valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

'நான் மெத்தப் படித்தவன்; பண்டிதன்; என்னுடைய சுய முயற்சியாலேயே உபநிஷதங்களை படித்துப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளக்குவேன்" என்று ஒருவர் நினைத்தால்-

அது முடியவே முடியாது; யுக முடிவு வரை முயன்றாலும் சாத்தியமாகாது. குருவின் அருளின்றி, வழியில் அடிக்கு ஆதி இடைஞ்சல்கள் தோன்றும்; கடைசிவரை ரகசியமான அர்த்தம் கைக்குப் பிடிபடாது.

ஆனால், குருபாதங்களில் சரணடைந்தவர்க்கு அனுமாத்திரமும் சங்கடம் ஏற்படாது. தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் கூடமான அர்த்தம் அவருடைய கண்களுக்குத் தெரியும். புத்திக்கு விளங்கும்.

ஆத்மஞானமென்னும் சாஸ்திரம் அவ்வாறே; ஜனன மரண சுழலை வெட்டியெறிய உதவும் ஆயுதம். தேகாபிமானம் இல்லாது உலகபந்தங்களில் இருந்து முற்றும் விடுபட்டவரே அதை அளிக்கக்கூடிய சத்பாத்திரம் (நல்ல தகுதியுள்ளவர்).

அம்மாதிரியானவரைச் சார்ந்தால், ஒரு கணத்தில் உண்மையான அர்த்தம் தென்படுகிறது; புத்தியும் தடங்கல்களிலிருந்து விடுபடுகிறது; கூடமான அர்த்தமும் வெளிப்படுகிறது.

ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராத்தியில் மொழிபெயர்த்தபோது , தாஸ்கணுவும் அந்நிலையில் இருந்தார். சாயிநாதர் கிருபை புரிந்தவுடன் அவருடைய எழுத்து வேளையில் இருந்த இடைஞ்சல்கள்  தகர்ந்தன

தாசகணுவுக்கு சம்ஸ்கிருத ஞானம் போதுமான அளவு இல்லை. எனினும் அவர் ஆச்சாரிய வித்யாரண்யர். சாயிபாபா, இவர்களின் பாதங்களைத் தொழுதுவிட்டு ஓவி எழுத ஆரம்பித்தார்.

தாசகணுவின் எழுத்து பால் தாரை. அதில் பாபாவின் அருள் என்னும் சர்க்கரை கரைக்கப் பட்டிருக்கிறது. செவிமடுப்பவர்கள் அந்த மாதுரியமான (மிக இனிமையான) தாரையை அனுபவிப்பீர்களாக.

உங்களுக்கு பாவார்த்த போதினியை அறிமுகப்படுத்தவர்காகவே இதைச் சொன்னேன். அதனுடைய இதயத்தைப் பார்க்கவேண்டுமென்றால், மூலத்தைப் படிக்க வேண்டும். என்னுடைய கதையின் நோக்கமே வேறு; அதை இப்பொழுது கேளீர்!

ஒரு வார்த்தையும் பேசாமல், தம் பக்தர் படித்துக்கொண்டிருந்த உபநிஷத்தின் சிக்கலானதும் புரிந்துகொள்ள இயலாததுமான பகுதிகளை பாபா எப்படிப் புரிய வைத்தார் என்பதை பார்ப்போம்.

இக் கதையின் முக்கியமான உத்தேசம் இதுவே. இதையே கேட்பவர்களுக்குத் தாத்பரியம் (உட்பொருள்)புரியும்படியாக, சாராம்சமாகச் சொல்லவேண்டும் என்பதே என்னுடைய மனா ஓட்டம். ஆகவே, மனம் கொடுத்துக் கேளுங்கள்!

தாசகணு தம்முடைய வியாக்கியானத்தை ஓவி வடிவில் இயற்றினார்; பண்டிதர்கள் பாராட்டினர். தாசகணுவின் விருப்பம் நிறைவேறியது. ஆயினும் ஒரு சந்தேகம் இருந்தது. 


No comments:

Post a Comment