valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 January 2012

சாய்பாபா சீரடிக்கு இறங்கி வருதல்!

இவ்வார்த்தைகள் கேவலம் உபசாரத்திற்கு ஆகவோ அவை அடக்கதிற்காகவோசொல்லப்பட்டவை அல்ல. ஹிருதயத்திலிருந்து  எழும் வார்த்தைகள் இவை. ஆகவே, உங்களுடைய ஒருமுகப்பட்ட கவனத்தை பிரார்த்திக்கிறேன். 
      கான்காபூரும் நரசிம்மவாடியும் அவுதம்புரும் பிள்ளவடியும் எப்படியோ, அப்படியே ஷிர்டியும் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் ஒரு புண்ணிய ஷேத்திரம். 

     கோதாவரி நீரே ! கோதாவரி theerame ! கோதாவரியின் குளிர்ந்த kaatre நீங்கள் அஞ்ஞானத்தை அழிக்கிறீர்கள்!
     கோதாவரியின் மகிமையை உலகமே அறியும். ஒருவரை விட மற்றொருவர் பிரபலமாக , பல தலை சிறந்த ஞானிகள்  கோதாவரி நதிக் கரையிலிருந்து வந்தனர். 

     கோதாவரி நதி தீரத்தில் அமைந்த பல புண்ணிய தலங்கள் புராணத்தில் விவரிக்கப் பட்டிருக்கின்றன. கோதாவரி நீர் அருந்தினாலும் ஸ்நானம் செய்தாலும் பாவங்களை ஒழிப்பது மட்டுமல்லாமல் இவ்வுலக துன்பங்களில் இருந்தும் விடுதலை அளிக்கும்.

    இதே கோதாவரி நதி, அஹமத் நகர் ஜில்லா, கோபர்கான் தாலுகாவில் உள்ள கோபர்காவின் அருகே வளைந்து வந்து புனித பயணிகளுக்கு ஷீரடிக்கு வழி காட்டுகிறது. 
     கோதாவரியை கடந்து எதிர் கரைக்கு வந்து அங்கிருந்து ஆறு மைல் தூரத்தில் இருக்கும் நிம்காங்குக்குள் நுழையும் போது ஷிர்டி நேராக கண்களுக்கு தென்படுகிறது.
     நிவிருத்தி, ஞான தேவர் , முக்தா பாய் , நாம தேவர், ஜனா பாய் , கோரா கும்பர் , கோனாய், துக்கா ராம் , நர ஹரி , நர்சி பாய் , சஜன் கசாய் , சாவாத மாலி . 

    இவர்கள் எல்லோரும் முற்கால ஞானிகள்! சமீப காலத்திலும் ஞானிகள் வாழ்ந்து இருக்கின்றனர். அவதிப் படுபவர்களுக்கும் , துன்பத்தில் உழல் பவர்களுக்கும் அடைக்கலமாக விளங்கிய இவர்கள் அனைவரும் வாசுதேவ குடும்பிகள்.
     சமர்த்த ராம தாசர் என்னும் புகழ் petra ஞானி, உலகத்தை உயிவிப்பதாக கோதாவரி நதி தீரத்தில் இருந்து கிருஷ்ணா நதி தீரத் திற்கு சென்றார். 

     அதுபோலவே , யோகீச்வரரான சாய் ஷிர்டி செய்த புண்ணியத்தாலும்  உலக ஷேமத்திற்காகாவும் கோதாவரி கரைக்கு அருகில் வந்து சேர்ந்தார். 

     இரும்பை தொட்டுப் பொன்னாக்கும் பரீஸ். ஞானிகளுக்கு உதாரணமாக காட்டப் படுகிறது. பக்தர்களை முழுமையாக மாறுதல் அடையச் அடையச்தம்முடைய nilaikke  உயர்த்தி விடும்  அளவிற்கு, ஞானிகளுடைய வழிமுறைகள் அதிசயமானவை.