valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 March 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சேட்ஜி ஷீரடிக்கு போவதென்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, மௌலீசாஹெப் தம்முடைய விருப்பபடி ஒருநாள் சேட்ஜியின் வீட்டுக்கு வந்தார்.

இருவருக்குமிடையே அளவுகடந்த அன்பு இருந்தது. மௌலீசாஹெப்புக்கு பூமாலையும் பழங்களும்  உபசாரமாக அளிக்கப்பட்டன.

அந்த சமயத்தில், மௌலீசாஹெபுக்கு ஒரு சிற்றுண்டியாவது அளிக்க வேண்டுமென்று சேட்ஜிக்கு  திடீரென்று மனதில் உதயமாகியது. தாசகணுவுக்கு  இதற்கான செலவு பற்றி உடனே ஞாபகம் வந்தது.

செலவுப்பட்டியல் வரவழைக்கப்பட்டு ஒரு பைசாவையும் விட்டுவிடாமல் எண்ணப்பட்டது. எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் , மொத்தத் தொகை துல்லியமாக ஒத்துப்போயிற்று .

கூடவோ குறையவோ இல்லாமல், மொத்தச் செலவு மூன்று ரூபா பதினான்கு அணா  ஆகியிருந்தது. இதை நான் பெற்றுகொண்டேன் என்று பாபா குறிப்பிட்டதுதான் எல்லாருக்கும் பலவிதங்களில் ஆச்சரியத்தை விளைவித்தது.

சாயி மஹராஜ்  ஞான கோடியாவார் . மசூதியில் உட்கார்ந்தபடியே இவ்வுலகத்தின் எந்தப் பகுதியிலும் நடந்தது, நடப்பது, நடக்கபோவது அனைத்தையும் அறிந்திருந்தார்.

உயிரினங்கள் அனைத்தும் ஏகாத்மமாக இல்லையெனில், சமர்த்த  சாயி இதை அனுபவித்து, மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

ஷிர்டிக்கும் நாந்தெடுக்கும்  இடையில் எவ்வளவோ தூரம் இருக்கிறது. மேலும், இரு ஞானிகளும் பரஸ்பரம் அறிந்தவர்களில்லை . சாயிபாபாவுக்கு தந்தி வந்தது எவ்வாறு?

'நான் சாயி பாபா, மௌலீசாஹெப் என்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்' என்னும் பேதபுத்தி அவர்கள் இருவருக்குமே இல்லை.

மௌலீசாஹெபின் ஆத்மா எல்லாருடைய அந்தராத்மாவுடன் ஒன்றியதாகும். இந்த மர்மத்தைப் புரிந்துகொண்டவர் மகா பாக்கியசாலி.

வெளிப்பார்வைக்கு இருவேறு தேஹங்களில் குடியிருந்தாலும், உள்ளுக்குள் இருவரும் ஒருவரே. எண்ணிப் பார்த்தால் , 'அவர்கள் இருவரும்' என்னும் சொல்லாட்சியே தவறாகும்; ஏனினில் , அவர்கள் எப்பொழுதுமே பிரிந்திருந்ததில்லை.

ஞானத்திலும் பிராணனிலும் அனுசந்தானத்திலும் (வாழ்க்கை ஒழுக்கத்திலும்) அவர்கள் இருவரும் ஒருவரே. அவர்களிருவருடைய சைதன்யமும் (ஆத்மாவும்) வாழ்வின் நோக்கமும் குறிக்கோளும் ஒன்றேயானவை.

ஷிர்டி நான்தேடிலிருந்து வெகு தூரத்திலிருந்தது. சந்தேகமில்லை. ஆனால், அவர்களிருவருடைய இதயமும் பிராணனும் சரீரமும் ஒன்றாக இருந்தன. ஆகவே, ஒருவர் மற்றவர்க்கு தந்திச் செய்தி அனுப்ப முடிந்தது.

கம்பியில்லா தந்தியையும்  தந்தி இயந்திரதையுமுள்ளே வைத்துக் கொண்டிருக்கும் சாதுக்களும் ஞானிகளும் எவ்வளவு விநோதமானவர்கள்! இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், எங்கு நடந்தாலும் அதை அவர்கள் முழுதும் அறிந்திருந்தனர்.


No comments:

Post a Comment