valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 December 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது ...!

கல்மாக்கள் அளிக்கும் ஞானம் எங்கே? கிராம மக்களின் சிறிய தாபங்களும் சொத்தல் குற்றச் சாட்டுகளும் எங்கே? கிராம மக்களுக்கு ஒரு பாடம் புகட்டவே பாபா இந்த நாடகம் ஆடினார். 

     "இறைவனின் நாமத்தில் காதல் கொண்ட காரணத்தால், ரோஹிலா எனக்கு வேண்டியவன்." என்ற தம்முடைய அபிப்பிராயத்தை எல்லோரும் நன்கு புரிந்துகொள்ளும்படி செய்தார். என்னே பாபாவின் சக்தி! 

    காண்பவனிலும் காணும் செயலிலும் காணப்படும் பொருளிலும் இறைவனைக் காண்பவர்க்கு பிராமணனும் படாணனும்  வேறெவனும் ஒருவனே..

     ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது பாபா என்ன திருவாய் மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள். 

     "நீங்கள் எங்கிருந்தாலும் சரி. என்ன செய்தாலும் சரி. இதை நன்கு ஞாபகம், வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக விவரமாக தெரியும். 

      "நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன் ஒவ்வொருடைய இதயத்திலும் உறைபவன், எங்கும் செல்பவன். நான் எல்லோருக்கும் சுவாமி. "-


      "உயிருள்ளவையும் உயிரில்லாதவையும்  நிறைந்த இந்த சிருஷ்டியில் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன். தனியாகவும் இருக்கிறேன். இது அனைத்தும் தெய்வீக பொம்மலாட்டம். சூத்திரதாரி நானே. 

      "நான் இப்பிரபஞ்சதிற்கும் அதற்குள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய். முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே. இந்திரியங்களை தூண்டி விடுபவனும் நானே; நானே இப்பிரபஞ்சந்தை படைப்பவனும் காப்பவனும்  அழிப்பவனுமாம்;"-

    "எவன் தன்கவனத்தை  என் மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் பட மாட்டான். ஆனால், என்னை மறந்து விடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சௌக்கடி படுவான். -

    "ஈயாயினும்  எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்கு தெரியும் இந்த உலகம் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருட்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜ ரூபமே.

     "எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவாரசியமான சூசகம் இது! இறைவனுக்கும் முனிவர்களுக்கும் பேதமே இல்லை. உலகத்தை உய்விக்கவே அவதாரம் நிகழ்கிறது. 

    குருவின் பாதங்களில் அமிழ்ந்து போக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளை பாட வேண்டும். அல்லது குருவின் கதைகளை காலட்சேபம் செய்ய வேண்டும். அல்லது குருவின் கதைகளை பக்தியுடன் கேட்க வேண்டும். 
     சாதகன் குருவின் கதைகளை கேட்கும்போது, கேட்பவனும் கேள்வியும் ஒன்றாகி, மனம் யோகா நிலையை  அடையும். 

     தினசரி நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக காதில் விழும் குருவின் கதை, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு நன்மை பல செய்யும். இதில் கேட்டவருடைய முயற்சி எதுவுமில்லை. 

     இப்படி இருக்கும் பொழுது, பக்தி பாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு ஆன்மீக லாபம் கிடைக்கும். கதை கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இது பற்றி சிந்திக்க வேண்டும். 
      இந்த முறையில், குருவின் திருவடிகளின் மேல் பிரேமை உண்டாகும். படிப்படியாக மிக உயர்ந்த ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமும் நிஷ்டையும் தேவை இல்லை. வாழ்க்கையே பரம மங்கலமானதாக மலரும். 

      மனம் இவ்வாறு கட்டுப் படும்பொழுது, கதைகளை கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாகும்; புலனின்ப கட்டுகள் தாமே உடைந்துவிடும். பரமானந்த அனுபவம் ஏற்படும்.

      பாபாவினுடைய இனிமையான வார்த்தைகளை கேட்டபின், நான் மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதை விட்டுவிட்டு, குருவின் சேவையில் மாத்திரமே என்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என தீர்மானம் செய்து விட்டேன்.  


    இருப்பினும், என் மனத்தில் ஏக்கமும் சலசலப்பும் இருந்தது. அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும் என்றுதான் பாபா பதில் சொல்லியிருந்தார். அதற்க்கு நிரூபணம் ஏதாவது கிடைக்குமா?
      பாபாவினுடைய சொல் நிறைவேறாது போவதென்பது சாதாரணமாக நடக்கும் காரியம் அன்று. ஆகவே, நான் மறுபடியும்  மனிதர்களுக்கு அடிமை வேலை செய்வதில் மாட்டிக கொள்ளலாம்; ஆனால், அது எனக்கு வாஸ்தவமான நன்மை எதையும் தரப் போவதில்லை. 

     அண்ணா சிஞ்சநீகரின் சொந்த உந்துதலாலேயே கேட்கப் பட்ட கேள்வி எனினும், நான் இன்னுமோர் உத்தியோகத்தை விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. இந்த விருப்பம் முன் வினையால் ஏற்பட்டதன்று. 


     இன்னுமொரு உத்தியோகம் கிடைக்கவேண்டுமென்று எனக்கும் உள்மனதில் ஓர் ஆசைதான். மருந்தை குடிக்கக் கொடுக்கும்போது வெல்லக் கட்டியைக் காட்டி ஆசைக் காட்டு வது போல சாயியும் எனக்கு ஆசை காட்டி விட்டார்.      

     வெல்லம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் மருந்தை குடித்துவிட்டேன்.; திருப்தி அடைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். எதிர்பாரதவிதமாக எனக்கு உத்தியோகம் கிடைத்தது. திரவிய லாபத்தில் எனக்கிருந்த ஆசையால் அதை ஏற்றுக் கொண்டேன். 

     ஆனால், இனிப்புபண்டமாயினும் எவ்வளவு தான் தின்ன முடியும்? வெல்லமும் பிடிக்காத நிலையும் வந்துதானே தீரும்.! அச் சமயத்தில் பாபாவினுடைய அமுதமான உபதேச மொழிகள் மிகச் சிறந்த சுவையை அளித்தன. 

  
      கிடைத்த உத்தியோகம் நீண்ட காலம் ஓட வில்லை. வந்த வழியே போய்விட்டது. உண்மையானதும் நிரந்தரமானதுமான சௌக்கியம் அளிக்கும் வகையில், பாபா என்னை பழைய நிலைக்கே திரும்ப கொண்டு வந்தார்.