valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 October 2011

காவியம் எழுத பாபா சம்மதித்தது

"என்னுடைய சரித்திரத்தை எழுதுவதற்கு உமக்கு முழு அனுமதி உண்டு" என்று சொல்லி, சாயி எனக்கு முழுமையான உறுதி மொழி தந்தார்.
   "உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக ; மனதில் அணுவளவு தயக்கமும் வேண்டா; என்னுடைய வார்த்தைகளில் முழு விசுவாசம் வைத்து , மனத்தை திடப்படுத்திக் கொள்வீராக ; -

    "என்னுடைய லீலைகள் எழுதபட்டால், அஞ்ஞானத்தால் ஏற்பட்ட தோஷங்கள் உடைந்து விடும். பக்தி பாவனையுடன் கேட்கப்பட்டால் , வாழ்கையின் சிறு தொல்லைகளும் பிரச்சினைகளும் மறந்து போகும். 

    "கேள்விக்கடலில் பக்தியும் பிரேமையும் அலைகளாக ஆர்ப்பரிக்கும். மீண்டும் மீண்டும் கேள்விக்கடலில் முத்துக் குளித்தால், ஞான ரத்தினங்களை உங்களுடைய கரங்களில் கொண்டு வந்து சேர்க்கும். "
     இதைக் கேட்டவுடன் என் சந்தேகங்கள் அனைத்தும் பறந்தோடிவிட்டன. சாயியின் பாதங்களில் விழுந்து பணிந்து, மனத்துதிதவாறு அவருடைய சரித்திரத்தை எழுத ஆரம்பித்தேன்.
     இச் சொற்கள் பாபாவின் உதடுகளில் இருந்து, வெளி வந்தவுடன் பாபாவின் சரித்திரம் நிச்சயமாக எழுதப் படப் போகிறது என்னும் நிகழ்வுக்கு நற்சகுனமாக அதை என் மனதில் இறுதிக் கொண்டேன். நான் ஒரு சேவகன் மட்டுமே.
    ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான் ; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்! பிரேமைக்கு அடிமையாகி கள்ளங் கபடமற்ற எளிமையான் பக்தனைத்  தேடி அலைகிறான். வெளி வேஷம் போடுபவர்களுக்கு அவன் என்றுமே அகப்படுவதில்லை.
    "உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது. எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. பார்! இதைத் தான் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.
    "சாமா! நான் ஒன்று சொல்லுகின்றேன். கேள்! யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன். இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது. -
    "என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தை சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர். -
    "ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான். -
    "என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது சத்தியமான உண்மை. -

    "எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படி புலனின்ப நாட்டம் தலை காட்ட முடியும்? -

     "என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டல்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப் படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்தும் விடுவிப்பேன்.-

"பக்தியுடன் இக் இக்கதைகளை செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள். பிரதிபலித்த பின் தியானம் செய்யுங்கள். உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்.

"நான் எனும் பிரக்ஞை மறைந்து, 'நானே அவன் (இறைவன்) ' என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் கனக்கும்.-

"சாயி சாயி என்ற நாமஸ்மரணம் கலியுகத்தின் மலங்களை எரிக்கும். பேசினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் ஒரே நமச்காரதால் அழிக்கப்படும்"