valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயி நாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரம்மாவில் இருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்திலும் சாயி சூக்குமத்தை விட சூக்குமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர்.

அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும் வடிவமும் வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. (மனிதனின் மனதில்).

சூரியவழிபாடு செய்பவர்கள் ஹாரதி காட்டுவதற்காக விளக்குகளில் இருக்கும் திரிகளை பக்தியுடன் தூண்டிவிடுகிறார்கள். பிள்ளையார் பக்தர்கள் வெல்லத்தில் அவருடைய உருவத்தை செய்து, வெல்லத்தையெ நைவேத்தியம் ஆகவும் படைக்கிறார்கள்!

சிலர் தங்களுடைய கைகளில் சமுத்திர நீரை ஏந்தி, சமுத்திரத்திற்கே அர்கியமக அர்ப்பணம் செய்கிறார்கள். மேல் எழுந்த வாரியாக பார்த்தால், இதெல்லாம் அனுசிதம் (மேன்மையல்ல) என்றே தோன்றுகிறது.

ஆயினும், மகாபிரபாவம் வாய்ந்த சூரியனும் சமுத்திரமும் பக்தர்களுடைய நம்பிக்கையை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. பக்தியை கௌரவிக்க வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கும்போது, உசிதம் (மேன்மை) எது, அனுசிதம் எது?

சிந்தனையிலும் ஆர்வங்களிலும் ஒத்துப்போகும் மனிதர்கள் நட்பை நாடுவார்கள் என்பது பொதுவான விதி. ஆனால், உடலுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் சங்கமம், இந்த விதிக்கு ஒரு பெரிய, தவிர்க்க முடியாத விலக்கு.

சுபாவத்தில் பரஸ்பரம் வேறுபட்டாலும், இவை இரண்டின் சேர்கை, ஒன்றில்லை என்றால் மற்றதுமில்லை என்னும் அளவுக்கு அசாதரமானது. இவை இரண்டும் ஒருகணங்கூட பிரிந்திருக்க முடியாது.

இவ்வுடல் அழியக் கூடியது; ஆத்மாவோ மாறுபாடற்றது; அழிவல்லாதது. இரண்டிற்குமுள்ள பரஸ்பரப் பிரேமை அபாரமானது. இதனால்தான் சம்சாரச் சக்கரம் மேலும் மேலும் சுழல்கிறது!

ஆத்மா மகத்தான சக்தியை உடையது. அதை விட சூக்குமமானது ஆகாயம். அதுவே தோன்றா நிலையில் உள்ள பிரகிருதி (இயற்கை). அதையே மாயையென்றும் கூறுவர். 


No comments:

Post a Comment