valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சூசகமாகச் சொன்னதுமட்டும் அல்லாமல், பேராபத்தில் இருந்தும் விடுபட ஆதரவையும் அளித்தார். மிரீகர் வேண்டாமென்று ஒதுக்கிய போதிலும், ஆதரவை அவர்மீது திணித்து அவரை ஆபத்தில் இருந்து ரட்சித்தார்.

பக்தர்களின் நல்வாழ்வில் எப்பொழுதும் அக்கறை கொண்ட பாபா, மிரீகருக்கு நேரவிருந்த ஆபத்தை விலக்கி, அவருக்கு விசித்திரமானதொரு அனுபவத்தையும் அளித்தார்.

சாமாவின் அனுபவமோ அதனினும் விசித்திரமானது. ஒரு நாகத்தால் தீண்டப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்த அவரை பாபா காப்பாற்றினார்.

அதுவும் பாபாவின் லீலைகளில் ஒன்றே! அதை ஆதியில் இருந்து சொல்கிறேன். கேளுங்கள். சாமாவை ஒரு நாகம் தீண்டிவிட்டது. அப்பொழுது பாபா என்ன மருந்து கொடுத்தார் என்று பாருங்கள்!

அப்பொழுது சுமாராக மாலை ஏழு மணி இருக்கலாம். சாமாவின் சுண்டுவிரலை திடீரென்று ஒரு நாகம் தீண்டிவிட்டது. கையில் விஷம் ஏறி எரிச்சலெடுத்தது.

சகிக்க முடியாத, மட்டற்ற வேதனையால் உயிரே போய்விடும் போலிருந்தது. மாதவ்ராவ் பீதியையும் கவலையும் அடைந்தார்.

உடல் முழுதும் சிவந்து போயிற்று. நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்து கொண்டனர். உயிருக்கே ஆபத்தாக தோன்றியதால், கூடியிருந்தவர்கள் விரோபா! கோயிலுக்கு வரும்படி வரும்படி வற்புறுத்தினர்.

நிமோன்கர் என்பவர் முன்னுக்கு வந்து, "முதலில் உதீ ஏற்றுக்கொள்; பிறகு போ" என்று சொன்னார். மாதவ்ராவ் (சாமா) மசூதிக்கு ஓடினார். அய்யகோ! பாபா என்ன செய்தார் தெரியுமா!

பாபாவினுடைய வழிமுறைகள் திகைப்புண்டாக்குபவை அல்லவா? சாமாவைக் கண்டவுடனே பாபா படியேறவும் விடாது திட்டினார்; சாபமிட்டார்.

"ஓ! பாப்பானே! ஏறாதே ஏறாதே, ஏறினால் தெரியும் சேதி! போ வெளியே உடனே! இறங்கி ஓடு! " என கர்ஜனை செய்தார்.

பாபாவின் கோபம் சாமாவுக்கு வியப்பை அளித்தது. சற்றும் எதிர்பாராத, நெருப்பைக் கக்கும் சொற்கள் வெளிவந்தன. சாமா செய்வதறியாது பிரமித்து போனார். பாபா எதற்காக இவ்வளவு கடுமையாகப் பேசினார் என்று புரியவில்லை.

இதையெல்லாம் கண்டமாதவ்ராவ் திகிலடைந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்துவிட்டார்.  


No comments:

Post a Comment