valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

1912 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், புண்ணிய காலமான வளர்பிறையில், மிகுந்த அன்புடன் பூஜையோடும் பஜனையோடும் வேப்பரமரத்தின் கீழ் 
பாதுகைகளை ஸ்தாபனம் செய்தார்.

ஒரு சுப ஹர்த்த நாளில், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளோடு உபாசனி  சாஸ்திரி என்ற பக்தர் நடத்தி வைத்தவாறு, தாத்தா கேல்கர் தமது கரங்களால் 
பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

பாதுகைகளின் தினசரி பூஜை, தீட்சிதர் என்றழைக்கப்பட்ட பிராமணரிடம்  
ஒப்படைக்கப்பட்டது. பொதுப் பணிகளை சகுண   மேரு நாயக் பார்த்துக்
 கொண்டார். பாதுகைகளுடைய  ஆக்கியானம் (காதை ) இதுவே.

இவ்விதமாகத்தான் நிர்விகாரமானர்களும் இறைவனின் அவதாரமுமான 
ஞானிகள் சுயநலம் ஏதும்  கருதாது உலகத்தை உயிவிப்பதற்காகவே  தோன்றுகிறார்கள் .

(காட்சி இங்கு மாறுகிறது. ஆசிரியர்  காலத்தால் பின்னுக்குப் போய், இளமைப் பருவத்து நிகழ்ச்சியை விவரிக்கிறார்.)

சில நாள்கள் கழித்து  ஆச்சரியமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. இதை 
கவனத்துடன் கேட்டால் கேட்பவர்களும் அதிசயப் படுவார்கள்!

மொஹித்தின் தாம்போளிக்கும் (பீடா வியாபாரி) பாபாவுக்குமிடையே  சில வாக்குவாதங்களும் சச்சரவுகளும்  இருந்து வந்தன. இந்நிலைமை சூடேறி, ஒருநாள் மல்யுத்தம் வரை
 கொண்டு போய்விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டையிட்டனர். 

இருவருமே சிறந்த மல்யுத்த வீரர்கள். ஆயினும், உடல் பலம் விதியை எதிர்த்துப் போராட முடியுமா?மொஹித்துனுக்கு 
அதிக சக்தி கிடைத்தது. பாபாவால் அதற்கு ஈடு கொடுக்க முடியாததால் 
பாபா தோற்கடிக்கப் பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு, பாபா மனதில் ஒரு முடிவெடுத்து விட்டார். அவருடைய 
முழு உடையையும் மாற்றி விட்டார். லங்கோட்டை கட்டிக் கொண்டு அதற்கு
 மேலே   நீண்ட கப்னியை  அணிந்துகொண்டார். ஒருதுணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். 






 


 

No comments:

Post a Comment