valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது..!

நகரும் நகராப் பொருள்களுடன் கூடிய இவ்வுலகமனைத்தும் இறைவனின் வெளிப்பாடே. ஆனால், பரமாத்வான இறைவன் இப் பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டவன். 

     இறைவன் இவ்வுலகத்திலிருந்து வேறுபட்டவன் அல்லன். ஆனால், இப் பிரபஞ்சம் இறைவனிடமிருந்து வேறுபட்டது ! சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்தே இவ்வுலகம் நகரும் நகராப் பொருள்களால் நிறைந்திருக்கிறது. ஈதனைதிற்கும் இறைவனே ஆதாரம். 

      சிலை, பலிபீடம் போன்ற எட்டு இடங்கள் இறைவனைப் பூஜை செய்ய உகந்த ஸ்தானங்கலாகும்; இவையனைத்திலும் குருவின் திருவடிகளே மிகச்சிறந்தவை. 


     பூரண பிரம்மமான ஸ்ரிக்ரிஷ்னரே, குரு சந்தீபனியின் பாதங்களை சரணடைந்தார். அவர் கூறியிருப்பதாவது, "சத் குருவின் நினைவில் நீ மூழ்கினால், நாராயணனாகிய நான் சந்தோஷமடைகிறேன். -

     "என்னை வழிபடுவதை விட, சத்குருவை நீ வழிபடுவதை நான் ஆயிரம் மடங்கு விரும்புகிறேன்". சத்குருவின் சிறப்பும் மகிமையும் வானளாவியான. 

   குரு வழிபாட்டிற்கு புறங்காட்டுபவன், அபாகிவானும் பாவியுமாவான். ஜனன மரணச் சுழற்சியில் மாட்டிகொண்டு  இன்னல்பட்டே  தீருவான். ஆன்மீக முன்னேற்றத்தின் வாய்ப்பை பாழடித்து விடுகிறான். 


    மறுபடி ஜனனம், மறுபடி மரணம் ! இவ்விரண்டிற்குமிடையில் அலைவதே நமது விதியாகிவிட்டது. ஆகவே, நாம் குருவின் சரித்திரத்தைச் செவிமடுப்போம். நிஜமான விடுதளையச் சம்பாதிப்போம். 

    முனிவர்களின் வாயிலிருந்து சஹாஜமாக வெளிவரும் கதைகள் நம்முடைய அஞ்ஞான மூட்டையின் முடிச்சை அவிழ்த்து, பெரிய துன்பங்கள் வரும்போது தாரக மந்திரமாக அமையும். ஆகவே, இக் காதைகளை இதயத்தில் சேர்த்து வைப்போம். 

    எதிர்காலத்தில், எவ்வித சக்திகள் எவ்விதமான சோதனைகளைக் கொண்டு வரும் என்பதை நாம் அறிவோம். ஏனெனில், ஈதனைத்தும் அல்லாவின் லீலையாகும்; பிரேமையுடைய பக்தர்கள் வெறும் பார்வையாளர்களே! 


      ஞான பலத்தைப் பெற்றிராமலேயே, நான் சகலசக்திகளும் வாய்ந்த சத்குருவைப் பெற்றேன். இது தெய்வபலதால் நடந்தேன்றா ஏற்றுக்கொள்வது? இல்லவேயில்லை! இதுவும் அவரது லீலைகளில் ஒன்றே! 


      இக் காவியத்தின் பிரயோஜனம் என்னவென்று சொல்லிவிட்டேன். அவருடைய உறுதிமொழியையும் விவரமாக சொன்னேன். இந்த சந்தர்பத்தில், பாபா அவருடைய தன்மையைப் பற்றியும் தம்மை எப்படி வழிபடுவது என்பது பற்றியும் வலி காட்டினார். 
      கதை கேட்பவர்களே! அடுத்த அத்தியாயத்தில் ஸ்ரீ சமர்த  சாய் எப்படி ஷீரடியில் முதன்முறையாகத் தோன்றினார் என்பது பற்றி கேட்பீர்கள். 

      இளைஞர்களும் முதியவர்களும் அனைவரும் உலகியல் சிந்தனைகளைச்  சிறிது நேரம் ஒதுக்கிவைத்துவிட்டுக் கபடமின்றி விசுவாசத்துடன் சாயியின் அசாதர்ணமான் கதையைக் கேளுங்கள். 
      இறைவனுடைய அவதாரமான சாயி நிர்விகாரமானவராக இருப்பினும், மாயையின் பிடிக்கு உட்பட்டு, உலகியல் வாழ்வில் ஒரு சாதாரண மனிதனைப் போலவே பல வேதங்கள் பூண்டு நடித்தார்.

     அவருடைய  பாதங்களை "சமர்த்த சாய்" என்னும் குறு மந்திரத்தால் அடைந்துவிடலாம். பக்தர்களைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவிக்கும் நூலை இழுப்பவருடைய காதைகள், மிகத் தூய்மையானவை; புனிதமானவை.


      பொளிப்பாகச் சொன்னால், சாயியினுடைய சரித்திரம் புனிதமானது; இதைப் படிப்பவரும் கேட்பவரும் புண்ணியசாலிகள்; அவர்களுடைய அந்தரங்கம் சுத்தம் ஆகும். 
      இக் கதைகள் பிரேமையுடன் கேட்கபட்டால், இவ்வுலகத் துன்பங்கள் அழியும்; கிருபாநிதியான சாய் திருப்தியடைவார்; சுத்த ஞானம் தோன்றும். 

      மசமசப்பு, தாவும் மனம், புலனின்பங்களிலேயே மூழ்கிப் போதல் - இவையனைத்தும் கவனத்துடன் கேட்பதற்கு தடங்கல்கலாகும். இத் தடங்கல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்; கேள்வி சந்தோஷத்தை அளிக்கும்.

      விரதங்கள் வேண்டா, விரத முடிவுவிலாகளும் வேண்ட, உபவாசம் வேண்டா , உடலை வர்தவும் வேண்டா. புண்ணிய தளங்களை தரிசனம் செய்வதற்கான பிரயாணமும் தேவையில்லை; இச் சரித்திரத்தை கேளுங்கள். அதுவே போதுமானது. 


      நம்முடைய பிரேமை கள்ளமில்லாததும் விடாப்பிடியானதுமாக இருக்க வேண்டும். பக்தியின் சாரத்தை கிரஹித்துக் கொள்ள வேண்டும்; விஷமமான அக்ஞானத்தை நாசம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான், நமக்கு மனிதப் பிறவியின் உச்ச இலக்காகிய மோஷம் சித்திக்கும். 

     பிற சாதனைகளில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை; பழைய வினைகளும் புதிய வினைகளும் சுவதேயின்றி அழிந்துவிட, சாய் சரித்திரத்தைக் கேட்போமாக!

      பேராசை பிடித்த செல்வந்தன் தான் எங்கிருந்த போதிலும் மறைத்துவைத்த புதையளைபற்றியே நினைத்துக் கொண்டிருப்பான். அதேவிதமாக, சாயி நம்முடைய இதயத்தில் வீற்றிருக்கட்டும்.

   எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயே பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், "இக் காவயியத்தின் பிரயோஜனம் - காவியம் எழுத பாபா சம்மதம் அளித்தது " என்னும் மூன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத் குரு சாய் நாதருக்கு சமர்ப்பணம் ஆகட்டும்...
   

Thursday 15 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது ...!

கல்மாக்கள் அளிக்கும் ஞானம் எங்கே? கிராம மக்களின் சிறிய தாபங்களும் சொத்தல் குற்றச் சாட்டுகளும் எங்கே? கிராம மக்களுக்கு ஒரு பாடம் புகட்டவே பாபா இந்த நாடகம் ஆடினார். 

     "இறைவனின் நாமத்தில் காதல் கொண்ட காரணத்தால், ரோஹிலா எனக்கு வேண்டியவன்." என்ற தம்முடைய அபிப்பிராயத்தை எல்லோரும் நன்கு புரிந்துகொள்ளும்படி செய்தார். என்னே பாபாவின் சக்தி! 

    காண்பவனிலும் காணும் செயலிலும் காணப்படும் பொருளிலும் இறைவனைக் காண்பவர்க்கு பிராமணனும் படாணனும்  வேறெவனும் ஒருவனே..

     ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது பாபா என்ன திருவாய் மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள். 

     "நீங்கள் எங்கிருந்தாலும் சரி. என்ன செய்தாலும் சரி. இதை நன்கு ஞாபகம், வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக விவரமாக தெரியும். 

      "நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன் ஒவ்வொருடைய இதயத்திலும் உறைபவன், எங்கும் செல்பவன். நான் எல்லோருக்கும் சுவாமி. "-


      "உயிருள்ளவையும் உயிரில்லாதவையும்  நிறைந்த இந்த சிருஷ்டியில் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன். தனியாகவும் இருக்கிறேன். இது அனைத்தும் தெய்வீக பொம்மலாட்டம். சூத்திரதாரி நானே. 

      "நான் இப்பிரபஞ்சதிற்கும் அதற்குள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய். முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே. இந்திரியங்களை தூண்டி விடுபவனும் நானே; நானே இப்பிரபஞ்சந்தை படைப்பவனும் காப்பவனும்  அழிப்பவனுமாம்;"-

    "எவன் தன்கவனத்தை  என் மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் பட மாட்டான். ஆனால், என்னை மறந்து விடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சௌக்கடி படுவான். -

    "ஈயாயினும்  எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்கு தெரியும் இந்த உலகம் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருட்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜ ரூபமே.

     "எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவாரசியமான சூசகம் இது! இறைவனுக்கும் முனிவர்களுக்கும் பேதமே இல்லை. உலகத்தை உய்விக்கவே அவதாரம் நிகழ்கிறது. 

    குருவின் பாதங்களில் அமிழ்ந்து போக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளை பாட வேண்டும். அல்லது குருவின் கதைகளை காலட்சேபம் செய்ய வேண்டும். அல்லது குருவின் கதைகளை பக்தியுடன் கேட்க வேண்டும். 
     சாதகன் குருவின் கதைகளை கேட்கும்போது, கேட்பவனும் கேள்வியும் ஒன்றாகி, மனம் யோகா நிலையை  அடையும். 

     தினசரி நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக காதில் விழும் குருவின் கதை, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு நன்மை பல செய்யும். இதில் கேட்டவருடைய முயற்சி எதுவுமில்லை. 

     இப்படி இருக்கும் பொழுது, பக்தி பாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு ஆன்மீக லாபம் கிடைக்கும். கதை கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இது பற்றி சிந்திக்க வேண்டும். 
      இந்த முறையில், குருவின் திருவடிகளின் மேல் பிரேமை உண்டாகும். படிப்படியாக மிக உயர்ந்த ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமும் நிஷ்டையும் தேவை இல்லை. வாழ்க்கையே பரம மங்கலமானதாக மலரும். 

      மனம் இவ்வாறு கட்டுப் படும்பொழுது, கதைகளை கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாகும்; புலனின்ப கட்டுகள் தாமே உடைந்துவிடும். பரமானந்த அனுபவம் ஏற்படும்.

      பாபாவினுடைய இனிமையான வார்த்தைகளை கேட்டபின், நான் மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதை விட்டுவிட்டு, குருவின் சேவையில் மாத்திரமே என்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என தீர்மானம் செய்து விட்டேன்.  


    இருப்பினும், என் மனத்தில் ஏக்கமும் சலசலப்பும் இருந்தது. அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும் என்றுதான் பாபா பதில் சொல்லியிருந்தார். அதற்க்கு நிரூபணம் ஏதாவது கிடைக்குமா?
      பாபாவினுடைய சொல் நிறைவேறாது போவதென்பது சாதாரணமாக நடக்கும் காரியம் அன்று. ஆகவே, நான் மறுபடியும்  மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதில் மாட்டிக கொள்ளலாம்; ஆனால், அது எனக்கு வாஸ்தவமான நன்மை எதையும் தரப் போவதில்லை. 

     அண்ணா சிஞ்சநீகரின் சொந்த உந்துதலாலேயே கேட்கப் பட்ட கேள்வி எனினும், நான் இன்னுமோர் உத்தியோகத்தை விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. இந்த விருப்பம் முன் வினையால் ஏற்பட்டதன்று. 


     இன்னுமொரு உத்தியோகம் கிடைக்கவேண்டுமென்று எனக்கும் உள்மனதில் ஓர் ஆசைதான். மருந்தை குடிக்கக் கொடுக்கும்போது வெல்லக் கட்டியைக் காட்டி ஆசைக் காட்டு வது போல சாயியும் எனக்கு ஆசை காட்டி விட்டார்.      

     வெல்லம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் மருந்தை குடித்துவிட்டேன்.; திருப்தி அடைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். எதிர்பாரதவிதமாக எனக்கு உத்தியோகம் கிடைத்தது. திரவிய லாபத்தில் எனக்கிருந்த ஆசையால் அதை ஏற்றுக் கொண்டேன். 

     ஆனால், இனிப்புபண்டமாயினும் எவ்வளவு தான் தின்ன முடியும்? வெல்லமும் பிடிக்காத நிலையும் வந்துதானே தீரும்.! அச் சமயத்தில் பாபாவினுடைய அமுதமான உபதேச மொழிகள் மிகச் சிறந்த சுவையை அளித்தன. 

  
      கிடைத்த உத்தியோகம் நீண்ட காலம் ஓட வில்லை. வந்த வழியே போய்விட்டது. உண்மையானதும் நிரந்தரமானதுமான சௌக்கியம் அளிக்கும் வகையில், பாபா என்னை பழைய நிலைக்கே திரும்ப கொண்டு வந்தார்.

Thursday 8 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது...

பாபாவுக்கு இது ஒரு தொந்தரவாக இல்லாது இருந்திருக்கலாம். ஆனால், கிராம மக்களுக்கு இது ஒரு பெரும் பாடாக இருந்தது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ரோஹிலாவின் மேல் அவர்களுக்கு கடும் கோபம் விளைந்தது. 

     மரத்தில் உச்சியில் இருக்கும் பேயிக்கும்  கீழே இருக்கும் புளிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டவனைப் போல எவ்வளவு நாட்கள் அவர்கள் பொறுமையாக துன்பப்பட முடியும்? இரவு பகலாக அமைதியை தாக்கி எரிச்சலூட்டும் இரைச்சல் தொடர்ந்தது. பெரும் கவலைக்கிடமாகவும்  ஆகியது. 

     ரோஹிலா ஏற்கெனவே ஒரு கோபக்காரன். அது போதாதென்று அவனுக்கு பாபாவிடமிருந்து பெரும் ஊக்கம் கிடைத்தது. ஆகவே, வந்தபோது இருந்ததை விட அதிகமாக கட்டுக் கடங்காதவனாக ஆகிவிட்டான். 

     கர்வம் மிகுந்து திமிர்  பிடித்து கிராம மக்களை வசை மொழியில் திட்ட ஆரம்பித்தான். அவர்களை லட்சியம் செய்யாது அளவின்றி ஆர்ப்பாட்டம் செய்தான். இதனால், கிராமமே அவனை விரோத பாவனையில் எதிர்த்தது.

     கருணையின் சிகரமானவரும் சரணாகதி அடைந்த எவரையும் காப்பவருமான  சாயீயை நோக்கி கிராம மக்கள் தீனமான குரலில் முறையிட்டனர். 


   ஆனால், பாபா அவர்களை லட்சியம் செய்யவில்லை. எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, கிராம மக்களை, "ரோஹிலாவை இம்சை செய்யாதீர்கள். அவன் எனக்கு மிகப் பிரியமானவன்" என்று சொல்லி கண்டித்தார்.
     இந்த ரோஹிலாவின் மனைவி ஒரு நடத்தை கெட்டவள். அடங்காப் பிடாரியும் துஷ்டியையும் கூட. அவனை ஏமாற்றி விட்டு என்னிடம் வந்து விட ஆவலாக இருக்கிறாள். -

    அடக்கமும் நாணமும் அற்ற இந்த பாவ ஜென்மா விரட்டி அடிக்கப் பட்டாலும், பலவந்தமாக திரும்பி வந்து விடுகிறாள். -

    "ரோஹிலா இரைச்சலை நிறுத்தினால் போதும், அதையே நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு புகுந்து விடுகிறாள். மறுபடியும் உரக்க குரான் ஓத ஆரம்பித்தால், அவனை விட்டு ஓடி விடுகிறாள். அவள் ஓடி விட்ட பிறகு, ரோஹிலாவின் மனமும் வாக்கும் உடலும் தூய்மை அடைகின்றன. எனக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன. 
     
      "ரோஹிலாவின் வழிக்கு போகாதீர்கள். அவன் இஷ்டப் படி முழு குரலில் குரான் ஒதட்டும். அவன் இல்லாமல் இரவை நான் நிம்மதியாக கழிக்க முடியாது. அவன் எனக்கு சௌக்கியத்தை அளிக்கிறான். -

    "அவன் இவ்வாறு இரைச்சல் இடுவது எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது. இந்த விதத்தில் ரோஹிலா எனக்கு உபகாரி. மிகுந்த சுகத்தை அளிப்பவன்."

     "அவனுடைய விருப்பபடி கத்தட்டும். அதுதான் எனக்கும் இஷ்டம். இல்லையெனில், அந்த துஷ்டியான ரோஹிலி எனக்குக் துன்பம் கொடுத்து விடுவாள். -

    "அவனாகவே சோர்ந்து போய் கத்தலை நிறுத்தி விடுவான். அப்பொழுது உங்களுக்கும் காரிய சித்தி ஆகும். அந்த துஷ்டையும் என்னுடன் போராட மாட்டாள். "-

     சாயி மகாராஜா இவ்வாறு சொல்லிவிட்ட பிறகு, வேறு வழியில்லை. மேலும்,  பாபாவுக்கு ஏதும் மன சனசலம் இல்லை எனும்போது நாம் புகார் செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது.
       ஏற்கனவே, ரோஹிலாவிற்கு அபரிமிதமாக உற்சாகம் இருந்தது. இப்போது, பாபா வேறு அவனுக்கு ஊக்கம் அளித்துவிட்டார். கேட்கவேண்டுமா! தொண்டை காய்ந்து போகும் வரை வரம்பின்றி கத்தி தீர்த்தான். 

     மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்  போனார்கள். பாபாவின் மன்னிக்கும் குணம் தான் என்னே?  சாதரணமாக மண்டையை உடைக்கும் தலைவலியை கொடுக்கக் கூடிய செய்கை அவரை ஆழமாக ஈடுபாடு அடையச் செய்தது. 

     ஓ...! எவ்வளவு பயங்கரமான இரைச்சல். அவனுடைய தொண்டை கிழியாமல் இருந்தது பெரிய ஆச்சரியம். பாபாவை பொறுத்தவரை அவருடைய ஆக்ஞை இதுதான். "ரோஹிலாவை பயமுறுத்தாதீர்கள்."

      யோசித்துப் பார்த்தால், ரோஹிலா ஒரு பைத்தியக்காரன். ஆயினும், பாபாவின் மீது அவனுக்கு எவ்வளவு பய பக்தி. அவனுடைய மத கட்டுப் பாடுகளின் படி நேரம் தவறாது, முறை தவறாது எவ்வளவு மகிழ்ச்சியுடன் குரான் ஓதினான். 

     குரல் இனிமையாக இருந்தால் என்ன.? கடூரமாக இருந்தால் என்ன? ஒவ்வொரு முறை உணர்வு பெரும் போதும் அல்லா நாமத்தை உரக்க ஓத ஆரம்பித்து விடுவான்.

     இயற்கையாகவே அமைந்த கர கரப்பான குரலில், நேரம் தவறாது இடை விடாதும் 'அல்லா- ஹு -அக்பர்' என்று உரக்க கூவி குரான் தோத்திரங்கள் ஓதினான்.

     ஹரி நாமத்தின் மீது விருப்பமில்லாதவர்களின் உறவு, அளிக்க கூடிய மாசு பற்றி பயந்த பாபா, "அல்லாவின் புகழை விருப்பமுடன் பாடும் இந்த ரோஹிலாவை காரணம் ஏதுமின்றி ஏன்விரட்டி அடிக்க வேண்டும்.?" என்று சொல்லிவிட்டார். 

      "எங்கே பக்தர்கள் என்னடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு நான் கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்." என்பது இறைவனுடைய வாக்கு. இவ்வுண்மையை    நிரூபணம்  செய்யும் வகையில் பாபா இந்த அனுபவத்தை ஷீரடி வாசிகளுக்கு கொடுத்தார்.


     ரோஹிலா பிச்சை எடுத்து பிழைத்தவன். சேர்த்து உன்ன காய் கறி இருந்தோ இல்லாமலோ காய்ந்த ரொட்டியை தின்றவன். சில நாள்களில் அதுவ்மின்றி பட்டினி கிடந்தவன். அவனுக்கு ஏது மனைவி?  இல்லாத மனைவி எவ்விதம் பாபாவை அணுகுவாள் ?


     ரோஹிலா ஓர் ஆண்டி. ஒரு பைசாவே அவனுக்கு பெரும் செல்வம். அவனுக்கு எப்படி கல்யாணம், மனைவி எல்லாம்.? மேலும், பாபா ஒரு பால பிரமச்சாரி அல்லரோ ! முழு கதையும் பாபாவின் கற்பனை என்பது நன்கு தெரிந்ததே. 

     ரோஹிலா எவ்வளவு வேண்டுமானலும் கூச்சமிடட்டும். கலிமாக்களை
செவிமடுப்பதில் பாபாவுக்கு பரம சந்தோசம். இரவும் பகலும் கேட்டார். தூக்கம் அவருக்கு விஷம் அன்றோ !


Thursday 1 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது!




 "உலகியல், ஆசைகள் பலவிதமானவை. ஆயினும் நான் யார் என்னும் சூக்குமம் புரிந்துவிட்டால், அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். -

    "நான் மனமோ புத்தியோ இந்திரியங்களோ இல்லை ; மகத்தான இப் பிரபஞ்சமும் இல்லை; தோன்றாத நிலையிலிருந்த பிரமாண்டமும் இல்லை. ஆரம்பமே இல்லாத பழம்பொருளான நான், சாக்ஷி மாத்திரமே. " - 

    " இவ்வாறாக குணங்களையும் இந்திரியங்களையும் கடந்து நிற்கும் என்னை புலனின்பங்கள் கவர்வது இல்லை. நான் இல்லாத இடமே இல்லை. நான் செயல் புரிபவனும் இல்லை. செயல் புரிய வைபவனும் இல்லை. -

     "மனமும் புத்தியும் இந்திரியங்களும் மனித உடலின் தூலமான கருவிகள் என்றுணர்ந்து விட்டால், பற்றற்ற மனப்பான்மை ஞானத்தை வெளிப்படுத்திக் கொண்டுவரும். -


      "மனிதன் தான் யார் என்பதை மறந்து போவதே மாயை. எல்லா இருப்புகளுக்கும் சாரமான என்னை அறிந்துகொள்வதே உள்ளிருக்கும் தூய பூரனாந்தத்தை  பெறுவதாகும். 

     "மனதின் தாவல்கள் அனைத்தும் எல்லாப் பிரியங்களையும் தசை திருப்பிவிடப் பட்ட என்னைப் போன்றவருக்கு அதுவே உண்மையான வழிபாடாகும். இந்த சிதானந்ததை அனுபவித்து சுத்த ஞானமில்லை. -

    "இந்த ஆத்மாவே முழு முதற் பொருள். சுத்த ஞானம் பிரம்மம்; ஆனந்தம் பிரம்மம். இந்த பிரபஞ்சமே ஒரு பிரமை; ஆதலால் அதைப் பற்றிய மாயைகளை உற்பத்தி செய்கிறது. உண்மையில் பிரம்மம் நானே. -

    " நான் வாசுதேவன்; ஓம் என்பதும் நானே; நான் நித்தியன்; சுத்தன்; புத்தன்; சிரத்தையுடனும் உண்மையான பக்தியுடனும் என்னை வழி படுவது சுய உயர்வு அளிக்கும். 

     "இவ்வாறாக என்னை யார் என்று தெரிந்துகொண்டு, யதார்த்தமாக பூஜை செய்ய வேண்டும். மேலும், முழு மனதுடன் என்னை சரணாகதி அடைந்து என்னுடன் கலந்து விட வேண்டும். "

     கடலுடன் கலந்துவிட்ட நதி திரும்பி வரமுடியுமா? கடல்தன்னை ஆலிங்கனம் செய்துகொண்ட பிறகு நதி என்னும் தனிப் பட்ட அடையாளத்தை வைத்துக் கொள்ள முடியுமா?

     எண்ணையில் நனைக்கப்பட்ட திரியானது, தீபத்தின் ஜோதியை சந்தித்தால், அதனுடைய ஒளி மிகுந்து ஜ்வாலையாக எரிகிறதன்றோ? அவ்வாறே, முனிவர்களின் பொன்னடிகளில் சேர்ந்து விட்ட நம் முனேற்றமும். -

  'அல்லா மாலிக்' என்ற உயிரூடத்தை தவிர வேறெதையும் பற்றி சிந்தனை செய்யாதவரும் சாந்தமானவரும் தேவைகளும் ஆசைகளும் இல்லாதவரும் சம தரிசனம் உடையவருமானவர் பிரமத்திலிருந்து வேறு பட்டவராக எவ்வண்ணம்  இருக்க முடியும்? 
 
    பற்றின்மை, அகந்தையின்மை, இரட்டை என்னும் மாயை இன்மை, தன்னுடையது என்று எதையும் வைத்துக் கொள்ளாத தன்மை, இந்த நான்கு தெய்வீகமான குணங்கள் எங்கு இருக்கின்றனவோ, அங்கு 'நான்' என்ற உணர்வு எப்படி இருக்க முடியும்?

     தாத்பரியம் என்னவென்றால் இம்மாதிரியான எட்டு தெய்வீக குணங்களும் ஸ்ரீ சாயியினுடைய உடலில் சம்பூர்ணமாக இருக்கும்பொழுது என்னுடையது என்னும் உணர்வுக்கு இடமேது.? அவரை விடுவிடு தனி நிலை அடையாளத்தோடு நான் எவ்வாறு இருக்க முடியும்? 

     என்னுடைய பிரக்ஞை, பிரபஞ்சத்தையே வியாபிக்கும் அவருடைய பிரக்ஞையில் ஒரு சிறு துளியே. ஆகவே, என்னுடைய அகங்காரத்தை சாயியின் பாதங்களில் சமர்பிப்பதே அவருக்கு செய்யும் முற்றும் முழுமையான சேவையாகும். 

      'எனக்கு சேவை செய்தும், என்னுடைய புகழை பாடியும், முழு மனதுடன் என்னை சரணாகதி அடைபவன் என்னுடன் ஐக்கியமாகி விடுகிறான்.' பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மத் பாகவதத்தில் அழுத்தமாக எடுத்துரைக்கிறார். 



    வண்டை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் புழு, அந் நினைவினாலேயே வண்டாக மாறி விடுகிறது. அது போலவே, சிஷ்யனும் தன்னுடைய குருவை நிஜமான பக்தியுடன் வழி பட்டு குருவைப் போலவே ஆகி விடுகிறான். 
    

     'போல' என்னும் வார்த்தையில் மறைமுகமாக பிரிவினைதொனி ஒலிக்கிறது.  இதை  குருவால் ஒருகணமும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் சிஷ்யனின்றி குருவேது?  சிஷ்யனை குருவிடமிருது பிரித்துப் பார்க்க முடியாது. 

     நான் யாரை வழி பட ஆணையிட்டேனோ அவரை சித்தரித்து விட்டேன். இங்கே எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சந்தர்பத்திற்கு புஷ்டி அளிப்பதாக கருதுவதால் அதை இங்கு விவரிக்கிறேன். 


     பாபாவின் குணாதிசயங்களால் கவரப் பட்டு ஒரு ரோகிலா ஷீரடிக்கு வந்தான். ஷீரடியில் பல நாட்கள் தங்கினான். அவ்வாறு தங்கியபோது அவனுக்கு பாபாவின் மீது அளவில்லாத பிரேமை வளர்ந்தது. 

    உடற்கட்டில் புஷ்டியான எருமைக் கடா போன்றிருந்த அவன், நடத்தையில் கட்டுப்பாடு இல்லாதவன்; பிடிவாதி; எவர் சொல்லும் கேட்க மாட்டான். பாதங்கள் வரை தொங்கும் கப்ணியை உடையாக அணிந்துகொண்டு வந்து, மசூதியில் தங்கி விட்டான்.

     அவன் விருப்பட்ட போதெல்லாம்  பகலிலும் இரவிலும் மசூதியிலோ சாவடியிலோ குரானின் ஸ்லோகங்களை உச்சமான குரலில் ஓதுவான்.

     சாய் மகாராஜ் என்னவோ சாந்தசொருபம்தான்.; ஆனால், கிராம மக்கள் சோர்ந்து போயினர். எல்லாருடைய தூக்கமும் கெட்டு போகும் ரீதியில் நடுநிசியிலும் அவன் போடும் இரைச்சல் தொடர்ந்தது. 
     பகல் நேரத்தில் சுட்டெரிக்கும்  வெயிலில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்து விட்டு வந்த கிராமத்து மக்கள், இரவில் சுகமான நித்திரையில்லாததால்  அவதிப் பட்டனர். இந்நிலைமை, மக்களை கடுமையாக எரிச்சல் அடைய செய்தது. 



Thursday 24 November 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது..!

இப்பொழுது பாபாவின் திருவாய் மொழி ஒன்றை அதே உட்பொருளில் சொல்கிறேன். கதை கேட்கும் நன்மைக்களே பயபக்தியுடன் கவனமாக கேளுங்கள்.


     என்னுடைய அரசாங்க உத்தியோகம் 1916 ம் ஆண்டில் முடிவுற்று, எனக்கு தகுதியான ஓய்வூதியமும் வழங்கப் பட்டது. ஷிர்டிக்குப் போகும் காலம் வந்தது. அன்று ஆடிமாத பௌர்ணமி நாள். குரவைப் பூஜிப்பதற்காக பக்தர்கள் ஷீரடியில் குழுமி இருந்தனர். சாயி பக்தர் அவருடைய சொந்த உந்துதலால் எனக்கு சிபாரரிசாக பாபாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

      என்னிடம் உள்ள உண்மையான ஆதங்கத்தினால் பாபாவிடம் இவ்வாறு கெஞ்சினார். இவருடைய பெரிய  குடும்பத்தின் பொருட்டு இவர் மீது கருணை காட்டுங்கள் பாபா.  

     "இவருக்கு இன்னுமொரு உத்தியோகம் கொடுங்கள். வாங்கும் ஓய்வூதியம் போதுமா என்ன? ஏதாவது ஒரு உதவியை செய்து, அண்ணா சஹேபினுடைய கவலையை விலக்குங்கள். "


     பாபா பதில் கூறினார். "ஓ..! அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும்; ஆனால், அவர் என்னுடைய சேவையில் இறங்க வேண்டும். இறங்கினால், சுகமான வாழ்க்கை நடத்துவார்".



     அவருடைய உணவுத் தட்டு என்றும் நிறைந்திருக்கும்; உயிருள்ளவரையில் காலியாகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடை விடாது என்னுடையப் பாதுகாப்பை நாடுவாரனால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.


    "யார், நாம் நமது இஷ்டம் போல் செயல்பட்டால் என்ன ஆகிவிடும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் வலி தவறி விட்டார்கள் என்பதை அறிந்து கொள். தர்ம நெறியை விட்டு விலகியவர்களை நாம் முதற் காரியமாக விளக்கி விட வேண்டும்.

     "நேர்முகமாக அன்னவர் வந்தால், வேறு வழியில் சென்று விடுங்கள். அவர்களை பயங்கரமானவர்களாக கருதுங்கள். சிறிது சிரமப்பட்டாவது, அவர்களுடைய நிழலும் உங்கள் மீது விழாதவாறு paarthuk கொள்ளுங்கள்.

     "நெறி முறை பாராதவனும் ஒழுக்க மில்லாதவனும் ஆத்மா விசாரம் செய்யாதவனும் அனுஷ்டானம் இல்லாதவனும் , நன்மை- தீமை பாகுபாடு தெரியாத வனும் எப்படி நல வாழ்வு வாழ முடியும்.?

     "மேலும், நாயாயினும் பன்றியாயினும் ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவமரியாதையாக வெறுக்கவோ ஒதுக்கவோ செய்யாதிர்கள். ஏனெனில், முன் ஜென்ம பந்தம் எதோ இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை. " -

    "இப்போதிலிருந்து அவர் பக்தியுடன் எனக்கு சேவை செய்ய வேண்டும்; இறைவன் அவர் மீது இறக்கம் காட்டுவான்; அள்ள அள்ள குறையாத தேவ லோகத்துச் செல்வம் அவருக்கு கிடைக்கும். -

    "ஆகா இந்தப் பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்? நான் யார் என்பதை ஆணித்தரமாக எப்படி அறிய முடியும்? என்னுடைய பூத உடல் அழியக் கூடியது; என்றும் அழியாத பிரமமே வழிபாட்டுக்கு உரியது.

     "நிலம், நீர், தீ, காற்று , ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் இவைகளின்  ரூபத்தில், நான் இப் பிரபஞ்சத்தின் நான்கு பக்கங்களிலும் நிறைந்து இருக்கின்றேன்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கீதையில் அர்ஜுனனுக்கு இதையே சொல்லி இருக்கிறார். -

    "தாவரங்களும், ஜங்க மங்களும்  நிறைந்த இந்த ஜகத்தில் ஒரு பெயராகவோ உருவமாகவோ தோற்றமாகவோ எது இருந்தாலும், அது எட்டு பிரகிருதிகளை கோர்த்துக் கொண்ட நானே! அதுவும் என்னுடைய ஸ்ரிஷ்டியின் அற்புதமே!"


     " ஓம் என்னும் பிரணவம் என்னுடைய ஒளியாகும்; நானே இவ்வொளியின் பொருள் . உருவெடுத்த இப் பிரபஞ்சத்தில் எதனை வஸ்துகள் உண்டோ. அவை அனைத்திலும் நான் நிறைந்திருக்கிறேன். -


     "இவ்வாறு தம்மை தவிர வேறு எதுவமே இல்லாத நிலையில் எதை விரும்புவது? இப் பிற்பஞ்சந்தின் பத்து திசைகளையும் நான் வியாபிக்கிறேன். -


      "என்னுடைய சர்வ வியாபக விழிப்பில், நான் எனது என்னும் உணர்வுகள் கரைந்து விட்ட நிலையில், விரும்பப் படுவது யாது.? முழுமையில் அனைத்தும் மூழ்கி இருக்கின்றன. -


     "புத்தியில் எத்தனையோ ஆசைகள், ஆத்மாவின் சம்பந்தம் இல்லாமல் எழுகின்றன. நான் நிஜமான ஆத்மாவின் உருவமாக இருப்பதால் நினைவு அலைகள் எங்கிருந்து எழும்.?


  

Thursday 17 November 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது..!

என்ன நாதம் எழுகிறதென்பதில்  புல்லாங்குலலுக்கோ, ஆர்மோனியத்திற்கோ சிரமம் என்ன இருக்கிறது.? சிரமம் அனைத்தும் வாசிப்பவனுடையதுதானே ? நான் எதற்காகக் கவலைப் பட வேண்டும்? 



     பாபாவின் தெய்வீகமான கீர்த்தியின் வர்ணனையைச் செவிமடுப்பது பக்தர்களின் மனமலன்களை எரிக்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சுலபமான  பாதை இதுவே.

     மாயையைக் கடந்த சுத்த பிரம்மம் எது? மாயையை எவ்விதம் கடப்பது? ஹரிக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? கர்மங்களையும் தர்மங்களையும் தொடர்ந்து பின்பற்றுவதாலா?

     மனிதன் கடைசியாக அடையக் கூடிய மிக உன்னதமான நிலை எது? பக்தி எது? முக்தி எது? விரக்தி எது? அத்வைதம் என்றால் என்ன? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? இத்யாதி விஷயங்கள் மறை பொருளான வை .

    இவ்விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஞான தாகத்தை தனித்துக் கொள்ள, ஞானேஸ்வர், ஏசுநாதர் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்க வேண்டும். 


     கிருத யுகத்தில் மனதையும், புலன்களையும் அடக்கி தவம் செய்தல், திரேதா யுகத்தில் யாகம் செய்தல், துவாபர யுகத்தில் சடங்குகளோடு கூடிய பூஜை செய்தல், கலியுகத்தில் கதா கால சேபமும் நாம சங்கீர்த்தனம் செய்தல் -  இவை முக்தி அடைவதற்கு உண்டான சாதனங்கலாம். இதில் கலியுக சாதனம் மிக சுலபமானது. 

    குருவின் கதைகளை கேட்பதென்னும் முக்தி மார்க்கம் நான்கு வர்ணதார்க்கும் உண்டு.  பெண்களாக இருந்தாலும் பிற்படுதப்பட்டவராக இருப்பினும் ஜாதியே இல்லாதவராக இருப்பினும் இவர்களனைவருக்கும் மார்க்கம் இதுவே. 

    புண்ணியம் சேர்த்தவர்களே இக்காதைகளை கேட்பார்கள். சிலருக்கு கேட்டுக் கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும். அவர்களையும் ஸ்ரீஹரி எழுப்பி விடுவார். 
    முடிவே இல்லாத புலனின்பங்களை நாடி ஓடி, அடைய முடியாததால் மனமுடிந்து போனவர்களுக்கு கூட, ஞானிகளின் கதாமிர்தம் புளிநின்ப வேட்கைகளிருந்து விடுதலை அளிக்கும். 

     யோகமும் யாகமும் தானமும் தாரணியும் நாலாவிதமான பெருமுயற்சிகளால் அடைய வேண்டியவை. ஒரு முகமான கவனம் ஒன்றை தவிர, இக் கதை கேட்பதில் ஆயாசம் தேவையில்லை. 
       இவ்விதமாக, சாயியின் கதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை நல்லோர் செவி மடுக்கட்டும். அவர்களுடைய பஞ்ச மகா பாபங்களும் வேரோடு எரித்து நாசமாகப் படும். 

      மனிதப் பிறவி எனும் பந்தத்தில் நாம் இறுக்கமாக கட்டப் பாடிருக்கிறோம். இந்தக் கட்டுக்குள் நம்முடைய நிஜ ரூபம் மறைந்து கொண்டிருக்கிறது. கதைகளை கேட்பது இக் கட்டுகளை தளர்த்தி ஆத்மா தரிசனம் கிடைக்க செய்யும். 

     ஆகவே, இக் கதைகளை பரண பரியந்தம் நினைவில் வைப்போம். தினமும் இவற்றை பரிசீலிப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் போசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும். 

      பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக்கதைகளை படிப்பதாலும்  கேட்பதாலும்    சாயி தியானம் இயல்பாகவே மலரும். சாயியின் ரூபம் கண் முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும். 

     இவ்வாறு சத்குருவின் மீது பக்தி செலுத்துவதால் உலக வாழ்கையில் பற்றற்ற மனப் பான்மை வளரட்டும். குருவைப் பற்றிய நினைவில் பிரிதி உண்டாகி, மனம் நிர்மலகாட்டும். 

     இவ்வெண்ணம் கொண்டே, சாயி என்னை ஆசிர்வதித்து இருக்க வேண்டும். என்னை சாக்காக வைத்துக் கொண்டு அவருடைய திட்டத்தை அவரே நிறைவேற்றிக் கொள்கிறார். 


    பால் மிகுதியாக சுரந்து, மடி கனத்து வலித்தாலும், கன்றில்லாமல் பசு பாலை வெளியே விடாது. இது பசுவினுடைய உடன் பிறந்த குணம். சாயியினுடைய அருளும் அவ்வாறே. 

     சாதக பறவையான நான் இதற்கு ஆசைப் பட்டபோது, என்னுடைய அல்ப தாகத்தை மட்டுமுல்லாமல் மற்ற பக்தர்களின் தாகத்தையும் தீர்க்கும் வகையில் என் அன்னை என் மீது ஆனந்த மழையாகப் பொழிந்தார்.  



Thursday 10 November 2011

காவியம் எழுத பாபா சம்மதித்தது

இவ்வேளை (சரித்திரம் எழுதுவது) அவ்வளவு சாமானியம் இல்லையென்றாலும், மரியாதையுடனும் பக்தியுடனும், நான் அவருடைய ஆணையை சிரமேற் கொண்டேன்.  பாபாவைப் போன்ற   ஒரு தர்ம தாதா  (கொடைவள்ளல்) இருக்கும்பொழுது , நான் ஏன் ஒரு தாழ்மையான நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்?



     அவர் சில பக்தர்களை கோயில்கள் கட்ட வைத்தார். வேறு சிலரை நாம சங்கீர்த்தனம் (பஜனை) செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்தார்; சிலரை தீர்த்த யாத்திரை செல்ல வைத்தார்; என்னை எழுத வைத்தார்!

     அவர்களின் நடுவே நான் பாமரன். கருணைக் கடலும் தயா சாகரமுமான சாய் என்னிடம் என்ன நற்குணம் கண்டு என் மீது பிரியம் அடைந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. 

    ஆயினும், இதுவே குருவருள் செய்யும் அற்புதம். ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமும் ஆயினும் ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்து பழுத்துக் குலுங்கும் அன்றோ!

     வருங்காலத்தில் சிலர் ஆசிரமங்களை அமைப்பர்; சிலர் கோயில்கள் கட்டுவர்; சிலர் நதிக் கரைகளில் படித்துறையும் கட்டுவர். ஆனால், நாமோ ஒற்றையடி பாதையிலேயே சென்று சாயியின் சரித்திரப் பாடத்தைப் படிப்போம். 

     சிலர் பய பக்தியுடன் பாபாவுக்கு பூஜை செய்கிறார்கள். சிலர் அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்துவிடுகிறார்கள். என்னடைய மனமோ பாபாவின் பெருமைகளை பாட வேண்டுமென்று ஆவல் கொண்டது. 

     நான் எல்லாம் சிறிது சிறிது தெரிந்தவன்; எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவன் அல்லேன். இந்நிலைமையால், என்னுடைய தகுதியின்மை (சரித்திரம் எழுத) என்னமோ வெட்ட வெளிச்சம்! அப்படியிருக்க, நான் ஏன் இந்தப் பிரமாண்டமானதும் கடினமானதுமான பணியை ஏற்றுக் கொண்டேன்? 

     எம்முயற்சியும்  செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பேன் ஆனால், ஆக்ஞையை பங்கபடுத்திய குற்றத்திற்கு ஆளாவேன்.  ஆணையை நிறைவேற்றவேண்டு மென்று இறங்கலாமேன்றால், என்னால் சரிவரச் செய்து முடிக்கக் கூடிய காரியமாகத் தெரியவில்லையே!

    சமர்த்த சாயியின் நிஜமான நிலைமையை யார்தான் துல்லியமாகவும் முழுமையாகவும் விவரிக்க முடியும்? பக்த ஜனங்களுக்காக அவரே அருள்செய்து, விவரிக்கும் சக்தியை யாருக்காவது அளித்தால்தான் இது முடியும். 

     வார்த்தைகளுக்கு எட்டாத விஷயத்தை விவரிக்க நான் ஏன் முயல்கிறேன் என்று எவரும் யூகம் செய்ய நான் இடமேதும் கொடுக்க விரும்பவில்லை. 


    நான் பேனாவைக் கையிலெடுத்தவுடன் பாபா என்னுள் இருக்கும் 'நான்' எனும் கர்வத்தை அடக்கி, அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறாக, சரித்திரம் எழுதியவன் பெருமை அவருடையதே! 

      இதுவோ ஒரு முனிவரின் சரித்திரம்! அம் முனிவரே அன்றி  வேறு யார் இதை எழுத முடியும்? புரிந்துகொள்ள முடியாத பாபாவின் குணாதிசியங்களை புரிந்து கொள்ள முயல்வது, ஆகாயத்தை அனைத்துக் கொள்ள முயற்சி செய்வதற்கு ஒப்பானது. 

    இப்பொழுது மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்று, பாமரனாகிய எனக்கு விளங்க வில்லை. உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள தேவரீர் என் புத்திக்கு வலி காட்ட வேண்டும். 


     அவருடைய யுத்திகளை அவரே அறிவார்.எண்ணத்தால் கற்பனை செய்ய முடியாத அவருடைய மாயா சக்தி ஊமையையும் தேவ குருவைப் போன்று பேச வைக்கிறது. முடவனையும் மேரு மலையை தாண்ட வைக்கிறது. 

     நான் உம்முடைய பாதங்களின் தாசன். என்னை உதாசீனம் செய்து விடாதீர். என்னுடலில் சுவாசம் ஓடும் வரை உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும். 

     கதைக் கேட்க்கும் ஜனங்களே! இக் காவியத்தின் பிரயோஜனம் என்ன என்பதை புரிந்துகொண்ட விட்டீர்கள். சாயியே இக்காதையை எழுதச் செய்வார். தவறு, தவறு தம் பக்த கோடிகளின் மங்களத்திர்காக  இக்கதையை  தாமே எழுதுவார்.












Thursday 27 October 2011

காவியம் எழுத பாபா சம்மதித்தது

"என்னுடைய சரித்திரத்தை எழுதுவதற்கு உமக்கு முழு அனுமதி உண்டு" என்று சொல்லி, சாயி எனக்கு முழுமையான உறுதி மொழி தந்தார்.
   "உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக ; மனதில் அணுவளவு தயக்கமும் வேண்டா; என்னுடைய வார்த்தைகளில் முழு விசுவாசம் வைத்து , மனத்தை திடப்படுத்திக் கொள்வீராக ; -

    "என்னுடைய லீலைகள் எழுதபட்டால், அஞ்ஞானத்தால் ஏற்பட்ட தோஷங்கள் உடைந்து விடும். பக்தி பாவனையுடன் கேட்கப்பட்டால் , வாழ்கையின் சிறு தொல்லைகளும் பிரச்சினைகளும் மறந்து போகும். 

    "கேள்விக்கடலில் பக்தியும் பிரேமையும் அலைகளாக ஆர்ப்பரிக்கும். மீண்டும் மீண்டும் கேள்விக்கடலில் முத்துக் குளித்தால், ஞான ரத்தினங்களை உங்களுடைய கரங்களில் கொண்டு வந்து சேர்க்கும். "
     இதைக் கேட்டவுடன் என் சந்தேகங்கள் அனைத்தும் பறந்தோடிவிட்டன. சாயியின் பாதங்களில் விழுந்து பணிந்து, மனத்துதிதவாறு அவருடைய சரித்திரத்தை எழுத ஆரம்பித்தேன்.
     இச் சொற்கள் பாபாவின் உதடுகளில் இருந்து, வெளி வந்தவுடன் பாபாவின் சரித்திரம் நிச்சயமாக எழுதப் படப் போகிறது என்னும் நிகழ்வுக்கு நற்சகுனமாக அதை என் மனதில் இறுதிக் கொண்டேன். நான் ஒரு சேவகன் மட்டுமே.
    ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான் ; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்! பிரேமைக்கு அடிமையாகி கள்ளங் கபடமற்ற எளிமையான் பக்தனைத்  தேடி அலைகிறான். வெளி வேஷம் போடுபவர்களுக்கு அவன் என்றுமே அகப்படுவதில்லை.
    "உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது. எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. பார்! இதைத் தான் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.
    "சாமா! நான் ஒன்று சொல்லுகின்றேன். கேள்! யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன். இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது. -
    "என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தை சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர். -
    "ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான். -
    "என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது சத்தியமான உண்மை. -

    "எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படி புலனின்ப நாட்டம் தலை காட்ட முடியும்? -

     "என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டல்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப் படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்தும் விடுவிப்பேன்.-

"பக்தியுடன் இக் இக்கதைகளை செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள். பிரதிபலித்த பின் தியானம் செய்யுங்கள். உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்.

"நான் எனும் பிரக்ஞை மறைந்து, 'நானே அவன் (இறைவன்) ' என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் கனக்கும்.-

"சாயி சாயி என்ற நாமஸ்மரணம் கலியுகத்தின் மலங்களை எரிக்கும். பேசினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் ஒரே நமச்காரதால் அழிக்கப்படும்"



Thursday 17 March 2011

குருவின் தேவை!

சூடான  விவாதம்:-
     குருவின் தேவையைப் பற்றி எனக்கும் ,  பாலாசாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் ஷீரடிக்கு வந்த தினத்தன்று நடைப் பெற்றது. "நம் சுதந்திரத்தை நாம் என் இழக்க வேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்?" என்று நான் விவாதித்தேன். "நாம் நம்முடைய கடமையை செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார் ?" ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் .  சோம்பேறியாகத் தூங்குவதை தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்து விட முடியும்?" இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். திரு. பாடே கருமத்து (அன்றி தலைவிதிக்காக) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும். பெரியவர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிரார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் ஒருவழியில் செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தை தள்ளி விடுக. பெருமையும், அஹங்காரமும் உமக்கு உதவாது". கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றும் வழக்கம் போல ஒரு முடிவும் காணப்படவில்லை. நாங்கள் களைப்படைந்துவிட்டதால் முடிவாக நான் மன அமைதியை இழந்தேன். வலிவான  "சரீர அபிமானம்", அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையைஎன கண்டேன். அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம். 

     பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகாசாஹெப்  தீட்சித்தை பாபா பின்வருமாறு வினவினார். "சாடே வாடவில் என்ன நடந்து கொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது? " என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமாட்பன்ட் என்ன கூறுகிறார்?" இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாடே வாடாவானது மசூதியிநின்று நல்ல தூரத்தில் இருக்கிறது. சர்வ வியாபியாயும், அகத்திளுருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்கனம் அறிந்திருக்க முடியும்? 

 முக்கியமானதும் ஞானம் மிளிர்வதுமான பட்டம்:- 
     சாயி பாபா என்னை ஏன் "ஹெமாட்பந்த்" என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன். இச்சொல் "ஹெமாத்ரிய பந்த்" என்ற வார்த்தையில் இருந்து திருத்தப்பட்டதாகும். இந்த ஹெமாத்ரிய பந்த் யாதவ அரச வம்சத்தை சேர்ந்த ராம்தேவ், மகாதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ் பெற்ற மந்திரியாவார். கல்வி, கேள்வி நிரம்பப் பெற்று நற்பண்புகள் நிறையப் பெற்றவர். ஆஅனால் நான் முற்றிலும் மாறுபட்டவன். அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர என்னதான். எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்க்காக சூட்டப்பட்டது என்று விளங்கவில்லை. ஆனாலும் அதுகுறித்து தீவிரமாக சிந்தித்து அது என் அஹங்காரத்தை அழித்து , பணிவாகவும் , அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன். விவாதத்தில் எனக்கு உள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப் பட்டதாகும்.
    எதிர்கால நிகழ்ச்சிகளை  உற்று நோக்கில் பாபாவினது சொற்கள் (திரு. தபோல்கரை ஹெமாத் பந்த் என அழைத்தது ) முக்கியமானதும்  தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும். ஏனெனில் மிகவும் புத்திசாலிதனமாக சாயி சமஸ்தானத்தின் நிர்வாகங்களை கவனித்து எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்து முக்கியமானதும்  ஆத்மார்த்தமான விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை , "நான்" தன்மையை சரணமிடுதல். தன்னையுனர்தல் போன்றவற்றை குறிக்கும் "சாயி சத் சரித்திரம்" என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.  
     குருவின் தேவைப் பற்றி:-
      ஹெமாட்பந்த் , பாபா இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பன பற்றி எவ்விதக் குறிப்பும் விட்டுவைக்க வில்லை. ஆனால் காகாசாஹெப் தீட்சிதர் இவ்விஷயத்தைப் பற்றி தனது குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார். ஹெமாத் பந்தின், சாயி சந்திப்பின் அடுத்த நாளில் பாபாவிடம் காகாசாஹெப் தீட்சித் சென்று தான் ஷிர்டியை விட்டுப் போக வேண்டுமா எனக் கேட்டார். பாபா "ஆம்" என்றார். பிறகு எங்கே போவது?  என யாரோ கேட்டார். பாபா "உயர மேலே" என்று கூறினார். வழி எப்படிப் பட்டது என்று அம்மனிதர் பாபாவிடம் வினவினார். பாபா கூறினார், அங்கேப் போவதற்கு பல வழிகள் உள்ளன. இங்கு இருந்தும் (ஷிரிடியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது. பாதை கடினமானது. புலிகளும், ஓநாய்களும் வழியுள்ள காடுகளில் உள்ளன. நான் (காகாசாஹெப்) கேட்டேன். "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்து சென்றால் என்ன? அதற்கு பாபா கூறினார் " அப்போது கடினம் இல்லை . புலி, ஓநாய் , படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்து செல்வார். வழிகாட்டி இல்லையென்றால், காடுகளில் நீ காணாமல் போகலாம். அல்லது படுகுழியில்  விழும் அபாயம் இருக்கிறது". இந்த நிகழ்ச்சியின் பொது திரு. தபோல்கரும் அறை அருகே இருந்தார். இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார். 

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!



Thursday 10 March 2011

பாபாவின் தரிசனம்!

இதை எழுதுவதன் காரணம்:-
     கோதுமை மாவு அரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொத்து வியாதியை தடுத்து அழித்ததான சாய்பாபாவின் அற்புதத்தை கண்டோம். நான் சாயி பாபாவின் அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக்கிளர்ச்சியுடன் கேட்டிருக்கிறேன். அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்தது, சாயி பாபாவின் பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது, அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும், அறிவுருத்துவதுவாகவும்  இருப்பதுடன், அவர்களின் பாவங்களையும் நீக்குமாதலின் நான் சாயி பாபாவின் புனித வரலாற்றையும் அவருடைய அறவுரைகளையும் வரையத் தொடங்கினேன். ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்திரத்துக்கோ, பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று. அஃது உண்மையும் பெரியதுமான வழியே காண்பிக்கிறது.  
     இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி சாயி பாபாவைக் கேட்க முடியவில்லை. பாபாவின் நெருங்கிய அடியவருமான திரு. மாதவராவ் தேஷ்பாண்டே என்ற சாமாவிடம் பாபாவிடம் எனக்காக கேட்கும்படி வேண்டினேன். அவர் எனது எண்ணத்திற்காக பாபாவிடம் வாதாடினார். "இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்புகிறார். நான் ஒரு ஏழை பக்கிரி என்று கூறாதீர்கள். ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவி அளிப்பதாக கூறினால் அவர் எழுதுவார். அன்றித் தங்கள் திருவடி கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும் . தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது." சாயி பாபா இவ்வேண்டுகோளை செவிமடுத்ததுடன்  உருகி, உதி என்னும் திருநீறு  அளித்து ஆசீர்வதித்து  தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என் தலை மேல் வைத்து "இவர் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் ஆகிவற்றை தொகுத்து, குறிப்புகள் வைத்துக் கொள்ளட்டும். நான் இவருக்கு உதவி செய்வேன். அவர் ஒரு புறக் கருவியே ஆவார். என்னுடைய வரலாற்றை நானே எழுதி, என்னுடைய அடியவர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும். அவர்தம் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்து விடட்டும். வாழ்க்கையில் இங்ஙனம் செய்பவனுக்கே நான் மிகவும் உதவி புரிகிறேன். " என்று கூறினார். 
     "விவாதம்" என்னும் சொல்லானது ஹேமாட் பந்த் என்னும்   பட்டத்தை  நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க நான் கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது. அதையே இப்போது கூறுகிறேன். காகாசாஹேப் தீட்சித், நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்பு  கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஷிர்டிக்குப் போய் பாபாவின் தரிசனத்தை பெறும்படி வலியுறுத்தினார்கள் .   ஆயின் இடையில் கிளம்பிய எதோ ஒன்று என்னை ஷீரடிக்கு போக விடாமல் தடுத்தது. லோனவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான். எனது நண்பன் "வைத்தியமுறை" வேண்டுதல் முறைகளிலும் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார். ஆயின் காய்ச்சல் குறையவே இல்லை. முடிவாக தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் படுக்க வைத்தான். இதுவும் கூட பலனளிக்கவில்லை. இதைக் கேள்வியுற்றதும் "என் நண்பனின் மகனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்?  குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் ஷிர்டிக்குப் போக வேண்டும்.?" இம்மாதிரியாக எண்ணமிட்டு எனது ஷிர்டி விஜயத்தை ஒத்திப் போட்டேன். ஆயேன் தடுக்க முடியாதது நிறைவேறியே தீர வேண்டும். அக்தென் விஷயத்தில் பின்வருமாறு நடைபெற்றது. 
     பிராந்திய ஆபிசர் திரு சாந்தோர்கர் பஸ்சீனுக்கு சுற்றுலா  போய்க்கொண்டிருந்தார். தானாவிளுருந்து தாதருக்கு வந்து பஸ்சீனுக்கு செல்லும் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தார்.   இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது. அதில் அவர் ஏறி அமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் ஷிர்டி விசயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்து கொண்டார். எனது ஷிர்டி பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தி அளிக்க கூடியதாகவும் உர்ச்சாகமூட்டுவதாகவும் இருந்தது. எனவே நான் அன்றிரவே ஷீரடிக்கு புறப்படத் திட்டமிட்டேன். என்னுடைய சாமான்களை கட்டி முடித்து ஷீரடிக்கு புறப்பட்டேன். தாதருக்குப் போய் அங்கிருத்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு தாதருக்கு பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருந்தேன். வண்டி புறப்பட இருக்கும்போது ஒரு முஸ்லிம் பெரியவர் விரைவாக எனதுப் பெட்டிக்கு வந்தார். எனது முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு "போகும் இடம் என்ன?" என்று கேட்டார். நான் எனது திட்டத்தைக்  கூறினேன். பின்னர் அவர் என்னை தாதரில் நிற்காமல் போற்பந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட் மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுறுத்தினார். 
     இவ்வர்புதம் நிகழ்ந்திராவிடின் ஷீரடிக்கு திட்டமிட்டபடி அடுத்த நாளே போய்ச் சேராதிருப்பேன். பல இயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கி இருக்க  கூடும். ஆயின் அடுத்த நாள் காலை 9-30 மணிக்குள்ளாகவே ஷிர்டியை அடைந்தேன். திரு காகாசாஹேப் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இது 1910 ல் நிகழ்ந்தது. யாத்ரீக அடியார்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம்தான் இருந்தது. அது "சாடேவினுடைய வாடாவாகும்" குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம் பெற மிக ஆவலாய் இருந்தேன். மசூதியிநின்று திரும்பி வந்த பெரும் அடியவரான தாதாசாஹெப் நூலகர், சாயி பாபா வாடாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாய் பார்க்கலாம் என்று கூறினார். இதைக் கேட்ட உடனே நான் பாபாவிடம் ஓடி சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நானாசாஹெப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன். என்னுடைய புலன்களெல்லாம் திருப்தி அடைந்தன. நான் பசி தாகத்தை மறந்தேன். சாயி பாபாவின் பாதங்களைத் தொட்ட உடனே நான் வாழ்க்கையில் அதிகப் புத்துணர்ச்சி கொண்டவனாகவே மாறினேன். என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி சாயி பாபாவின் தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டவனாவேன். நீங்கள் சாயி பாபாவைக் கண்டுவிட்டீர்களானால் புற உலகு எல்லாம் சாயி பாபாவாகத் தோற்றமளிக்கும். 

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் வெற்றி கிடைக்கட்டும்!

                                                                                                             - இன்னும் வரும்
     
    

Thursday 24 February 2011

வளம் தரும் சாய்!

சாய் பக்தர்களுக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும்! உங்கள் துயரங்கள் மறைந்து வாழ்வில் பல வெற்றிகள் உண்டாகட்டும்!
     ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாபாவிற்காக விரதமிருந்து அவரது நாமத்தை நம் மனதினில் பல முறை உச்சரித்து வர, நமது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக மாறி விடும். 

     சாயி சத் சரிதத்தை எத்தனை பக்தர்கள் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆதலால் அச் சரிதத்தின் சில பகுதிகளை நமது சாயி அனபர்களுக்கு தரலாம் என்றிருக்கிறேன். தமிழ் அன்பர்கள் இதனை படித்து பயன் அடைவீர்களாக!

     இந்த சாயி சத் சரித்திரம், சாயி பக்தர் ஹேமாத் பந்த் என்னும் திரு.கோவிந்த ரகுநாத தபோல்கர் என்பவரால் எழுதப்பட்ட காவியமாகும். பாபா அவர்களின் அனுமதி பெற்றே இத் திரு காவியத்தை எழுதியுள்ளார். 
    தபோல்கர் ஒரு  மராட்டியர். ஆதலால் இக்காவியத்தை மராட்டி மொழியிலேயே எழுதியுள்ளார். பிறகு அனைவரும் படிக்கும் விதமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் திரு. நாகேஷ் வாசு தேவ் குனாஜி அவர்கள். நமது தமிழ் மொழியில் முதல் முதலாக மொழி பெயர்ப்பு செய்தவர் திரு. A,S. சுப்ரமணியன் அவர்கள். 
     இக் காவியத்தை கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே மொழி பெயர்த்தவர் திரு. வே. சுப்பிரமணிய ஷர்மா ஆவார்.
     சாயி பாபா அவர்களின் சரித்திரத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய அவா.தமிழ் சாயி அன்பர்கள் அனைவரும் இதனை படித்து அனைத்து செல்வங்களும் பெற சத்குரு ஸ்ரீ சாயி பாபா அவர்களை வேண்டுகிறேன்.

 புராதானமானதும் மிக்க மரியாதை உள்ளதுமான வழக்கத்தின் படி , ஹேமாத் பந்த், இந்த சாய் சத் சரிதத்தை பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.
  முதன் முதலில் அவர் சாயி பாபா அவர்களைப் பார்த்த காட்சியை விவரிக்கிறார். கொஞ்சம் கேளுங்களேன்.
   1910 ஆம் ஆண்டிற்கு பின், எப்போதோ ஒரு நாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாயி பாபாவை தரிசிப்பதற்காக சென்றிருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தன முகம் வாய் இவற்றை கழுவிய பின்னர் கோதுமை மாவு தயாரிப்பதற்கு முனைந்தார். ஒரு சாக்கை தரையில் விரித்து, அதன் மேல் திரு கையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து பின் தம் கப்னியின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, கையளவு திருகை குழியில் இட்டார். திருகையை சுற்றி, கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய வேலையென்ன என்றவாறு நினைத்தேன். அங்கு வந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயினும், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்க துணிவு வரவில்லை. பாபா மாவரிக்கும் இந்த செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும் பெண்களும் பாபாவின் செய்கையை காண பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலியவந்து நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கி விட்டு, வலிய குச்சியை கைப்பற்றி பாபாவின் லீலைகளை பாடியவாறு மாவரைக்க தொடங்கினர். முதலில் பாபா கடும் கோபம் அடைந்தார். ஆயினும், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோசம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ பிள்ளைகளோ இன்றி அவரைக் கவனிக்க யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தாராதளாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவை இல்லை, எனவே இவ்வளவு அதிகமான மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பைருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்து விடுவார்" என்றவாறு எண்ணமிட்டபடி பாடியவாறே அரிது முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்தி வைத்து விட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாக பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக ஐடுதுக்க் கொள்ளத் தொடங்கினார்கள். இதுவரை அமைதியாகவுக் அடக்கமாகவும் இருந்த  பாபா, கோபமடைந்து "பெண்களே! உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை அபகரிக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவு செய்து இப்போது இதைச் செய்யுங்கள்; இம்மவாவை எடுத்துச் சென்று கிராம எல்லையில் கொட்டி விட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள்ள எதோ முணுமுணுத்துக் கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடியே அங்கே மாவை பரப்பி விட்டார்கள். 
     பாபா செய்த இவைகளெல்லாம் என்னெவென்று ஷிர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டிருப்பதாயும் , இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரிக்கப்படவில்லை. காலராவே அரிக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியே கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து மக்கள் மகிழ்ச்சி யுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. "காலர்ரவுக்கும் கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதரணமாக அவைகளுக்கு உள்ள ஒற்றுமை என்ன? அவை இரண்டையும் எங்கனம் இணைக்க முடியும்? இந்நிகழ்ச்சி விவரிக்க முடியாததாய் இருக்கிறது. நான் இதைப் பற்றி சிறிது எழுதி என் மனம் நிறைவடையும் வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்" இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக என்னமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான 'சத் சரித்திரத்தை' எழுத உணர்ச்சியூட்டப்பட்டேன். 
     மாவரைத்ததன் உட்கருத்து:
      ஷிர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைத்த காரணத்தை தவிர வேறு ஒரு
தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சாய்பாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஷீரடியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமை மாத்திரமன்று, பாவங்கள், உள்ளம், உடல் ஆகியவற்றின் துன்பன்க்களையும் கணக்கில்லாத் தன அடியார்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ் கல்லாகும். பின்னது மேல் கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச என்ற முக்குணங்களை சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகலந்துகலாக்கி முன்னோடி வேலையாக அறைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும்.
     ஸ்ரீ சாயியை  பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்...!