ஷீர்டி சாயி சத்சரிதம்
'யார் என்னுடன் வந்து பாபாவுக்கு அருகில் அழைத்துச்சென்று அவருடைய பாதங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்?' என்று சிந்தனையில் தீக்ஷிதர் மனவுளைச்சலுற்றார்.
தேர்தல் சம்பந்தமான வேலை முடிந்தவுடன், தீக்ஷிதர் ஷீர்டி பயணம் பற்றி விசாரப்பட்டுக் காகா சாஹேப் மிரீகரிடம் அதைப்பற்றி மரியாதையாக விசாரித்தார்.
பாலா சாஹேப் மிரீகர், காகா சாஹேப் மிரீகரின் மகன். 'ஷிர்டிக்கு தீக்ஷிதருடன் யாரை அனுப்புவது?' என்று இருவரும் பரஸ்பரம் ஆலோசனை செய்தனர்.
அவர்கள் இருவரில் ஒருவர் செல்ல முடிந்தால், வேறு துணை ஏதும் தேவைப்படாது. ஆகவே, 'இருவரில் யார் செல்வது?' என்பதை நிச்சயிக்கத் தீவிரமாக யோசித்தனர்.
மனிதன் போடும் திட்டங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. இறைவனின் திட்டங்களோ முற்றிலும் வேறு விதமானவை. தீக்ஷிதரின் ஷீரடிப் பயணத்துக்கு உதவுவதற்காக கற்பனை செய்யமுடியாத நிகழ்வு ஒன்று உருவாகியது.
இங்கு இவ்விதமான மனஉளைச்சல்; அங்கு (ஷிர்டியில்) வேறுவிதமான அசைவு, பக்தனின் பேரார்வத்தைக் கண்ட சமர்த்த சாயி மனம் கனிந்தார்.
இவ்வாறு தீக்ஷிதர் சிந்தனை செய்தவாறு மனவுளைச்சலுடன் அமர்ந்திருந்தபோது எல்லா மக்களும் ஆச்சரியப்படும் வகையில் மாதவராவ் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தார்!
அஹமத்நகரத்திலிருந்து மாதவராவின் மாமனார், "உம் மாமியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உடனே குடும்பத்துடன் கிளம்பி வரவும்" என்று தந்தி மூலம் செய்தி அனுப்பியிருந்தார்.
தந்தி கிடைத்தவுடன் பயணத்திற்கு ஆயத்தமாகி பாபாவின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு, மாதவராவும் மனைவியும், இருவருமாகச் சிதலீ ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
மூன்று மணி ரயில் வண்டியைப் பிடித்து இருவரும் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தனர். குதிரைவண்டி வீட்டுவாசலில் வந்து நின்றது. இருவரும் கீழே இறங்கினர்.
இதற்கிடையே, நானாசாஹேப் பான்ஸ்லேவும், அப்பா சாஹேப் கத்ரேவும் குதிரைக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக அதேசமயத்தில் அவ்வழியாகச் செல்லும்படி நேரிட்டது.
மாதவராவ் வண்டியிலிருந்து இறங்குவதை எதிர்பாராதவிதமாக பார்த்த அவ்விருவரும் வியப்படைந்தனர். மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அவர்களால் அடக்கமுடியவில்லை.
"ஷிர்டியின் பட்வாவான மாதவராவ் இங்கு வந்திருப்பது எவ்வளவு தெய்வீகமான செயல்! தீக்ஷிதரை ஷிர்டிக்கு அழைத்துச்செல்ல இவரைவிடச் சிறந்தவர் எவரும் உளரோ?" என்று அவர்கள் இருவரும் கூறினர்.
பிறகு அவர்கள் மாதவராவைக் கூவியழைத்துச் சொன்னார்கள், "காகா தீக்ஷிதர் வந்திருக்கிறார். மிரீகரின் வீட்டில் இருக்கிறார். பாபா செய்திருக்கும் அற்புதத்தை நீங்கள் போய்ப் பாருங்கள். -
