valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 8 March 2012

ஷிர்டி சாயி பாபா ..!

                                                           பாட்டு 

எக்காளம் ஊதுகிறது. கொம்பு வீரமுழக்கம் செய்கிறது; மணிகள் 
'தணதண'வென்று சப்திக்கின்றன.
 ஒளிரும் இடுப்புப்பட்டையுடன் சோப்தார் உமக்கு கட்டியம் கூறுகிறார்.
(10 )

ஆரத்தி சமயத்தில் உம்முடைய திவியாசனத்தில் அமரும்போது  நீர் விஷ்ணு; 
பிரதோஷகாலத்தில் துனியருகில் உட்காரும்போதோ, நீர் காமனை எரித்தவர் 
(சிவன்)   (11 )

மும்மூர்த்திகளின்  லீலைகளையும் உம்மிடம் பிரதிதினமும் அனுபவிக்கிறோம்;
ஓ பாபா சாயீ!  (12 )

அப்படியிருப்பினும் என் மனம் அனாவசியமாக அலைகிறது; 
அதை நிலைப்படுத்த வேண்டுமென்றே இப்பொழுது நான் பிரார்த்திக்கிறேன்; 
(13 )

அதமர்களில் அதமனும் ம்ஹாபாதகனுமான நான் உமது பாதங்களை 
 சரணமடைகிறேன். 
வந்தேன் தாஸ்கனு, ஓ குருராயா! மூன்று தாபங்களையும் நிவாரணம் செய்யும்.  (14 )

ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவத்தைக் கழுவித்தள்ளுவதர்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள்; ஆனால், கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக் கொள்ள, முனிவர்களின் பாதங்களை அடைக்கலமாக அடைகிறாள்.

சாயி பாதங்களை விட்டுவிட்டு, கங்கைக்கும் கோதாவரி க்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; முனிவரின் இந்த ஸ்தோத்திர த்தை கேட்டல் போதும்; சுவாரசியமான சாயியின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலோ கேட்டாலோ போதுமானது.

கோனாயீ , தெய்வப் பிராப்தியாக நாமதேவேரைக் குழந்தியாகப் பீமாரதி நதியில்  கண்டெடுத்தார்; தமால், கபீரை பாகீரதி நதியில் முத்துச் சிப்பிக்குள் கண்டெடுத்தார். 

அவ்வாறே ஸ்ரீ சாயீ நாதர் தம் பக்தர்களுக்காக, ஷிர்டி கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தினடியில் பதினாறு வயது பாலகனாகத் தோன்றினார். 

அவர், தோன்றும்போதே கனவிலும் புலனின்பங்கள் அறியாத பிரம்ம ஞானி, மாயையைத் துறந்தவர்; முக்தி அவருடைய  பாதங்களில் பணிந்து கிடந்தது.

எந்த தேசத்தில், எந்தப் பவித்திரமான வம்சத்தில், எந்தத் தாய்தந்தையர்க்கு பாபா பிறந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

தாய் யார்? தந்தை யார்? பூர்விகம் எவருக்கும் தெரியாது. எல்லாரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அயர்ந்து போனார்களே தவிர, யாருக்கும் சரியான விவரம் கிடைக்கவில்லை.  


Thursday, 1 March 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்

பாட்டு

ஓ. சத்குருராயா, உம்முடைய சக்தி எல்லையற்றது, லீலைகள் அற்புதமானவை! மந்தபுத்திக்காரர்களையும் படிப்பறிவில்லாத வர்களையும் சம்சார சாகரத்தின் அக்கறை சேர்க்கும் நாவாய் நீரே, - பல்லவி 

வேணீ மாதவராக மாறி, பிரயாகையை உமது பாதங்களில் கொண்டுவந்தீர்; கங்கையையும் யமுனையையும் கால் கட்டைவிரல்களிளிருந்து பெருக்குவதற்காகவே. 

தாமரையில் பிறந்தவரும் (பிரம்மா) இலக்குமியின் கணவரும் (விஷ்ணு) சங்கரருமாகிய நீரே முக்குணங்களின் சாராம்சமாக ஆனீர்; 
ஓ சமர்த்த சாயியே! நீர் இப் பூவுலகில் நடமாடியபோது. (2 )

பிரம்மாவினுடைய  ஞானம் சில நேரம் உம்முடைய வார்த்தைகளில் சொட்டுகிறது; சில நேரங்களில் தாமச குணத்தை காட்டுவதற்காக உருத்திரனின் பயங்கரமான உருவத்தை ஏற்கிறீர். (3 )

சில சமயங்களில் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்று பால லீலைகளில் ஈடுபடுகிறீர். 
சில சமயங்களில் நீர் பதர்களின் மனமாகிய நீர்நிலையில் நீந்தும் அன்னம். (4 )

 முஸ்லீம் என்று சொன்னால், சந்தனத்தின் மேல் பிரேமை கொண்டீர்; 
ஹிந்து என்று சொன்னால், மசூதியில் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறீர்! (5 )

பிச்சை எடுத்தன்றோ பிழைக்கிறீர். செல்வந்தரென்று எப்படிச் சொல்வது? 
குபேரனையும் வெட்கமடையச் செய்யும் தர்மதாதவைப் பக்கீரென்று சொல்வதெப்படி? (6 )

மசூதி உம்முடைய வாசம் என்றால், நெருப்பு எப்பொழுதும் எரிகிறது துனியில், 
மக்களுக்கு உதீ கொடுக்க. (7 )

உதய காலத்திலிருந்தே விசுவாசமுள்ளவர் தொழுகைக்கு வருகின்றனர். 
சூரியன் உச்சிக்கு வந்து மதிய ஆரத்தி செய்யப்படும் வரை. (8 )

தேவகணங்கள் இறைவனைச் சுற்றி நிற்பதுபோல பக்தர்கள் நிற்கின்றனர்;
சாமரதைக் கையிலேந்தி  உம்  தலைக்கு மேல் விசிறி விட. (9 )
  

Thursday, 23 February 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்!

பகவந்த்ராவ் ஷிர்சாகர் என்று ஒருவர். அவருக்குத் தந்தை தலைசிறந்த விட்டல் பக்தர்; அடிக்கடி பண்டர்பூருக்குச் செல்வார்.

அவருடைய (பகவந்த்ராவ் ஷிர்சாகர்) வீட்டில் நித்திய பூஜைக்கு ஒரு விட்டல் சிலை இருந்தது. ஆனால், தந்தையின் மறைவுக்கு பிறகு, பூஜை படையல் எல்லாம் நின்றுவிட்டன. இறந்துபோன முன்னோர்களுக்காக வருடாந்திரமாக செய்யப்படும் சிராத்தம் - திதி இவையும் மறைந்துபோயின. 

பண்டரிபுரத்திற்கு ஆண்டுதோறும் போவதைப் பற்றிய பேச்சே எழவில்லை. பவகவந்த் ராவ் ஷீரடிக்கு வந்தபோது, பாபா அவருக்குத் தந்தையை ஞாபகப்படுத்திக்கொண்டு சொன்னார், "அவர் என் நண்பர் .-

"இவர் (பகவந்த்ராவ்) அந் நண்பருக்கு மகனானதால், இவரை நான் ஷீரடிக்கு இழுத்து வந்தேன். இவர் இறைவனுக்கேதும் படையல் செய்வதை நிறுத்திவிட்டார். என்னையும் பட்டினி போட்டுவிட்டார் -

"இவர் விட்டலையே பட்டினி போட்டு விட்டார். ஆகவே, நான் இவரை ஷீரடிக்கு அழைத்து வந்தேன். இப்பொழுது நான் இவருக்கு அனைத்தையும் ஞாபகபடுத்தி, நித்திய பூஜை செய்யவைக்கிறேன். "

ஒரு சந்தர்பத்தில் புண்ணியகாலம் எதுவென்று   தெரிந்துகொண்டு, தாஸ காணு பிரயாகையில் (திரிவேணி சங்கமம்) ஸ்நானம் செய்ய விரும்பி, பாபாவிடம் அனுமதிபெற வந்தார்.

"பிரயாகையில் ஸ்நானம் செய்வதற்காக அவ்வளவு தூரம் செல்லவேண்டா. ஷிர்டியே நமது பிரயாகை" என்று பாபா பதிலளித்தார். "மனத்தில் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கட்டும்".

என்னே அற்புதங்களில் அற்புதம்! தாஸ கணு பாபாவின் பாதங்களை தொட்டபோது, இரு கட்டைவிரல்களிலிருந்தும் நீர் சொட்டியது. இரட்டை நதிகளான கங்கையிலிருந்தும் யமுனையிலிருந்தும் புனித நீர் (பாபாவின் பாதங்கள் வழியாக ) வெளிவந்து சொட்டியது. 


இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தாஸ கணுவுக்கு உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது. பாபாவின் உபகாரம் எவ்வளவு மகத்தானது. நன்றியுணர்வாலும் சந்தோஷத்தாலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. 


இதயத்துள் பொங்கி வழிந்த அன்பு அவரைக் கவிபாட வைத்தது. பாபாவினுடைய எல்லையற்ற சக்தியையும் புரிந்துகொள்ளமுடியாத லீலைகளையும் செய்யுள் வடிவில் பாடிய பிறகுதான் பொங்கிய மனம் திருப்தியடைந்தது. 


தாஸ கணுவின் செய்யுள்கள் கவர்ச்சி மிகுந்தவை. கேட்பவர்களின் ஆவலைத் திருப்திசெய்யும் வகையிலும் ஏற்கனவே தெரிவித்தவாறும் இந்தச் சரியான சமயத்தில் அந்த பயபக்தி யூட்டுகிற பாட்டை இங்கே தருகிறேன். 


Thursday, 16 February 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

பாபா தம் கையை இதயத்தின் மேல் வைத்து ஆணித்தரமாக சொன்னார். "ஆமாம், ஆமாம், விட்டலின் உருவம் பிரசன்னமாகும். பக்தனுக்குத் தேவையான அளவுக்கு நம்பிக்கை இருந்தால்! -

    
    "டாகுர்நாதரின் டங்கபுரியும் விட்டல்ராயரின் பண்டர்பூரும் ரன்சோடின் துவாரகையும் எல்லாமே ஷீரடியில் இருக்கின்றன. எங்கே தேடியும் அலைய வேண்டியதில்லை. -


    "விட்டால் என்ன, ஒரு ரகசியமான இடத்திலிருந்தா வெளிவரப்போகிறார்? பக்தர்களின் அபரிதமான அன்பினால் உந்தப்பட்டு, இவ்விடத்திலேயே அவர் உங்களுக்காகத் தோன்றுவார். -



    "புண்டலிகர் தம்முடைய பெற்றோர்களுக்கு பக்தியுடன் செய்த சேவையால், தேவாதிதேவனைத் தாம் சொன்னபடி கேட்கவைத்தார். அவனும் புண்டளிகரின் அன்பாலும் பக்தியாலும் கட்டுண்டு ஒற்றைச் செங்கல்லின்மேல் நின்று காத்திருந்தான்." (பண்டரிதாருக்கு விட்டால் என்று பெயர் வந்த கதை) 


    ஆகவே,   சப்தாஹம் முடியும் தருவாயில், தாஸ்கனுவிற்குச் ஷிர்டியிலேயே விட்டால் தரிசனம் பிராப்தமாகியது என்று சொல்லப்படுகிறது. பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின.!


    ஒருமுறை காகாசாஹெப் தீட்சிதர் நியமானசாரமாக காலை ஸ்நானம் செய்துவிட்டு வழக்கம்போல் தியானம் செய்யும்போது விட்டல் தரிசனம் கிடைத்தது. 

    பிறகு அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது, பாபா அவரிடம் என்ன சொன்னார் என்னும் அதிசயத்தை பாருங்கள். "ஆக, விட்டல் பாடீல் வந்தார் இல்லையா? அவரை நீர் கட்டாயம் சந்தித்திருப்பீர்; எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது;-


    "ஆனால், உஷார்; அந்த விட்டல் பாடீல் ஒரு நழுவல் பேர்வழி. அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓரிடத்தில் பலவந்தமாக ஸ்தாபனம் செய்யும். இல்லையெனில் நீர் ஒருகணம் கவனக்குறைவானாலும் போதும், உம்மை ஏமாற்றிவிட்டு ஓடி விடுவார்".


    இது காலையில் நடந்த சம்பவமே. இதற்குப் பிறகு சூரியன் உச்சிக்கு வந்த நடுப்பகலில், எப்படி இன்னுமொரு மகிமை வாய்ந்த விட்டல் தரிசனத்திற்கு நிரூபணம் கிடைத்ததென்று பாருங்கள். 


     யாரோ ஒருவர் இன்னொரு கிரமாத்திலிருந்து, பந்தர்பூர் விடோபாவின் இருபத்தைந்து முப்பது படங்களை எடுத்துகொண்டு, விற்பதற்காக ஷிர்டி கிராமத்திற்கு வந்தார். 


     அப்படங்கள் தாம் காலையில் தியானத்தில் கண்ட விட்டலின் உருவத்தின் பூரணமான அச்சாக இருப்பது கண்டு, தீட்சிதர் வியய்ப்பிலாழ்ந்தார். பாபாவினுடைய வார்த்தைகள் உடனே அவருக்கு ஞாபகம் வந்தன. 

     மிகுந்த பிரீத்தி யுடன் ஒரு படத்தை அதற்குண்டான விலையை விற்பனையாளரிடம் கொடுத்து வாங்கி, பக்தி பாவத்துடன் பூஜைக்கென நிர்மாணம் செய்தார். 


    பாபாவுக்கு விட்டல் வழிபாட்டில் இருந்த மரியாதையும் பக்தியையும் மேலும் கோடிட்டுக் காட்டும் வகையில், இன்னுமொரு மனோஹரமானதும் சுந்தரமானதுமான காதையைக் கேளுங்கள் ...


    

Thursday, 9 February 2012

ஷீரடிக்கு சாயி இறங்கி வருதல்..!

சாயியின் புனிதமனான சங்கமே நமக்கு ஆகமமும் நிகமமும் ஆகும். அதுவே நமது வாழ்கையின் துன்பங்களையும் வலிகளையும் போக்கும்; எளிதான முக்தி மார்க்கமும் சாயியின் அண்மையே.

சமர்த்த சாயியயை தரிசனம் செய்வதே நமது யோக சாதனம்; அவருடன் சம்பாஷனை செய்வது பாவங்களை துடைத்துவிடும் உபாயம்.

அவருடைய பாதங்களை மென்மையாகப் பிடித்துவிடுவது என்பது கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமமாகும் திரிவேனியில் செய்யும் புண்ணிய ஸ்நானம். அவருடைய பாத தீர்த்தத்தை பருகுவது வாசனைகளை நிர்மூலமாக்கி விடும்.

அவருடைய ஆணை நமக்கு வேதவாக்காகும். அவருடைய பிரசாதமான ஊதியை (விபூதி) உட்கொள்வது, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் புண்ணியம் சேர்ப்பதாகும்.

சாயியே நம்முடைய பர பிரம்மம். அவரிடத்தில்தான் நமது ஆன்மீக மேனிலை இருக்கிறது. சாயியே ராமன்; சாயியே கிருஷ்ணன்; சாயியே நமது நிஜமான அடைக்கலம்.

சாயி இரட்டை சுழல்களுக்கு (இன்பம் / துன்பம் - விருப்பு / வெறுப்பு போன்றவை ) அப்பாற்பட்டவர். அவர் உல்லாசப்படுவதும் இல்லை; விசனப் படுவதும் இல்லை; அவர் தம்மிலேயே மூழ்கியவர். எக்காலத்தும் முடிவான உண்மையானவர்.

ஷிர்டியை மூலஸ்தானமாக வைத்துக்கொண்டு பாபாவினுடைய செல்வாக்கு பஞ்சாபிற்கும் கல்கத்தாவிற்கும் குஜராத்திற்கும் தக்கானதிற்கும் கர்நாடகத்திற்கும் - அகில இந்தியாவிற்கும் பரவியது.

ஷிர்டியிலிருக்கும் சாயிபாபாவின் சமாதி எல்லா சாதுக்களும் மகான்களும் கூடுமிடும். போகும் மார்க்கத்தில் ஒவ்வொரு காலடிக்கும் உலகபந்தங்கள் இற்று விழுகின்றன.

அவருடைய சமாதியை தரிசனம் செய்வதே பிறவிப்பயனை அளிக்கும்போது, வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்த மகானுபாவர்களின் பாக்கியத்தை நான் எவ்வாறு விவரிக்க முடியும்?

மசூதியின்மேலும் புட்டி வாடாவின் மேலும் (சமாதி மந்திர்) அழகான கொடிவரிசைகள் வானளாவி, பக்தர்களை 'வா, வா' என்று தம் கைகளால் கூப்பிடுவதுபோல பறக்கின்றன.

பாபா ஒரு மகான் என்கிற பெருமை கிராமம் கிராமமாகப் பிரசித்தி ஆயிற்று. சிலர் அவரிடம் நேர்த்திக்கடன் பிரார்த்தனை செய்துகொண்டு, சிரத்தையுடன் விரதம் இருந்து பயன்பெற்றனர். சிலர் தரிசனம் செய்வதாலேயே மனவமைதி அடைந்தனர்.

வருபவர்களுடைய மன ஓட்டம் எப்படி இருந்தாலும், எண்ணங்கள் சுத்தமாக இருப்பினும் கெடுதலாக இருப்பினும், தரிசனமாத்திரத்தில் அவருகளுடைய மனம் நிம்மதியையும் சாந்தியையும் அடைகிறது. மக்கள் தமக்குள்ளேயே ஆச்சரியமடைந்தனர்.

பண்டரிபுரத்து விட்டல் - ரகுமாயி தரிசனம் தரும் அற்புதமான அதே அனுபவம் பக்தர்களுக்கு பாபாவால் ஷீரடியில் அளிக்கப்பட்டது.

யாராவது இதை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட கருத்தாக நினைத்தால், அவர்களுடைய சந்தேகம் நிவர்த்தியாகுமாறு, தீவிர விட்டல்பக்தரான கௌலீபுவாவின் கூற்றைக் கேட்கட்டும்.

கௌலீபுவா ஒரு பண்டரிபுரத்து வார்க்கரி. (பக்திமார்காதின் ஒரு பிரிவு) பண்டரிபுரத்திற்கு முறை தவறாது வருடாவருடம் சென்றதுபோலவே பாபாவின் மீதிருந்த பக்தியால் ஷரிடிக்கும் வந்தார்.

சுமைதூக்க ஒரு கழுதையும் துணைக்கு ஒரு ஷிஷ்யனையும் அழைத்துக் கொண்டு, கௌளீபுவ "ராம்க்ரிஷ்ணஹாரி - ராம்கிருஷ்ணஹாரி " என்று ஜபம் செய்துகொண்டே புனிதப் பயணம் செய்தார்.

தொண்ணூற்றைந்து பிராயதினராகிய அவர், வருடத்தில் நான்கு மாதங்களை கோதாவரியின் கரையிலும், மீதி எட்டு மாதங்களை பண்டரிபுரத்திலும் கழித்தார். இவ்வாறு பயணம் செய்ததால், அவரால் பாபாவை வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் செய்யமுடிந்தது.

பாபாவின் முகத்தை பார்த்துப் பார்த்து அவர் பணிவுடன் கூவுவார். "இவரே பண்டரினாதரின் அவதாரம். தீனதயாளர்; அனாதைகளின் நாதர்! -

"காவி வேஷ்டி கட்டிவிட்டால் ஞாநியாகிவிட முடியுமா என்ன? முடியவே முடியாது. எலும்பு தேய உழைத்து குருதி தண்ணீராக மாறுமாறு பாடுபட வேண்டும். -

"ஒன்றுமில்லாமல் ஒருவன் எப்படி தேவனாக முடியும்! சாயி நடமாடும் பண்டரிநாதன். இவ்வுலகமே ஒரு மாயை என்று அசையாத நம்பிக்கையுடன் அதன் பின்னால் இருக்கும் தெய்வீகத்தை பார். "

பண்டரிநாதரை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடும் அந்த அடியாரின் கருத்தும் சொற்களும் மேற்கண்டவாறு இருக்கும்போது, பாமரனாகிய என்னுடைய அனுபவம் என்னவாக இருக்க முடியும்? கதை கேட்பவர்களே இதை அனுமானம் செய்து கொள்ளலாம்.

நாமச்மரனத்தில் மிகப் பிரீதியுடைய பாபா, "அல்லா மாலிக் - அல்லா மாலிக்" என்று இடைவிடாது உரத்து ஜபம் செய்தது மல்லாமல், அடிக்கடி தம் பக்தர்களை இரவும் பகலும் இடைவிடாது ஏழுநாள்கள் நாம ஜபம் அவர் முன்னிலையில் செய்ய வைத்தார்.

ஒருமுறை, தாசகனு நாம சப்த சாகம் செய்யும்படி ஆணையிட்டார். தாசகனு சொன்னார். "செய்கிறேன். ஆனால், விட்டல் எனக்குப் பிரசன்னாமாக வேண்டும்".

Thursday, 2 February 2012

( avar pagalil தூங்கினார் என்று porul kollak koodaathu. sookshumamaana arththathai அறிந்து kolla virumbukiravarkal bhagavath geethai irandaavathu aththiyaayam 69 slogathin porulai padithu therinthu கொள்ளலாம்.)

  baba எந்த aashrmathai sernthavar என்று evaraalum nichayam seiya iyalaathu. enenil avar எந்த aashrmathin vithikalin padiyum vaala vaillai. saatharanamaaga irukkum idathai vittu vittu avar engum sellavillai. irrupinum ellaa idangalilum nadakkum sagala vivakaarangalum avarukku theriyum. 

   velip paarvaikku avar thinamum metchath thakka tharbaar nadathi 1001 kathaikal sonnaalum ullukkulle mounathai anusarithaar. 

  masoothiyin suvatril saainthu kondu vegu neram nindru kondiruppaar. kaalaiyilum maalaiyilum lendikko allathu saavadikko poi sutri varuvaar. aaayinum, thannilaiye moolki irukkum nilaiyennaavo agandam.

எந்த janmathil, எந்த santharpathil, எந்த nerathil evvithathil எந்த தவம் செய்தேனோ அறியேன். saayi tham siragugalul என்னை அனைத்துக் கொண்டார். 

   ஒ...! பிறவியில் இருந்தே kallanaagiya naan ithai தவம் seithu petren என்று evvaaru சொல்வேன்?  theena வஹ்சலராகிய சாயியின்  கிருபையை thavira, itharku veroru kaaranamum illai. 

    sithakodiyaagap  பிறந்தும், சாதர்கரைப் போல் நடந்துகொண்டார். இயற்கையாகவே கர்வமற்றவரும் பணிவுடையவருமான avar, சகல ஜனங்களை யும் makilvikka முயன்றார். 

    பியாடானுக்கு ஏகனாதரும் alanthikku gnaanechvararum eppadiyo, appadiye shirdikku saayee perumai செர்தார்ன். 

    shirdiyin mannuum புல்லும் புண்ணியம் செய்தவரி. பிரயத்தனம் ஏதும் இன்றியே babavin பாதங்களைத் thinamum முத்தமிட்டு, அவரது பாததுளியை சிரசில் மேல் etrukkondana. 

     ஷிரயே ஷிர்டியே நமது பண்டரிபுரம். ஷிர்டியே நமது jaganaathapuri, ஷிர்ட்யே நமது thuvaaragai, ஷிர்ட்யே நமது gayia, kaasi விச்வேவரம். நமது ராமேஸ்வரம் ஷிர்டியில்தான் இருக்கிறது. 

 ஷிர்டியே நமது பத்ரினாதம் , கேதாரனாதம் , நாசிக்கின் thiriyamba கேசுவரம் உஜ்ஜைனியின் mahaakaalachvaram, kokarnathin mhaabalechvarm.

(மேற்சொன்ன anaithu இடங்கஆல்ம் ஹிந்ட்துக்கள் புனிதப் பயணமாகச் சென்று வழிபட வேண்டிய புண்ணியத் தளங்கள். )
 

Thursday, 26 January 2012

ஷிர்டி சாய் பாபா இறங்கி வருதல்

ஷிர்டி சாய் பாபா இறங்கி வருதல் 

     பேத பாவத்தை அழித்து பிரபஞ்சம் அனைத்தும் பிரம்மம் olir வதை கண்டு , நகரும் நகரா பொருள்கள் adangiya  சிருஷ்டியின் அழகை பிரித்து பார்க்க முடியாத பிரம்மத்தின் அழகாகவே paarkum kannotam. 

     இப் பிரபஞ்சமே நான் எனும் நான்தான். என்னும் ஞானம் உதித்த பின் கிடைக்கும் சுகத்தை evaraal விவரிக்க முடியும்.?

     அவ்வாறே பிரபஞ்சமும் தானும் ஒன்றே என்ற அனுபவம் வந்த பின், தன்னிடம் இருந்து வேறானது எதுவமே இல்லை என்று தெரிந்த பின், யாரை விரோத பாவமாக பார்ப்பது. யாரிடம் பயப்படுவது. 
     மங்கள் வேடாவில் தாமாஜி, சஜ்ஜன் கட்டில் , சமர்த raamathaas , வாடியில் நரசிம்ம சரஸ்வதி , athaip போலவே ஷீரடியில் சாய் நாதர். 

      ivvulaga வாழ்வு நடப்பதற்கும் கடப்பதற்கும் மிக கடினமானது. ஞானத்தின் உருவானவனே  ஜெயித்து சாந்தியை ஆபரணமாக அணிகிறான். 
     வைஷ்ணவர்களின் புகலிடமும் உதார குணாமுள்ளவர்களிலேயே , உதாரண மாணவரும் கர்ணனைப் போன்ற கொடையாளியுமான சாய், ஆன்மீக ஞானம் அருள்வதில் ரசமாவார். 

     அழியக் கூடிய பொருளில் ஆசை வைக்காது தமக்குள்ளேயே மூழ்கிப் போய், மனித வாழ்வின் உச்ச நிலையையே லட்சியமாக கொண்டவர். அவருடைய நிலையை எவ்வாறு வர்ணிக்க முடியும். ?

     அவருக்கு பூவுலக வாழ்வில் செல்வமும் இல்லை, தரித்திரமும் இல்லை. அவர் மேலுலக சுகங்களை நாடவும் இல்லை, வெறுக்கவும் இல்லை. அவருடைய அந்தரங்கம் கண்ணாடியைப் போல் நிர்மூலமாக இருக்கிறது. பேச்சோ எப்பொழுதுமே அமிர்த மழை. 

      யாருடையப் பார்வைக்கு அரசனும் ஆண்டியும் தரித்திரனும், தீணனும் சமமாக தெரிகின்றனரோ, யார் மான அவமானங்களை kadanthavaro அவரே எங்கும் வியாபித்திருக்கும் பகவான். 

     அவர் பொதுமக்களோடு சகஜமாக பேசிப் பழகினார். அவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவதாசிகள் நாட்டியத்தையும் அங்க அசைவுகளையும் பார்த்தார். 

     பாரசீக இசை வடிவ பாட்டுக்களை ரசித்து தலையையும் ஆட்டினார். ஆனால், அவருடைய சமாதி நிலை களைய வில்லை. 
     அல்லாவின் நாமமே அவருடைய முத்திரை. உலகமே இருளின் இருளில் தூங்கி கொண்டிருக்கும்போது அவர் வெளிச்சத்தில் விழித்திருந்தார். மற்ற ஜீவா ராசிகளுக்கு எது பகலோ அது அவருக்கு இரவாக இருந்தது. உள்ளுக்குள்ளே அவர் ஆழமான சமுத்திரம் போன்று அமைதியாக இருந்தார்.