valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 25 June 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஆகவே, இந் நூலின் ஆசிரியன் நான் அல்லேன்.  என்னுடைய செய்கையால் இங்கு யாரும் சிரமப்படவில்லை.  'சிரமத்திற்கு மன்னிக்கவும்' என்று நான் கதை கேட்டவர்களை வேண்டினால், நூல் செய்த பெருமை என் தலையில் விழும்!

இங்கு, எந்த பூஷணமும் என்னைச் சாராது; தூஷணமும் (நுந்தையும்)  என்னைச் சாராது. எதற்கு சாயியே கர்த்தாவோ, அந்த விஷயம் சம்பூர்ணம் ஆகிறது. 

சாயியின் அனுமதியைப் பெற்றபின், அஞ்ஞானத்தைப் பற்றிய இந்த விவரணத்தை எல்லாரும் கேட்பதற்காக, அவர் எவ்வாறு எனக்கு விளக்கினாரோ அவ்வாறே நான் எழுதியிருக்கிறேன். 

தம்முடைய வைபவத்தையும் பிரதாபத்தையும் கௌரவத்தையும் வெளிப்படுத்துவதற்காக, குருதேவர், தாமே அடியேன் மனத்தில் புகுந்து இவ்விஷயத்தின் (அஞ்ஞானத்தின்) நுணுக்கங்களைப் பிரகாசப்படுத்தினார். 

இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம்.  சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம்.  எது எப்படியிருப்பினும் , இரு சாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்;  அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள். 

தம் பக்தர்களின் உயர்ந்த நன்மைக்காக, சாயி தம்முடைய சரித்திரத்தைத் தாமே நிர்மாணம் செய்தார்.  ஹேமாடின் கையைத் தம் கையால் பிடித்துக்கொண்டு தம்முடைய காதையை எழுதவைத்தார். 

சரீரத்தை அவர் ஏற்றுக்கொண்டது உலகத்திற்கு அனுக்கிரஹம் செய்வதற்காக; குதர்க்கத்தையும் துராக்கிரஹத்தையும் (வன்முறையையும்) அழிப்பதற்காக;  உலக மக்களுக்கு நற்பாதை காட்டி ரட்சிப்பதற்காக. 

ஹேமாட் அவருடைய பாதங்களில் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத)  பாவத்துடன் விழுந்து வணங்குகின்றேன்.  தொடரப்போகும் சுவை மிகுந்த கதைகளை ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்குமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்!  ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'அஞ்ஞானத்தை அழித்தல்' என்னும் ஐம்பதாவது அத்தியாயம் முற்றும். 


ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 


 

No comments:

Post a Comment