valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 31 May 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

ஒரு கோணிப் பையை ஆசனமாக ஏற்று, மற்றொரு கோணிப் பையை படுக்கை விரிப்பாக்கிக் கொண்டார். தாம் அணிந்து கொண்ட கந்தைத் துணிகளிலும் த்ரிருப்தி கண்டார்.

வறுமையே மகோன்னதமான சாம்ராஜ்யம்; பணகாரனுடைய ஆடம்பரத்தை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. 'அல்லா ஏழைகளையே நேசிக்கிறார்' என்று பாபா அடிக்கடி சொல்லுவார்.

கங்காகீருக்கும் வாழ்கையில் இந்நிலை ஒரு சமயத்தில் வந்தது. மல்யுத்தப் பிரியரான அவர், ஒரு முறை மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே திடீரென்று சலிப்படைந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தார்.

பிராப்தம் வந்த காலத்து, ஒரு சித்தருடைய வார்த்தைகள் அவருடைய காதுகளை அசரீரியாக வந்தடைந்தன. "இப்பூதவுடல் கடவுளிடம் விளையாடுவதில் கரைவதே சிலாக்கியம். "

அவர் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே, இவ்வநுக்கிரஹ ரூபமான வார்த்தைகள் அவருடைய காதுகளில் விழுந்தன. உலகியல் வாழ்க்கையைத் துறந்து இறைவனை தேடும் பாதையில் இறங்கி விட்டார்.

அவருடைய மேடம் புந்தாம்பே வுக்கு அருகில், கோதாவரி நதி இரண்டாகப் பிரிந்து மறுபடியும் கூடுவதால் ஏற்படும் தீவில் இருக்கிறது. சேவை செய்யும் ஆர்வமுள்ள சிஷ்யர்களும் அநேகர் அங்கு இருக்கின்றனர்.

நாள்கள் ஆக, ஆக , சாயி நாதர், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லி வந்தார். தாமாக யாரிடமும் பேசுவதில்லை.

பகல் நேரத்தில் வேப்பமரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். சில சமயங்களில் கிராம எல்லையான ஓடையின் கரையில் இருந்த ஒரு கருவேல மரத்தின் குறுக்கு வாட்டமாக வளந்த கிளையில் கீழ் அமர்ந்திருப்பார்.

சில நாள்களில் அவர் விருப்பபட்டபோது மதியத்திற்குப் பிறகு, கால்போனவாக்கில் நடந்து ஒரு மைல் தூரத்திலிருந்து நிம்காங்க்வ் கிராமதினருகில் செல்வார்.

புகழ்பெற்ற  த்ரியம்பக டங்களே நிம்காங்க்வினுடைய ஜாகீர்தாராக இருந்தவர். பாபா சாஹேப், அவருடைய வம்சத்தில் பிறந்தவர். பாபா இந்த பாபா சஹேப்பை மிகவும் நேசித்தார்.

நிம் காங்கிற்கு சிறு நடையாகப் போனபோதெல்லாம், பாபா அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடன் அந்நாள் முழுவதும் மிகுந்த பிரேமையுடன் பேசிக் கொண்டிருப்பார்.

பாபா சாஹேப்பிற்கு, நானா சாஹேப் என்னும் பெயர் கொண்ட தம்பியொருவர் இருந்தார். புத்திரப் பாக்கியம் இல்லாததால் நானா எப்பொழுதும் மன வருத்தத்துடன் இருந்தார்.

முதல் மனைவிக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படும் வாய்ப்பேதும் இல்லது போனதால், நானா இரண்டாவது மனைவியை மணந்து கொண்டார். ஆனால், எவராலும் குணானு பந்தத்திலிருந்து (முன் ஜன்ம வினைகளும் தளைகளும்) தப்பிக்க முடியாது. தெய்வத்தின் வழிகள் மர்மமானவை!