valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 March 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்

பாட்டு

ஓ. சத்குருராயா, உம்முடைய சக்தி எல்லையற்றது, லீலைகள் அற்புதமானவை! மந்தபுத்திக்காரர்களையும் படிப்பறிவில்லாத வர்களையும் சம்சார சாகரத்தின் அக்கறை சேர்க்கும் நாவாய் நீரே, - பல்லவி 

வேணீ மாதவராக மாறி, பிரயாகையை உமது பாதங்களில் கொண்டுவந்தீர்; கங்கையையும் யமுனையையும் கால் கட்டைவிரல்களிளிருந்து பெருக்குவதற்காகவே. 

தாமரையில் பிறந்தவரும் (பிரம்மா) இலக்குமியின் கணவரும் (விஷ்ணு) சங்கரருமாகிய நீரே முக்குணங்களின் சாராம்சமாக ஆனீர்; 
ஓ சமர்த்த சாயியே! நீர் இப் பூவுலகில் நடமாடியபோது. (2 )

பிரம்மாவினுடைய  ஞானம் சில நேரம் உம்முடைய வார்த்தைகளில் சொட்டுகிறது; சில நேரங்களில் தாமச குணத்தை காட்டுவதற்காக உருத்திரனின் பயங்கரமான உருவத்தை ஏற்கிறீர். (3 )

சில சமயங்களில் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்று பால லீலைகளில் ஈடுபடுகிறீர். 
சில சமயங்களில் நீர் பதர்களின் மனமாகிய நீர்நிலையில் நீந்தும் அன்னம். (4 )

 முஸ்லீம் என்று சொன்னால், சந்தனத்தின் மேல் பிரேமை கொண்டீர்; 
ஹிந்து என்று சொன்னால், மசூதியில் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறீர்! (5 )

பிச்சை எடுத்தன்றோ பிழைக்கிறீர். செல்வந்தரென்று எப்படிச் சொல்வது? 
குபேரனையும் வெட்கமடையச் செய்யும் தர்மதாதவைப் பக்கீரென்று சொல்வதெப்படி? (6 )

மசூதி உம்முடைய வாசம் என்றால், நெருப்பு எப்பொழுதும் எரிகிறது துனியில், 
மக்களுக்கு உதீ கொடுக்க. (7 )

உதய காலத்திலிருந்தே விசுவாசமுள்ளவர் தொழுகைக்கு வருகின்றனர். 
சூரியன் உச்சிக்கு வந்து மதிய ஆரத்தி செய்யப்படும் வரை. (8 )

தேவகணங்கள் இறைவனைச் சுற்றி நிற்பதுபோல பக்தர்கள் நிற்கின்றனர்;
சாமரதைக் கையிலேந்தி  உம்  தலைக்கு மேல் விசிறி விட. (9 )