valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 November 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது..!

என்ன நாதம் எழுகிறதென்பதில்  புல்லாங்குலலுக்கோ, ஆர்மோனியத்திற்கோ சிரமம் என்ன இருக்கிறது.? சிரமம் அனைத்தும் வாசிப்பவனுடையதுதானே ? நான் எதற்காகக் கவலைப் பட வேண்டும்? 



     பாபாவின் தெய்வீகமான கீர்த்தியின் வர்ணனையைச் செவிமடுப்பது பக்தர்களின் மனமலன்களை எரிக்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சுலபமான  பாதை இதுவே.

     மாயையைக் கடந்த சுத்த பிரம்மம் எது? மாயையை எவ்விதம் கடப்பது? ஹரிக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? கர்மங்களையும் தர்மங்களையும் தொடர்ந்து பின்பற்றுவதாலா?

     மனிதன் கடைசியாக அடையக் கூடிய மிக உன்னதமான நிலை எது? பக்தி எது? முக்தி எது? விரக்தி எது? அத்வைதம் என்றால் என்ன? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? இத்யாதி விஷயங்கள் மறை பொருளான வை .

    இவ்விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஞான தாகத்தை தனித்துக் கொள்ள, ஞானேஸ்வர், ஏசுநாதர் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்க வேண்டும். 


     கிருத யுகத்தில் மனதையும், புலன்களையும் அடக்கி தவம் செய்தல், திரேதா யுகத்தில் யாகம் செய்தல், துவாபர யுகத்தில் சடங்குகளோடு கூடிய பூஜை செய்தல், கலியுகத்தில் கதா கால சேபமும் நாம சங்கீர்த்தனம் செய்தல் -  இவை முக்தி அடைவதற்கு உண்டான சாதனங்கலாம். இதில் கலியுக சாதனம் மிக சுலபமானது. 

    குருவின் கதைகளை கேட்பதென்னும் முக்தி மார்க்கம் நான்கு வர்ணதார்க்கும் உண்டு.  பெண்களாக இருந்தாலும் பிற்படுதப்பட்டவராக இருப்பினும் ஜாதியே இல்லாதவராக இருப்பினும் இவர்களனைவருக்கும் மார்க்கம் இதுவே. 

    புண்ணியம் சேர்த்தவர்களே இக்காதைகளை கேட்பார்கள். சிலருக்கு கேட்டுக் கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும். அவர்களையும் ஸ்ரீஹரி எழுப்பி விடுவார். 
    முடிவே இல்லாத புலனின்பங்களை நாடி ஓடி, அடைய முடியாததால் மனமுடிந்து போனவர்களுக்கு கூட, ஞானிகளின் கதாமிர்தம் புளிநின்ப வேட்கைகளிருந்து விடுதலை அளிக்கும். 

     யோகமும் யாகமும் தானமும் தாரணியும் நாலாவிதமான பெருமுயற்சிகளால் அடைய வேண்டியவை. ஒரு முகமான கவனம் ஒன்றை தவிர, இக் கதை கேட்பதில் ஆயாசம் தேவையில்லை. 
       இவ்விதமாக, சாயியின் கதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை நல்லோர் செவி மடுக்கட்டும். அவர்களுடைய பஞ்ச மகா பாபங்களும் வேரோடு எரித்து நாசமாகப் படும். 

      மனிதப் பிறவி எனும் பந்தத்தில் நாம் இறுக்கமாக கட்டப் பாடிருக்கிறோம். இந்தக் கட்டுக்குள் நம்முடைய நிஜ ரூபம் மறைந்து கொண்டிருக்கிறது. கதைகளை கேட்பது இக் கட்டுகளை தளர்த்தி ஆத்மா தரிசனம் கிடைக்க செய்யும். 

     ஆகவே, இக் கதைகளை பரண பரியந்தம் நினைவில் வைப்போம். தினமும் இவற்றை பரிசீலிப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் போசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும். 

      பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக்கதைகளை படிப்பதாலும்  கேட்பதாலும்    சாயி தியானம் இயல்பாகவே மலரும். சாயியின் ரூபம் கண் முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும். 

     இவ்வாறு சத்குருவின் மீது பக்தி செலுத்துவதால் உலக வாழ்கையில் பற்றற்ற மனப் பான்மை வளரட்டும். குருவைப் பற்றிய நினைவில் பிரிதி உண்டாகி, மனம் நிர்மலகாட்டும். 

     இவ்வெண்ணம் கொண்டே, சாயி என்னை ஆசிர்வதித்து இருக்க வேண்டும். என்னை சாக்காக வைத்துக் கொண்டு அவருடைய திட்டத்தை அவரே நிறைவேற்றிக் கொள்கிறார். 


    பால் மிகுதியாக சுரந்து, மடி கனத்து வலித்தாலும், கன்றில்லாமல் பசு பாலை வெளியே விடாது. இது பசுவினுடைய உடன் பிறந்த குணம். சாயியினுடைய அருளும் அவ்வாறே. 

     சாதக பறவையான நான் இதற்கு ஆசைப் பட்டபோது, என்னுடைய அல்ப தாகத்தை மட்டுமுல்லாமல் மற்ற பக்தர்களின் தாகத்தையும் தீர்க்கும் வகையில் என் அன்னை என் மீது ஆனந்த மழையாகப் பொழிந்தார்.