valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 September 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"ஆகவே, சாயி தரிசனம் செய்யும்போது இதை மறந்துவிடாதீர்.  நன்கு நினைவில் வைத்துக்கொண்டு சாயி பாதங்களில் தேங்காயை அர்ப்பணம் செய்யுங்கள்."

சுவாமி கூறியதைக் கேட்ட புண்டலீக ராவ் அவருடைய பாதங்களில் பணிந்து சொன்னார், "சுவாமியின் ஆணை எப்படியோ அப்படியே அது நிறைவேற்றப்படும். -

"இந்த ஆணையை நான் சிரமேற்கொண்டேன்.  நீங்கள் என்னை பாக்கியவனாக ஆக்கியதாகக் கருதுகிறேன்."  இவ்வாறாக, சுவாமியை அனன்னியமாக சரணடைந்தபின் புண்டலீக ராவ் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். 

சுவாமி பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்ற செயலை என்ன?  "ஜீவிதமாக இருக்கும்வரை தினமும் அக்கினிஹோத்திரம் (நாள்தோறும் செய்யும் தீவேள்வி)  செய்வாயாக" என்பது சுருதியின் ஆணை.  பாபா அதை பின்பற்றினார். 

மக்கள் எதை 'துனி' (DHUNI ) என்று சொன்னார்களோ, அது பாபாவின் சன்னிதியில் எப்பொழுதும் இருந்தது.  24  மணி நேரமும் அது ஜுவாலையுடன் எரிந்துகொண்டிருந்தது.  அது பாபாவின் விரதம். 

மனத்தைத் தூய்மைப்படுத்தும் அக்கினிஹோத்திரம் போன்ற சடங்குகள், முழுமுதற்பொருளை அடையும் சாதனங்கள் என்பது பிரமாணம்.  பாபா மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அதை ஏற்றுக்கொண்டார். 

ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி, 'யதி' பிரிவைச் சார்ந்த துறவி.  அக்கினிஹோத்திரம் போன்ற விரதங்களையும் கடைப்பிடித்து வந்தார்.  ஆகவே, அவர் பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்றதாகுமோ?

பின்னர், ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே, புண்டலீக ராவுக்கு நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சென்று, சாயிதரிசனம் செய்யும் யோகம் வாய்த்தது. 

அவர்கள் தங்களுக்கு வேண்டிய சாமான்களையும் பழங்களையும், மறந்து போகாமல் தேங்காயையும் எடுத்துச் சென்றனர்.  மனத்தில் ஆனந்தமும் சாந்தமும் நிரம்பிய நிலையில் ஐவரும் சாயிதரிசனத்திற்குப் புறப்பட்டனர். 

பிறகு மன்மாடில் இறங்கினர்.  கோபர்காங்வ் வண்டி வருவதற்குச் சிறிது அவகாசம் (கால இடைவெளி ) இருந்தது.  ஆகவே, தாகத்தைத் தணித்துக்கொள்ள ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த ஓடைக்குச் சென்றனர். 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நலக்கேடு விளையும் என்று கருதி, ஐவரில் ஒருவர், தாம் கொண்டுவந்திருந்த 'சிவடா' (MIXTURE ) பொட்டலத்தை வெளியே எடுத்தார். 

ஒரு சிட்டிகை சிவடாவை வாயில் போட்டுப் பார்த்ததில் காரம் அதிகமாக இருந்தது தெரிந்தது.  கொஞ்சம் தேங்காயை சேர்க்காமல் சிவிடாவைத் தின்னமுடியாத நிலைமை.  சிவ்டாவை கொடுவாரா எடுத்த முயற்சி வீண், என்று அவர்களுக்குத் தோன்றியது. 

ஆகவே, ஒருவர் மற்றவர்களிடம் சொன்னார், "எனக்கு ஒரு யுக்தி (வழிவகை) தோன்றுகிறது.  ஒரு தேங்காயை உடைத்து சிவ்டாவில் கலந்துவிடலாம்.  சிவ்டாவின் அற்புதமான ருசியை அப்பொழுது பாருங்கள்!"






No comments:

Post a Comment