valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 April 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

குறிப்பிட்ட காலம் கழிந்தபின், சேட்ஜிக்கு இறைவன் அருள் புரிந்தார். ரதன்ஜியின் மனைவி கர்ப்பம் தரித்தார். வம்சவிருஷம் துளிர்விட ஆரம்பித்தது.

சுபகரமான வேளையில் ரதன்ஜியின் மனைவி பிரசவித்தார். பாபாவின் ஆசிர்வாதம் சத்தியமாகியது. ரதன்ஜிக்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு புத்திரன் பிறந்தான்.

பல வருடங்கள் மழை பெய்யாது வறட்சியால் அவதிப்படும் மக்கள் திடீரென்று பெய்த கொட்டும் மழையைப் பெற்றது போல், புத்திரஸ்தானம் பெற்ற சேட்ஜி பெருமகிழ்ச்சி அடைந்தார்.

காலப்போக்கில் வம்சவிருக்ஷம் வளர்ந்து பல கிளைகள் விட்டு, மகன்களும் மகள்களுமாகப்  பூத்துக் குலுங்கியது. சேட்ஜி மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்தார்.

அதன் பிறகும் ஷீரடிக்கு சாயி தரிசனத்திற்காகப் போவதை ரத்தன்ஜி தொடர்ந்தார். சாயியினுடைய ஆசீர்வாதத்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறி, சேட்ஜி மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழ்ந்தார்.

வசந்தகாலத்தில் மாமரம் காய்த்துக் குலுங்குகிறது. ஆனால், எல்லாக் காய்களும் பழமாகிவிடுவதில்லை. பன்னிரண்டு மகன்களில் நான்கு பேரே நீண்ட ஆயுள் பெற்றனர். தற்பொழுது (காவியம் எழுதப்பட்ட காலத்தில்) நால்வரும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.

சுபாவமாகவே சமநோக்கு கொண்ட ரத்தன்ஜி, விதிவசத்தால் ஏற்பட்ட இழப்புகளையும் சிறிதும் வருத்தப்படாது சகிப்புத்தன்மையுடன் ஏற்றுகொண்டார்.

அடுத்த காதையின் சாரத்தைப் பார்ப்போம்! நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் சாயி நிறைந்திருக்கிறார். இதை எவரும் எங்கும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்துகொண்டால் அனுபவிக்கலாம்.

தானேயில் வாழ்ந்த ஏழையும், பணிவு மிகுந்தவருமான சோல்கர் என்னும் அடியவரின் பக்தியும் விசுவாசமும் குருவரரை (பாபாவை) எவ்வாறு மகிழ்ச்சியடையச் செய்தது என்பதையும்-

முன்னாள் பார்த்தறியாத பாபாவின் (படம்) முன்னிலையில் அவர் எவ்வாறு ஒரு விரதத்தை மேற்கொண்டார் என்பதையும், எப்படி அவருடைய மனோரதம் நிறைவேறியது என்பதையும் இது விஷயமாக அவர் பெற்ற நேரிடியான அனுபவத்தையும் விவரிக்கிறேன். 

பிரேமை இல்லாது என்ன பஜனை? அர்த்தம் புரியாமல் புராண பாராயணம் எதற்கு? நம்பிக்கை இல்லாதவனுக்கு இறைவன் எங்கே இருக்கிறான்? இவையனைத்தும் வீண் பிரயாசை அல்லவோ?

மங்களகரமான குங்குமத் திலகமில்லாத நெற்றி, அனுபவமில்லாத ஏட்டுப் படிப்பு ஆகியன வீண். இவ்வார்த்தைகள் புத்தகங்கள் படித்ததால் வெளிவந்தவை  அல்ல. நீங்களே அனுபவித்துப் பார்த்துவிட்டு பிறகு மதிப்பிடுங்கள்.

சாயி லீலைகளைப் பற்றிய இப்பிரபந்தம் எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். இதனுடைய பிரயோஜனம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னைக் கருவியாகக் கொண்டு, சாயியே இதை எழுதி வாங்குகிறார்; அவருக்குதான் பிரயோஜனம் என்னெவென்று தெரியும்!


No comments:

Post a Comment