அளவின்றி ஆர்ப்பாட்டம் செய்தான். இதனால், கிராமமே அவனை விரோத பாவனையில் எதிர்த்தது.

     கருணையின் சிகரமானவரும் சரணாகதி அடைந்த எவரையும் காப்பவருமான  சாயீயை நோக்கி கிராம மக்கள் தீனமான குரலில் முறையிட்டனர். 


   ஆனால், பாபா அவர்களை லட்சியம் செய்யவில்லை. எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, கிராம மக்களை, "ரோஹிலாவை இம்சை செய்யாதீர்கள். அவன் எனக்கு மிகப் பிரியமானவன்" என்று சொல்லி கண்டித்தார்.
     இந்த ரோஹிலாவின் மனைவி ஒரு நடத்தை கெட்டவள். அடங்காப் பிடாரியும் துஷ்டியையும் கூட. அவனை ஏமாற்றி விட்டு என்னிடம் வந்து விட ஆவலாக இருக்கிறாள். -

    அடக்கமும் நாணமும் அற்ற இந்த பாவ ஜென்மா விரட்டி அடிக்கப் பட்டாலும், பலவந்தமாக திரும்பி வந்து விடுகிறாள். -

    "ரோஹிலா இரைச்சலை நிறுத்தினால் போதும், அதையே நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு புகுந்து விடுகிறாள். மறுபடியும் உரக்க குரான் ஓத ஆரம்பித்தால், அவனை விட்டு ஓடி விடுகிறாள். அவள் ஓடி விட்ட பிறகு, ரோஹிலாவின் மனமும் வாக்கும் உடலும் தூய்மை அடைகின்றன. எனக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன. 
     
      "ரோஹிலாவின் வழிக்கு போகாதீர்கள். அவன் இஷ்டப் படி முழு குரலில் குரான் ஒதட்டும். அவன் இல்லாமல் இரவை நான் நிம்மதியாக கழிக்க முடியாது. அவன் எனக்கு சௌக்கியத்தை அளிக்கிறான். -

    "அவன் இவ்வாறு இரைச்சல் இடுவது எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது. இந்த விதத்தில் ரோஹிலா எனக்கு உபகாரி. மிகுந்த சுகத்தை அளிப்பவன்."

     "அவனுடைய விருப்பபடி கத்தட்டும். அதுதான் எனக்கும் இஷ்டம். இல்லையெனில், அந்த துஷ்டியான ரோஹிலி எனக்குக் துன்பம் கொடுத்து விடுவாள். -

    "அவனாகவே சோர்ந்து போய் கத்தலை நிறுத்தி விடுவான். அப்பொழுது உங்களுக்கும் காரிய சித்தி ஆகும். அந்த துஷ்டையும் என்னுடன் போராட மாட்டாள். "-

     சாயி மகாராஜா இவ்வாறு சொல்லிவிட்ட பிறகு, வேறு வழியில்லை. மேலும்,  பாபாவுக்கு ஏதும் மன சனசலம் இல்லை எனும்போது நாம் புகார் செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது.
       ஏற்கனவே, ரோஹிலாவிற்கு அபரிமிதமாக உற்சாகம் இருந்தது. இப்போது, பாபா வேறு அவனுக்கு ஊக்கம் அளித்துவிட்டார். கேட்கவேண்டுமா! தொண்டை காய்ந்து போகும் வரை வரம்பின்றி கத்தி தீர்த்தான். 

     மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்  போனார்கள். பாபாவின் மன்னிக்கும் குணம் தான் என்னே?  சாதரணமாக மண்டையை உடைக்கும் தலைவலியை கொடுக்கக் கூடிய செய்கை அவரை ஆழமாக ஈடுபாடு அடையச் செய்தது. 

     ஓ...! எவ்வளவு பயங்கரமான இரைச்சல். அவனுடைய தொண்டை கிழியாமல் இருந்தது பெரிய ஆச்சரியம். பாபாவை பொறுத்தவரை அவருடைய ஆக்ஞை இதுதான். "ரோஹிலாவை பயமுறுத்தாதீர்கள்."

      யோசித்துப் பார்த்தால், ரோஹிலா ஒரு பைத்தியக்காரன். ஆயினும், பாபாவின் மீது அவனுக்கு எவ்வளவு பய பக்தி. அவனுடைய மத கட்டுப் பாடுகளின் படி நேரம் தவறாது, முறை தவறாது எவ்வளவு மகிழ்ச்சியுடன் குரான் ஓதினான். 

     குரல் இனிமையாக இருந்தால் என்ன.? கடூரமாக இருந்தால் என்ன? ஒவ்வொரு முறை உணர்வு பெரும் போதும் அல்லா நாமத்தை உரக்க ஓத ஆரம்பித்து விடுவான்.

     இயற்கையாகவே அமைந்த கர கரப்பான குரலில், நேரம் தவறாது இடை விடாதும் 'அல்லா- ஹு -அக்பர்' என்று உரக்க கூவி குரான் தோத்திரங்கள் ஓதினான்.

     ஹரி நாமத்தின் மீது விருப்பமில்லாதவர்களின் உறவு, அளிக்க கூடிய மாசு பற்றி பயந்த பாபா, "அல்லாவின் புகழை விருப்பமுடன் பாடும் இந்த ரோஹிலாவை காரணம் ஏதுமின்றி ஏன்விரட்டி அடிக்க வேண்டும்.?" என்று சொல்லிவிட்டார். 

      "எங்கே பக்தர்கள் என்னடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு நான் கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்." என்பது இறைவனுடைய வாக்கு. இவ்வுண்மையை    நிரூபணம்  செய்யும் வகையில் பாபா இந்த அனுபவத்தை ஷீரடி வாசிகளுக்கு கொடுத்தார்.


     ரோஹிலா பிச்சை எடுத்து பிழைத்தவன். சேர்த்து உன்ன காய் கறி இருந்தோ இல்லாமலோ காய்ந்த ரொட்டியை தின்றவன். சில நாள்களில் அதுவ்மின்றி பட்டினி கிடந்தவன். அவனுக்கு ஏது மனைவி?  இல்லாத மனைவி எவ்விதம் பாபாவை அணுகுவாள் ?


     ரோஹிலா ஓர் ஆண்டி. ஒரு பைசாவே அவனுக்கு பெரும் செல்வம். அவனுக்கு எப்படி கல்யாணம், மனைவி எல்லாம்.? மேலும், பாபா ஒரு பால பிரமச்சாரி அல்லரோ ! முழு கதையும் பாபாவின் கற்பனை என்பது நன்கு தெரிந்ததே. 

     ரோஹிலா எவ்வளவு வேண்டுமானலும் கூச்சமிடட்டும். கலிமாக்களை
செவிமடுப்பதில் பாபாவுக்கு பரம சந்தோசம். இரவும் பகலும் கேட்டார். தூக்கம் அவருக்கு விஷம் அன்றோ !