valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

வாமன் தாத்யா  என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத 
(வெயிலில் காய வைக்கப்பட்ட நிலை) பானைகளைக் கொடுப்பார். 
பாபா தம்முடைய கைகளாலேயே  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

கிணற்றின் பக்கத்திலிருந்த கற் தொட்டியிலிருந்து குடங்களில் தண்ணீரைத் 
தோள்களின் மீது சுமந்து செல்வார். சூரிய அஸ்தமன நேரத்தில் குடங்களை 
(வேலையை முடித்துவிட்டு) வேப்பமரத்தடியில் வைத்து விடுவார்.

அவ்வாறு வைக்கப்பட்டவுடன் குடங்கள் தாமாகவே உடைந்து விடும். 
மறுநாள் காலையில் , தாத்யா  மறுபடியும் இரண்டு குடங்களைக் கொண்டு 
வந்து தருவார்.

சூளையிலிட்டு  சுடப்பட்ட குடந்தான் உறுதியாக இருக்கும். நாட்பட உழைக்கும் ஆனால், பபவுக்குச் சுடாத குடந்தான் தேவைப்பட்டது . இவ்விதமாக, குயவரால் தினமும் இரண்டு பானைகளைச் சூளையிலிடும்  சிரமம் இன்றியே விற்க முடிந்தது.

மூன்று ஆண்டுகள் பாபா இதையே முக்கியமான வேலையாக ஏற்றுக்கொண்டு செய்தார். 
இன்று அதிர்ஷ்டவசமாக மக்கள் அனுபவிக்கும் சௌகரியமான சத்திரம் இருக்கும் 
இடத்தில் ஓர் அழகான பூந்தோட்டம் உருவாகியது.

மேலும்,அதே இடத்தில்வேப்ப மரத்தடியில் பாயி என்ற பெயருடைய பக்தர்
 ஒருவரால், சமர்த்த சுவாமி அக்கல்  கோட்  மகாராஜினுடைய பாதுகைகள் பக்தர்கள் வழிபடுவதற்காக ஸ்தாபனம் 
செய்யப்பட்டிருக்கிறது.

பாயியுனுடைய உபாசனைத் தெய்வம் அக்கல் கோட்  மகாராஜ், அவருடைய உருவப் படத்திற்கு மிகுந்த பக்தியுடன்  நித்திய நியாமாக பாயி 
பூஜை செய்து வந்தார்.

ஒரு சமயம் அவர் அக்கல்  கோட்டிற்க்கு  சென்று, ஸ்வாமியினுடைய  பாதுகைகளை தரிசனம் செய்து கொண்டு, மனம் லயித்து  உபசாரங்களுடன் கூடிய போசை செய்ய வேண்டுமென்ற மனோபாவம் 
கொண்டார்.

ஆகவே, பம்பாயிலிருந்து அக்கல் கோட்  செல்வதற்கும் அங்கு பூஜை செய்வதற்கு முண்டான எல்லா 
ஏற்பாடுகளையும் செய்து, 
பொருள்களையும் தயார் செய்தார்.  கிளம்புவதற்கு முதல்நாள், இத் தீர்மானத்தையும் எல்லா ஏற்பாடுகளையும் றது செய்துவிட்டு, ஷிர்டி போகும் பாதையில் காணப்பட்டார்.

மறுநாள் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிலையில், முதல் நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். கனவில் அக்கல் கோட்  சுவாமி அவருக்கு ஆக்ஞாபனம் (ஆணை) செய்தார், "ஷிர்டியே இப்பொழுது என்னுடைய ஸ்தானமாக ஆகிவிட்டது; ஆகவே, நீர் ஷிர்டிக்குச் செல்வீராக.!

ஆக்ஞை இவ்வாறு இருந்தபோது,  பயபக்தியுடன் அதற்குக் கீழ்படிந்த பாயி பம்பாயிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். ஷீரடியில் ஆறுமாதங்களை  ஆனந்தமாக கழித்தார்.

பாயி பூரணமான விசுவாசமும் நம்பிக்கையும் உடையவராக இருந்ததால்,
தாம் கண்ட கனவுக் காட்சியின் ஞாபகார்த்தமாக, சமர்த்த அக்கல்  கோட்  சுவாமிகள் பாதுகைகளை வேப்ப மரத்தடியில் ஸ்தாபனம் செய்தார்.








No comments:

Post a Comment