valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 December 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

உரைகல்லில் தேய்த்தும் திராவகம் ஊற்றியும் பரீட்சை செய்யாது, சொக்கத்தங்கமா, தாமிரம் கலந்த மட்டத் தங்கமா என்பதை எப்படி அறிவது? துருவிப் பார்த்துப் பகுத்துணரும் மக்கள் இது விஷயத்தில் பிறர் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!

வைரமும் ஒளி பெறுவதற்காக சுத்தியடியையும் சாணைக்கல்லில் உரசலையும் சகித்துக்கொண்டே ஆக வேண்டும். தெய்வத்தின் உருவச்சிலையும் உளி வெட்டுப்பட்டு தான் ஆகவேண்டும். தெய்வத்தின் உருவச் சிலையும் உளி வெட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

கழுத்தை சுற்றி அணியும் தாயத்தை போன்று, காகா விலைபதிப்பற்றவர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆயினும், இதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்வது எவ்வாறு? இரத்தினக்கல்லை வல்லுநர் வைரத்தையும் நூலில் கட்டி அக்கினிப் பரீட்ச்சை செய்கிறார் அல்லரோ?

ஞானிகளின் திருவாய் மொழியை விகற்பமாக பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலன் அளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். ஆன்மீக முன்னேற்றம் சொற்பமாக கூடாக கிடைக்காது.

குருவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.

எந்நேரமும் குருசேவை செய்வதிலேயே கண்ணாக இருப்பவர், குருவின் ஆணைக்கு கீழ்ப்படிப்பவர், இஷ்டமான செயலா / அனிஷ்டமான செயலை என்பதுபற்றிய விசாரத்தையெல்லாம் குருவின் தலைசுமைக்கு விட்டுவிடுகிறர்.

குருவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை. குருவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில், நல்லதா / கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அவருக்கு இல்லை.

சிந்தனையை சாயியின் நினைவில் வைத்து, கண்கள் சமர்த்த சாயியின் பாதங்களில் நிலைபெற்று, மனம் சாயி தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேகம் முழுவதும் சாயியின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.

குருவின் ஆணைக்கும் அதை நிறைவேற்றுவதற்கு இடையே ஒரு கணநேரத் தாமதம் ஏற்பட்டாலும் அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என்னே விந்தை இச் செயல்பாடு!

தீட்சிதர் (காகா) மிக்கது தூய்மையான சத்வகுணமும் படைத்தவர். தீரத்திலும் திடமான செயலாக்கத்திலும் மேருமலைக்கு ஒப்பானவர். உயிருடன் இருக்கும் ஆட்டுக்கடாவை எப்படி கொல்வது என்ற சந்தேகம் அவரைத் தொடவேயில்லை.

நிரபராதியான வெள்ளாட்டுக்கடா மரணமடையும்; அதனுடைய ஆத்மா துடிதுடிக்கும். மஹாபாவத்தை செய்வதால் என்னுடைய தூய்மையான கீர்த்தி கறைபடும்.-

இவ்வெண்ணங்கள் அவர் மனதில் எழவேயில்லை! குருவின் ஆணையை பங்கம் செய்வதே மிகப் பெரிய பாவம். உடனே கீழ்ப்பணிந்து செயல்படுதலை விடப் புண்ணியம் வேறெதுவுமில்லை.