ஷீர்டி சாயி சத்சரிதம்
இதுவரை சொன்ன கதைகளைப்பற்றி ஹேமாட் பந்துக்கு என்ன தெரியும்? கதைகளைச் சொன்னவர் சமர்த்த சாயி! அவற்றை எழுதியவரும் எழுதவைத்தவரும் அவரே!
எத்தனை கதைகள் சொல்லியும் அந்த மனம் திருப்தியடையவில்லை; சமர்த்த சாயியின் கதை அத்தகையது! மேலும் மேலும் சொல்லவேண்டுமென்ற ஆசை என் சித்தத்தில் குடிகொண்டுள்ளது. கேட்பவர்களும் ஆனந்தமாக கேட்கின்றனர்.
மேலும், சாயியின் கீர்த்தியைப் பாடுபவர்கள், சத்பாவத்துடன் கேட்பவர்கள், இரு சாராருமே சாயி சொரூபம் ஆகிவிடுகின்றனர். இதை திடமான சித்தத்துடன் அறிந்துகொள்வீராக!
இத்துடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்து சாயிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்; பிரேமையுடன் சாயியின் பாதங்களைப் பற்றிக்கொள்கிறேன். மேற்கொண்டு விவரணம் அதன் வழியே தொடரும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மகாசமாதி' என்னும் நாற்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.