valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 November 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

தெய்வத்துக்கே கோபம் வந்ததைப் பார்த்து சாமாவின் இதயம் சுக்குநூறாகியது. பாபா தம்மை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாரென்றும் நினைத்தார். சிகிச்சை கிடைக்குமென்ற நம்ம்பிக்கையை அறவே இழந்தார்.

யார்தான் திகிலடைய மாட்டார்? பாபா கடுங்கோபம் கொண்டதும் வசைச் சொற்களையும், சாபங்களையும் சரமாரியாகப் பொழிந்ததும் சூழ்நிலையையே பயங்கரமாக்கியதல்லவா!

இந்த மசூதி என் தாயகம்; நான் பாபாவின் செல்லப்பிள்ளை! இவ்வாறிருக்கையில் தாய் குழந்தையின் மீது ஏன் இன்று கடுங்கோபம் கொள்கிறாள்?

பாம்பு தீண்டிவிட்டபோது தாயைத் தவிர வேறு யாரிடம் செல்ல வேண்டும்? அந்நிலையில் தாயே உதைத்துத் தள்ளினால் குழந்தையின் கதி என்னவாகும்?

மாதவராவும் பாபாவும், குழந்தையும் தாயும் போலல்லரோ? இரவுபகலாக நிலைத்த அந்த உறவு இன்றுமட்டும் ஏன் இக் கதியை அடைந்தது?

ஒரு குழந்தையை தாயே உதைத்து விரட்டினால், வேறு எவர் காப்பாற்றுவார்? அந்த நேரத்தில், மாதவ்ராவ் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழந்தார்.

சிறிது நேரம் சென்ற பின், பாபா அமைதியடைந்த பிறகு மாதவ்ராவ் தைரியம் பெற்றுப் படியேறிச்சென்று அமர்ந்தார்.

பாபா அப்பொழுது சொன்னார், "தைரியத்தை இழந்துவிடாதே; உன் மனதில் எந்தவிதமான கவலையும் வேண்டா; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாள குணமுள்ளவர்; உன்னை ரட்சிப்பார்.-

"வீட்டிற்குப் பொய் அமைதியாக இரு; வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாதே. தைரியமாக இரு; கவலையை விட்டொழி; என்னிடம் நம்பிக்கை வைப்பாயாக; "

பிறகு, சாமா வீடு போய்ச் சேருமுன்பே அவருக்கு ஆதரவாக தாத்யா கோதேவை ஒரு செய்தியுடன் அனுப்பினார்.

"தூங்கக் கூடாது என்று அவனிடம் சொல். வீட்டினுள்ளே நடமாட்டமாக இருக்க வேண்டும். எது பிரியமோ அதை சாப்பிடலாம். தூக்கம்பற்றி மட்டும் உஷாராக இருக்கச் சொல்."

அன்றிரவு, "மாதவராவுக்கு தூக்க கலக்கமாக இருக்கலாம்; ஆனால், அவனை இன்றிரவு தூங்குவதற்கு அனுமதிக்க கூடாது" என்று பாபா காகசாஹெப் தீட்சிதரிடம் சொன்னார்.

இவ்விதமான முன்னெச்சரிக்கையை அனுசரித்ததால், சாமாவின் வழியும் வேதனையும் மறைந்தன. சுண்டுவிரலில் கடிவாயில் மட்டும் சிறிது விஷத்தின் எரிச்சல் இருந்தது.

பிறகு அவ்வெரிச்சலும் மறைந்தது. ஓ, எவ்வளவு பயங்கரமான கெட்டநேரம் கடக்கப்பட்டது! இதுவே, பக்தர்களின் பால் உண்டான அன்பாலும் இரக்கத்தாலும் பொங்கும் சாயிமாதாவின் கருணை. 


No comments:

Post a Comment