valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 February 2011

வளம் தரும் சாய்!

சாய் பக்தர்களுக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும்! உங்கள் துயரங்கள் மறைந்து வாழ்வில் பல வெற்றிகள் உண்டாகட்டும்!
     ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாபாவிற்காக விரதமிருந்து அவரது நாமத்தை நம் மனதினில் பல முறை உச்சரித்து வர, நமது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக மாறி விடும். 

     சாயி சத் சரிதத்தை எத்தனை பக்தர்கள் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆதலால் அச் சரிதத்தின் சில பகுதிகளை நமது சாயி அனபர்களுக்கு தரலாம் என்றிருக்கிறேன். தமிழ் அன்பர்கள் இதனை படித்து பயன் அடைவீர்களாக!

     இந்த சாயி சத் சரித்திரம், சாயி பக்தர் ஹேமாத் பந்த் என்னும் திரு.கோவிந்த ரகுநாத தபோல்கர் என்பவரால் எழுதப்பட்ட காவியமாகும். பாபா அவர்களின் அனுமதி பெற்றே இத் திரு காவியத்தை எழுதியுள்ளார். 
    தபோல்கர் ஒரு  மராட்டியர். ஆதலால் இக்காவியத்தை மராட்டி மொழியிலேயே எழுதியுள்ளார். பிறகு அனைவரும் படிக்கும் விதமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் திரு. நாகேஷ் வாசு தேவ் குனாஜி அவர்கள். நமது தமிழ் மொழியில் முதல் முதலாக மொழி பெயர்ப்பு செய்தவர் திரு. A,S. சுப்ரமணியன் அவர்கள். 
     இக் காவியத்தை கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே மொழி பெயர்த்தவர் திரு. வே. சுப்பிரமணிய ஷர்மா ஆவார்.
     சாயி பாபா அவர்களின் சரித்திரத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய அவா.தமிழ் சாயி அன்பர்கள் அனைவரும் இதனை படித்து அனைத்து செல்வங்களும் பெற சத்குரு ஸ்ரீ சாயி பாபா அவர்களை வேண்டுகிறேன்.

 புராதானமானதும் மிக்க மரியாதை உள்ளதுமான வழக்கத்தின் படி , ஹேமாத் பந்த், இந்த சாய் சத் சரிதத்தை பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.
  முதன் முதலில் அவர் சாயி பாபா அவர்களைப் பார்த்த காட்சியை விவரிக்கிறார். கொஞ்சம் கேளுங்களேன்.
   1910 ஆம் ஆண்டிற்கு பின், எப்போதோ ஒரு நாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாயி பாபாவை தரிசிப்பதற்காக சென்றிருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தன முகம் வாய் இவற்றை கழுவிய பின்னர் கோதுமை மாவு தயாரிப்பதற்கு முனைந்தார். ஒரு சாக்கை தரையில் விரித்து, அதன் மேல் திரு கையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து பின் தம் கப்னியின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, கையளவு திருகை குழியில் இட்டார். திருகையை சுற்றி, கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய வேலையென்ன என்றவாறு நினைத்தேன். அங்கு வந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயினும், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்க துணிவு வரவில்லை. பாபா மாவரிக்கும் இந்த செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும் பெண்களும் பாபாவின் செய்கையை காண பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலியவந்து நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கி விட்டு, வலிய குச்சியை கைப்பற்றி பாபாவின் லீலைகளை பாடியவாறு மாவரைக்க தொடங்கினர். முதலில் பாபா கடும் கோபம் அடைந்தார். ஆயினும், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோசம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ பிள்ளைகளோ இன்றி அவரைக் கவனிக்க யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தாராதளாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவை இல்லை, எனவே இவ்வளவு அதிகமான மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பைருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்து விடுவார்" என்றவாறு எண்ணமிட்டபடி பாடியவாறே அரிது முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்தி வைத்து விட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாக பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக ஐடுதுக்க் கொள்ளத் தொடங்கினார்கள். இதுவரை அமைதியாகவுக் அடக்கமாகவும் இருந்த  பாபா, கோபமடைந்து "பெண்களே! உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை அபகரிக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவு செய்து இப்போது இதைச் செய்யுங்கள்; இம்மவாவை எடுத்துச் சென்று கிராம எல்லையில் கொட்டி விட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள்ள எதோ முணுமுணுத்துக் கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடியே அங்கே மாவை பரப்பி விட்டார்கள். 
     பாபா செய்த இவைகளெல்லாம் என்னெவென்று ஷிர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டிருப்பதாயும் , இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரிக்கப்படவில்லை. காலராவே அரிக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியே கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து மக்கள் மகிழ்ச்சி யுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. "காலர்ரவுக்கும் கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதரணமாக அவைகளுக்கு உள்ள ஒற்றுமை என்ன? அவை இரண்டையும் எங்கனம் இணைக்க முடியும்? இந்நிகழ்ச்சி விவரிக்க முடியாததாய் இருக்கிறது. நான் இதைப் பற்றி சிறிது எழுதி என் மனம் நிறைவடையும் வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்" இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக என்னமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான 'சத் சரித்திரத்தை' எழுத உணர்ச்சியூட்டப்பட்டேன். 
     மாவரைத்ததன் உட்கருத்து:
      ஷிர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைத்த காரணத்தை தவிர வேறு ஒரு
தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சாய்பாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஷீரடியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமை மாத்திரமன்று, பாவங்கள், உள்ளம், உடல் ஆகியவற்றின் துன்பன்க்களையும் கணக்கில்லாத் தன அடியார்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ் கல்லாகும். பின்னது மேல் கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச என்ற முக்குணங்களை சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகலந்துகலாக்கி முன்னோடி வேலையாக அறைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும்.
     ஸ்ரீ சாயியை  பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்...!