valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இதையெல்லாம் விட சூக்குமமானது புருஷன் (இறைவன்); புலன் அங்கங்கள் ஓய்வு பெரும் இடம். அதுவே எல்லாரும் கடைமுடிவாகச் சென்றடைய வேண்டிய இடம்; தூய பிரம்மம்.

இந்த ஆத்மா, தன்னைப் பொறுத்தவரை ஸ்படிகம் போன்று மாசுமறுவற்றதாயினும், இவ்வுலக வாழ்க்கையில் மாயையாலும் கர்ம வினையாலும் பந்தப்பட்டது பொல்லாத தோன்றுகிறது.

சிவப்போ கறுப்போ மஞ்சளோ, தன்முன் இருக்கும் வண்ணம் எதுவாக இருந்தாலும் ஒரு ஸ்படிகம் அதை பிரதிபலித்துவிடும். ஆனால், ஸ்படிகம் தூய்மையானது; மாறுதலில்லாதது; பிரதிபலிக்கும் வண்ணங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை;

தொலைதூரத்தில் இருக்கும் கானல் நீர் தண்ணீரைப் பொல்லாத தெரிகிறது; சிப்பி பளபளவென்று வெள்ளியைப் பொல்லாத தெரிகிறது. சுற்றிவைக்கப் பட்ட கயிறு சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் பாம்பை போன்று தேவையில்லாதது தெரிகிறது.

கயிற்றைப் பார்த்து பாம்பென்று மிரளுவது எப்படி அடிப்படையே இல்லாத ஒரு தோற்றமோ, அதுபோன்றே, விடுதலையடைந்த ஆத்மாவுக்கு "நான்தான் உடல் என்னும் அஹங்காரம் ஒரு மாயா பந்தத்தை உற்பத்தி செய்கிறது.

உடல், புலனுறுப்புகள், மனம், பிராணன் இவற்றிலிருந்து வேறுபட்ட லக்ஷணங்களை உடையது ஆத்மா. அது சுயஞ்சோதியான சுத்த தத்துவ ஞானம், உருவமில்லாதது, மாறுபடாதது.

தேகம், புத்தி, மனம், பிராணன் இவற்றைப் பற்றிய அபிமானம் இருக்கும்வரை, செயல்பாடுகளும் இன்பத்துன்ப அனுபவங்களும் இருந்துதான் தீரும். ஏனெனில், இவற்றின் பிரஞை (உணர்வு) இருந்துதான் தீரும்.

ஆலம் விதை மிகச் சிறியதாக இருப்பினும், தன்னுடைய கர்ப்பத்தினுள் ஒரு பெரிய ஆலமரத்தின் சக்தியையும் வலிமையையும் வைத்திருக்கிறது. ஆலமரங்களும் கோடிக்கணக்கான  மரங்களை உற்பத்தி செய்யக்கூடிய கணக்கற்ற விதைகளை உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறாக, ஒவ்வொரு விதையும் ஒரு மரத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. பிரளய காலம் (ஊழிக்காலம்) வரை, இவ்வதிசயச் சம்பவம் தொடரும்! இதுவே இவ்வுலகின் விஷயத்திலும் பிரத்யக்ஷம் (கண்கூடு) கவனத்துடன் நோக்குங்கள்.

என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும்.

ஞானமின்றி மோக்ஷமில்லை. பற்றறுக்காமல் ஞானம் கிடைக்காது. இவ்வுலக வாழ்வு ஒரு நீர்க்குமிழி என்பது மனத்திற்குப் புரியாதவரையில், துறவு பற்றிய எண்ணமே எழாது.

இவ்வுலக வாழ்வு அநித்யமானது (நிலையில்லாதது ) என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரீகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாறுகிறான். 

No comments:

Post a Comment