valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 24 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

1912 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், புண்ணிய காலமான வளர்பிறையில், மிகுந்த அன்புடன் பூஜையோடும் பஜனையோடும் வேப்பரமரத்தின் கீழ் 
பாதுகைகளை ஸ்தாபனம் செய்தார்.

ஒரு சுப ஹர்த்த நாளில், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளோடு உபாசனி  சாஸ்திரி என்ற பக்தர் நடத்தி வைத்தவாறு, தாத்தா கேல்கர் தமது கரங்களால் 
பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

பாதுகைகளின் தினசரி பூஜை, தீட்சிதர் என்றழைக்கப்பட்ட பிராமணரிடம்  
ஒப்படைக்கப்பட்டது. பொதுப் பணிகளை சகுண   மேரு நாயக் பார்த்துக்
 கொண்டார். பாதுகைகளுடைய  ஆக்கியானம் (காதை ) இதுவே.

இவ்விதமாகத்தான் நிர்விகாரமானர்களும் இறைவனின் அவதாரமுமான 
ஞானிகள் சுயநலம் ஏதும்  கருதாது உலகத்தை உயிவிப்பதற்காகவே  தோன்றுகிறார்கள் .

(காட்சி இங்கு மாறுகிறது. ஆசிரியர்  காலத்தால் பின்னுக்குப் போய், இளமைப் பருவத்து நிகழ்ச்சியை விவரிக்கிறார்.)

சில நாள்கள் கழித்து  ஆச்சரியமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. இதை 
கவனத்துடன் கேட்டால் கேட்பவர்களும் அதிசயப் படுவார்கள்!

மொஹித்தின் தாம்போளிக்கும் (பீடா வியாபாரி) பாபாவுக்குமிடையே  சில வாக்குவாதங்களும் சச்சரவுகளும்  இருந்து வந்தன. இந்நிலைமை சூடேறி, ஒருநாள் மல்யுத்தம் வரை
 கொண்டு போய்விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டையிட்டனர். 

இருவருமே சிறந்த மல்யுத்த வீரர்கள். ஆயினும், உடல் பலம் விதியை எதிர்த்துப் போராட முடியுமா?மொஹித்துனுக்கு 
அதிக சக்தி கிடைத்தது. பாபாவால் அதற்கு ஈடு கொடுக்க முடியாததால் 
பாபா தோற்கடிக்கப் பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு, பாபா மனதில் ஒரு முடிவெடுத்து விட்டார். அவருடைய 
முழு உடையையும் மாற்றி விட்டார். லங்கோட்டை கட்டிக் கொண்டு அதற்கு
 மேலே   நீண்ட கப்னியை  அணிந்துகொண்டார். ஒருதுணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். 






 


 

Thursday, 17 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

வாமன் தாத்யா  என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத 
(வெயிலில் காய வைக்கப்பட்ட நிலை) பானைகளைக் கொடுப்பார். 
பாபா தம்முடைய கைகளாலேயே  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

கிணற்றின் பக்கத்திலிருந்த கற் தொட்டியிலிருந்து குடங்களில் தண்ணீரைத் 
தோள்களின் மீது சுமந்து செல்வார். சூரிய அஸ்தமன நேரத்தில் குடங்களை 
(வேலையை முடித்துவிட்டு) வேப்பமரத்தடியில் வைத்து விடுவார்.

அவ்வாறு வைக்கப்பட்டவுடன் குடங்கள் தாமாகவே உடைந்து விடும். 
மறுநாள் காலையில் , தாத்யா  மறுபடியும் இரண்டு குடங்களைக் கொண்டு 
வந்து தருவார்.

சூளையிலிட்டு  சுடப்பட்ட குடந்தான் உறுதியாக இருக்கும். நாட்பட உழைக்கும் ஆனால், பபவுக்குச் சுடாத குடந்தான் தேவைப்பட்டது . இவ்விதமாக, குயவரால் தினமும் இரண்டு பானைகளைச் சூளையிலிடும்  சிரமம் இன்றியே விற்க முடிந்தது.

மூன்று ஆண்டுகள் பாபா இதையே முக்கியமான வேலையாக ஏற்றுக்கொண்டு செய்தார். 
இன்று அதிர்ஷ்டவசமாக மக்கள் அனுபவிக்கும் சௌகரியமான சத்திரம் இருக்கும் 
இடத்தில் ஓர் அழகான பூந்தோட்டம் உருவாகியது.

மேலும்,அதே இடத்தில்வேப்ப மரத்தடியில் பாயி என்ற பெயருடைய பக்தர்
 ஒருவரால், சமர்த்த சுவாமி அக்கல்  கோட்  மகாராஜினுடைய பாதுகைகள் பக்தர்கள் வழிபடுவதற்காக ஸ்தாபனம் 
செய்யப்பட்டிருக்கிறது.

பாயியுனுடைய உபாசனைத் தெய்வம் அக்கல் கோட்  மகாராஜ், அவருடைய உருவப் படத்திற்கு மிகுந்த பக்தியுடன்  நித்திய நியாமாக பாயி 
பூஜை செய்து வந்தார்.

ஒரு சமயம் அவர் அக்கல்  கோட்டிற்க்கு  சென்று, ஸ்வாமியினுடைய  பாதுகைகளை தரிசனம் செய்து கொண்டு, மனம் லயித்து  உபசாரங்களுடன் கூடிய போசை செய்ய வேண்டுமென்ற மனோபாவம் 
கொண்டார்.

ஆகவே, பம்பாயிலிருந்து அக்கல் கோட்  செல்வதற்கும் அங்கு பூஜை செய்வதற்கு முண்டான எல்லா 
ஏற்பாடுகளையும் செய்து, 
பொருள்களையும் தயார் செய்தார்.  கிளம்புவதற்கு முதல்நாள், இத் தீர்மானத்தையும் எல்லா ஏற்பாடுகளையும் றது செய்துவிட்டு, ஷிர்டி போகும் பாதையில் காணப்பட்டார்.

மறுநாள் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிலையில், முதல் நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். கனவில் அக்கல் கோட்  சுவாமி அவருக்கு ஆக்ஞாபனம் (ஆணை) செய்தார், "ஷிர்டியே இப்பொழுது என்னுடைய ஸ்தானமாக ஆகிவிட்டது; ஆகவே, நீர் ஷிர்டிக்குச் செல்வீராக.!

ஆக்ஞை இவ்வாறு இருந்தபோது,  பயபக்தியுடன் அதற்குக் கீழ்படிந்த பாயி பம்பாயிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். ஷீரடியில் ஆறுமாதங்களை  ஆனந்தமாக கழித்தார்.

பாயி பூரணமான விசுவாசமும் நம்பிக்கையும் உடையவராக இருந்ததால்,
தாம் கண்ட கனவுக் காட்சியின் ஞாபகார்த்தமாக, சமர்த்த அக்கல்  கோட்  சுவாமிகள் பாதுகைகளை வேப்ப மரத்தடியில் ஸ்தாபனம் செய்தார்.








Thursday, 10 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இவ்வாறே, கண்காகீர் என்னும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மிகவும் பிரபலமான கிருஹச்த பக்திமான், புந்தாம்பே என்னும் ஊரிலிருந்து அடிக்கடி ஷீரடிக்கு விஜயம் செய்வார்.

சாயி இரண்டு தோள்களிலும் மண் குடங்களைத் தூக்கி  கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதை
 முதன்முதலில் பார்த்து, கங்காகீர்  ஆச்சரியமடைந்தார்.

பின்பு,  சாயீயை நேருக்கு நேராகச் சந்தித்தபோது, கங்காகீர்  புவா தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறினார், "இம் மனிதருள் மாணிக்கத்தின் கூட்டுறவைப்  பெற்ற ஷிர்டி, பாக்கியம் செய்த அதிருஷ்டம் வாய்ந்த கிராமம். 

"இன்று இவர் தோள்களின் மேல் குடம் தூக்கித் தண்ணீர் கொண்டு போகிறார். ஆனால், இந்த மனிதர் சாமானியமானவர் அல்லர். இந்த பூமி செய்த மிகப் பெரும் புண்ணியத்தால் இவர் இங்கு வந்திருக்கிறார். 

இதைப் போலவ, ஆனந்தனாதர் எனும் பெயர் கொண்ட பிரக்யாதி பெற்ற சாதுவும் 
பாபாவினுடைய அற்புதமான, தெய்வீகமான லீலைகள் நடக்கப் போவது பற்றி முன் கூடியே தெரிவித்திருந்தார். 

மகா பிரசித்தி  பெற்ற இந்த ஆனந்த நாதர், யேவலா  என்னும் கிராமத்தில் மடமொன்றை ஸ்தாபிதிருந்தார். ஷிர்டி மக்கள் சிலருடன் ஷீரடிக்கு வந்தார். 

ஆனந்த நாதர்  அக்கல் கோட்  மகாபுருஷரின்  சிஷ்யர் . அவர் சாயியை  நேருக்கு நேராக பார்த்த போது சந்தோஷத்தால் கூவினார். "இதோ ஒரு ரத்தினம், பிரத்யஷமான  ஒரு ரத்தினம்.

"இன்று யாராலும் கவனிக்கப் படாது குப்பைக்குள் அமிழ்ந்திருக்கலாம் . ஆயினும், இது ஒரு ரத்தினமே; கூழாங்கல் அன்று." ஞாபகத்தில் வையுங்கள். இவையே பாபா இளைஞராக இருந்தபோதே ஆனந்த நாதர் சொன்ன வார்த்தைகள் . 

"நான் சொன்ன இவ்வார்த்தைகளை நன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் உங்களுக்கு இது ஞாபகத்திற்கு வரும். " இவ்வாறு அவர் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்து விட்டு 
எவலாவிற்குத் திரும்பிச் சென்று விட்டார்.

சாயி அப்பொழுது எல்லாம் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டார்.  மொட்டை அடித்துக் கொள்ளவே மாட்டார். சாயி இளைஞனாக இருந்தபோது பயில்வானைப் போல் உடை 
அணிந்து கொண்டார்.

எப்பொழுது ரஹைதாவிற்குச் சென்றாலும் துலுக்கச் சாமந்திச் செடிகளையும் 
மல்லிகைச் செடிகளையும்  கொண்டுவருவார். தரிசு நிலத்தில் நட்டுத்  தவறாது தினமும் தண்ணீர் ஊற்றுவார்.



Thursday, 3 May 2012

ஸ்ரீ சாய் சத் சரிதம்

கலியாணம நடந்து முடிந்ததும், கோஷ்டி ஷிர்டியிலிருந்து  தூப்கேடா திரும்பியது. பாபா மட்டும் ஷிர்டியிலேயே தங்கிவிட்டார். ஷிர்டிக்குப் பொற்காலம் பிறந்தது.


அழிவற்றவரும் புராதனவருமான சாய் ஹிந்துவு மல்லர் , முஸ்லீமும் அல்லர். அவருக்கு ஜாதியில்லை, வம்சமில்லை, குலமுமில்லை, 
கோத்திரமும் இல்லை. ஆத்ம ஞானமே அவருடைய உண்மையான அடையாளம்.

சாய் சாயீ  என்று மக்கள் அவரை அழைத்தனர். அது அவருடைய பெயரா என்ன?இல்லவே இல்லை. மரியாதை நிமித்தமாக  அவர் " சாயீயே  வருக " என்று அழைக்கப்பட்டார். அப்படிதான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது .

கலியாணக் கோஷ்டியுடன் கண்டோபா கோயிலுக்கு அருகிலிருந்த 
மகால்சாபதியின் களத்திற்கு  அருகில் பாபா வந்த அன்றுதான்  இது நடந்தது. 

ஆரம்ப காலத்தில் அந்தக் களம் மகால்சாபதிதிக்கு சொந்தமாக இருந்தது. பிற்காலத்தில் அமீன்பாயிக்குச் சொந்தமாயிற்று. கலியாணக் கோஷ்டி வந்தபோது அவ்விடத்தில்தான் ஆலமரத்தடியில் 
வந்து இறங்கியது. 

கண்டோபா கோயிலினுடைய வளாகத்தில் மாடுகள் வண்டியிலிருந்து 
பூட்டவிழ்த்து விடப்பட்டன. பாபாவும் கலியாணக் கோஷ்டியில் இருந்த 
அனைவருடனும் அங்கு இறங்கினார். 

இவ்விளம் பக்கிரி வண்டியிலிருந்து இறங்கியபோது மகால்சாபதிதான் 
அவரை முதலில் கண்டு, "சாயீயே வருக " என்று வரவேற்றார்.

அதன்பிறகு  மக்கள் அவரை சாய் சாய் என்று அழைத்தனர்.  அப் பெயரே நிலைத்துவிட்டது.

அவர் மகால்சாப்தியின் முற்றத்தில் சிறிது நேரம் சில்லிம்  புகைத்தார். பிறகு அங்கிருந்து, தங்குவதற்காக மசூதிக்குச் சென்றார்.  

தேவி தாசரின் சஹாவாசத்தில் மகிழ்ந்து, ஷீரடியில் ஆனந்தமாக வாழ்ந்தார்.

சில சமயம் சாவடியில் உட்கார்ந்திருப்பார். சில சமயங்களில் தேவி தாசருடைய சங்கத்தில் இருப்பார். சில நேரங்களில் மாருதி கோயிலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். எங்கு விருப்பமோ, அங்கு சந்தோஷமாக காலம் கழித்தார். 

பாபா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, தேவி தாசர் ஷீரடியில் இருந்தார். பிறகு, மகானுபவி பிரிவை சேர்ந்த ஜானகிதாஸ் கொசாவியும் ஷீரடிக்கு 
வந்து சேர்த்தார்.

 இந்த ஜானகிதாசரோடு மகாராஜ் (பாபா) பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அல்லது, 
பாபா எங்கிருக்கிறாரோ அங்கு பொய் ஜானகி தாசர் உட்கார்ந்திருப்பார்.

இருவருமே பரஸ்பரம் (ஒருவரை ஒருவர்) நேசித்தனர். அடிக்கடி சந்தித்தனர். இவர்களுடைய நட்பும் 

நல்லுரவ்ரும் கிராம மக்கள் எல்லோருக்குமே சந்தோஷத்தை அளித்தன. 







Thursday, 26 April 2012

சாந்த் பாடீல் அந்த அவளியாகப் போகும்போது, பக்கீர் கூப்பிடும் சப்தம் கேட்டது. "ஒய்! இங்கு வாரும், வாரும்! கொஞ்சம் சில்லும் பிடிதுவிட்டுப் போகலாம்! வந்து இந்த நிழலில் சிறிது நேரம் இளைப்பாறும்" என்று பக்கீர் அழைத்தார்.

பக்கீர் அப்பொழுது கேட்டார், "இந்தச் சேணம் எதற்காக?"  பாட்டீல் பதிலுரைத்தார். "என்னுடைய பெண்குதிரை தொலைந்து போய்விட்டது, ஐயனே!" பக்கீர் சொன்னார், "போம், அந்த ஓடைக்கரையில் தேடும்." பாடீல் அவ்வாறே தேடினார். ஆஹா! குதிரை உடனே அகப்பட்டு விட்டது.

சாந்த் பாடீல் வியப்பிலாழ்ந்து போய் தமக்குள்ளேயே பேசிக் கொண்டார். "சந்தேகமேயில்லை, நான் சந்தித்தது ஒரு அவலியாதான்! (முஸ்லீம் ரிஷி). இந்த அற்புதமான செய்கைக்கு ஈடிணையே இல்லை. அவர் ஒரு சாதாரணர் என்று எப்படிச் சொல்ல முடியும்?"

பிறகு, அவர் குதிரையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மாமரத்தடிக்கு வந்தார்.  பக்கீர் அவரைத் தமது பக்கத்தில் அமர வைத்தார். தம்முடைய கைகளால் ஒரு நெருப்பிடுக்கியை எடுத்தார்.

அடுத்து, பக்கீர் சிம்டாவை (நெருப்பிடுக்கி) பூமியில் செருகினார். அதே இடத்திலிருந்து எரியும் தணல் ஒன்றை பூமியிலிருந்து எடுத்தார். தணலைத் தம் கையிலிருந்த சில்லிமுக்குள் வைத்துவிட்டு சட்காவை எடுத்தார்.

ஏனெனில், சாபியை (கை  சுடாமல் இருப்பதற்காக  சில்லிமின் மீது சுற்றப்படும் ஈரத்துணி) நனைப் பதற்கு தண்ணீர் இல்லை. சட்காவால் பூமியின் மேல் அடித்தார். அடித்த இடத்திலிருந்து தண்ணீர் பெருகியது.

சாபியை நீரில் நனைத்து சில்லிமின் மேல் சுற்றிக் கொண்டார். சில்லிமில் சிறிது புகைபிடித்து விட்டு, சாந்த் பாடீலையும் புகை பிடிக்க வைத்தார். இதையெல்லாம் பார்த்த பாடீலுக்கு தலை சுற்றி மயக்கம் வரும்போல் இருந்தது.

 பாடீல் பக்கீரைத் தமது வீட்டிற்கு வருகை தந்து தமது இல்லத்தை புனிதப் படுத்துமாறு வற்புறுத்தினார். இம்மாதிரியான லீலைகள் புரிவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்த பக்கீர், பாடீலுக்கு இவ்வணுக் கிரகத்தைச் செய்தார்.

அடுத்த நாள், பக்கீர் பாடீலுடன் தங்குவதற்காக கிராமத்தினுள்ளே சென்றார். சிறிது காலம் அவருடன் தங்கினார். பிறகு ஷீரடிக்கு திரும்பி வந்தார்.

சாந்த் பாடீல் தூப்கேடாவின் கிராம அதிகாரி. அவரது மனைவியின் மருமகன் ஷிர்டியிலிருந்த ஒரு பெண்ணை மணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப் பட்டு இருந்தது.

மனைவியின் இந்த மருமகன் கலியாணம் செய்துகொள்ளும் பருவத்தை அடைந்தான். ஷிர்டி கிராமத்து பெண்ணை மணம் செய்துகொள்ளும் பாக்கியமும் பெற்றான்.!

ஆகவே, மாட்டு வண்டிகளுடனும் குதிரைகளுடனும் கலியாணக் கோஷ்டி, உரிய காலத்தில் ஷீரடிக்கு கிளம்பியது. பாபாவும் சாந்த்பாயின் மேலிருந்த பிரியத்தால் கோஷ்டியில் சேர்ந்து கொண்டார்.
 

Thursday, 19 April 2012

காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும் (ஷிர்டி சாய் சத் சரிதம் )

முன்பு சொன்ன காதையைத் தொடர்வோம். திடீரென்று சாய் காணாமற்போனது, மறுபடியும் சந்ட்த்பாடிலின் கோஷ்டியுடன் திரும்பி வந்தது, இவை பற்றி விவரங்களை கூறுகிறேன். கேளுங்கள். 

பூந்தோட்டம் போடுவதற்காக பாபா எவ்வாறு தாமே தண்ணீர் கொண்டுவந்தார் என்பது பற்றியும் கண்காகிஈர் போன்ற ஞானிகளைச் சந்தித்தது பற்றியுமான புனிதமான காதைகளைக் கேளுங்கள். 

பாபா சில காலம் ஷிர்டியிலிருந்து காணாமற் போயிருந்தார். மறுபடியும் முஸ்லீம் கனவானுடன் (சாந்த்பாடீல்) ஷீரடிக்கு வந்த கலியாணக் கோஷ்டியில் இந்த ரத்தினம் கண்டுபிடிக்கப் பட்டது. 

தேவிதாஸ், அதற்கு முன்பாகவே ஷீரடியில் வாழ்வதற்கு வந்து விட்டிருந்தார். பிறகு, ஜானகிதாஸ் கோஸாவியும் ஷீரடியில் வாழ வந்து சேர்ந்தார்.

இந்த விவரங்களை எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கிறேன். கேட்பவர்களே, பயபக்தியுடன் கேட்கும்போது ஆழ்ந்த கவனுமும் வையுங்கள். 

சாந்த் பாடீல் என்னும் பெயர் கொண்ட பாக்கிய சீலரான முஸ்லிம் ஒருவர், ஔவ்ரந்காபாத் ஜில்லாவைச் சேர்ந்த தூப்கேடா என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 

ஒரு முறை ஔவ்ரந்காபத் பிரயாணத்தில் அவருடைய பெண் குதிரை தொலைந்து போயிற்று. இரண்டு மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. "இனிமேல் அது கிடைக்காது!"

என்றெண்ணி, பாடீல் முற்றிலும் மனமுடைந்து போனார். குதிரையை இழந்தது பற்றி துக்கமும் வேதனையும் அடைந்தார். கடைசியில் அவர் குதிரையின் சேணத்தை முதுகின்மேல் போட்டுக் கொண்டு வந்த வழியே வீடு திரும்பினார்.

ஔவ்ரந்காபாதிலிருந்து 9 மைல்கள் கடந்து வந்தபின், பாதையோரத்தில் ஒரு மாமரம் இருந்தது. மாமரத்தினடியில், சாந்த் பாய் அந்த மனிதருள் மாணிக்கத்தைக் கண்டார்.

கப்னி ஆடை, கையில் தொப்பி, கமக்கதில் சட்கா -  புகையிலையைக் கசக்கி சில்லிமில் அடைத்துகொண்டிருக்கும்போதே ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.