valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா தம்முடைய கட்டை விரலால் அவர்களுடைய நெற்றியில் சிறிது ஊதி இட்டுவிட்டு, ஏந்திய கைகளிலும் கைநிறைய உதீயை வழங்குவார். பக்தர்களின் மேல் அவருக்கிருந்த அடக்கமுடியாத அன்பு அத்தகையது.

"போம், பாவூ, போய்ச் சாப்பிடும்! அண்ணா, போய் இனிமையான சாப்பாட்டை சுவைத்து உண்ணும்! போங்கள், எல்லாரும் அவரவர் இல்லத்திற்குச் செல்லுங்கள்." இவ்வாறு பாபா மக்களிடம் சொல்லுவார்.

இவ்வானந்தம் இப்பொழுது அனுபவிக்கக் கிடைக்காதெனினும், ஷிர்டியின் குறிப்பிட்ட இடங்களையும் குறிப்பிட்ட நேரங்களையும் அவ்வானந்தமான நாள்களையும் திடமான தியான பலத்தினால் இன்றும் மனக்கண்முன் கொணர்ந்து அனுபவிக்க முடியும்.

ஆகவே, நாம் அவ்வாறு தியானம் செய்வோமாக. பாபாவினுடைய கால் கட்டை விரலில் இருந்து முகம் வரை மனக்கண்முன் கொணர்ந்து, பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டுக் கதையை மேலும் தொடர்வோம்.

சென்ற அத்தியாயத்தின் முடிவில், வேதத்தின் ஒரு பகுதிக்கு விளக்கத்தை ஒரு வேலைக்கார சிறுமியின் பண்பால் பாபா மலர்ச்சி செய்தார் என்று கதை கேட்பவர்களுக்கு சொல்லப்பட்டது.

'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை' தாசகணு எழுத ஆரம்பித்து விட்டாரெனினும், அதை எழுதும்போது சில சந்தேகங்கள் எழுந்ததால், அவற்றை ஷிர்டியிலிருந்த சத்தகுருவின் பாதங்களுக்கு கொண்டுவந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பாபா சொன்னதாவது, 'நீர் திரும்பி போகும்போது, 'காகா'  வீட்டு வேலைக்காரி உம்முடைய சந்தேகங்களை நிவிர்த்தி செய்வாள்.'

அவ்வார்த்தைகளே இக்கதையின் பின்னணியாக அமைகின்றன. அங்கிருந்து நாம் தொடர்வோமாக! கேள்விக்கு குறைவேற்படாத வகையில், செவிமடுப்பவர்கள் கவனத்தை கொடுப்பீர்களாக!

சம்ஸ்கிருதபாஷை தெரியாத மக்களுக்கு, ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் அர்த்தத்தை பதம் பதமாக மராட்டி மொழியில் ஓவி வடிவில் கொடுக்க வேண்டும்.

ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் மராத்தியில் எழுத ஆரம்பித்தபோது, இதுவே தாசகணுவின் விருப்பமாக இருந்தது.

இந்த உபநிஷதம் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியாதது; கூடமான அர்த்தம் (மறைபொருள்) நிரம்பியது. பதம் பதமாக பிரித்து உரை எழுதி விட்டாரே தவிர, தாசகணுவிற்கு உபநிஷதத்தின் முழுமையான அர்த்தம் பிடிபட்டுவிட்டது எனது திருப்தியுற முடியவில்லை.

நான்கு வேதங்களின் முடிவான சிகரங்களே உபநிஷதங்கள். குருவினுடைய கிருபையும் ஹரியுனுடைய கிருபையும் இல்லாது உபநிஷதங்களையும் புரிந்து கொள்ள முடியாது. 


No comments:

Post a Comment