valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 March 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"நான் தெய்வ அருள் பெற்றவில்லை; அல்ப ஞானம் படைத்தவன். எனக்குப் பூஜையைப் பற்றியோ யாகங்களைப்  பற்றியோ எதுவுமே தெரியாது. விதிவசத்தால் இன்று நான் முக்காலத்தையும் அறிந்த ஒரு ஞானியை தரிசனம் செய்கிறேன். -

"என்னுடைய மனக்குறையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கிருபாநிதியே! தயாளரே! இந்த விசுவாசமுள்ள அடியவனை உம்முடைய பாதங்களிலிருந்து விலக்கிவிடாதீர்கள் ".

பிறகு, அவர் சேட்ஜியின் கையில் ஊதி பிரசாதத்தை அளித்தார்; அருட்கரத்தை சேட்ஜியின் சிரத்தின் மேல் வைத்து, பின்வரும் வார்த்தைகளால் ஆசீர்வாதம் செய்தார். "அல்லா உம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார்".

ரத்தன்ஜி விடைபெற்றுக் கொண்டு நாந்தேட் திரும்பினார். தாசகணுவிடம்  ஷீரடியில் நடந்ததை எல்லாம் விரிவாகவும் வரிசைக்கிரமாககவும் விவரித்தார்.

"நல்ல தரிசனம் கிடைத்து ஆனந்தமடைந்தேன். அவருடைய பிரசாதமும் உறுதி மொழியும் ஆசீர்வாதமும் கிடைத்தன. -

"எல்லாமே மிகத் திருப்திகரமாக நடந்தன; ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. மஹராஜ்   எனக்கு சொன்னது என்னேவென்றே புரியவில்லை!-

"மூன்று ரூபாய் பதினான்கு அனா நீர் ஏற்கனவே கொடுத்துவிட்டீர்  என்று எனக்கு தெரியும்'. பாபா என்ன தெரிவிக்கிறார் இங்கு? எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.-

"என்ன ரூபாய்? என்ன அணா ? நான் அவருக்கு எப்படி முன்னமேயே ஏதும் கொடுத்திருக்க முடியும்? இப்பொழுதுதான் நான் முதற்முறையாக ஷிர்டி சென்றேன். ஓ, எனக்கு இதனுடைய முக்கியத்துவம் ஒன்றுமே புரியவில்லையே!-

"எனக்கென்னெவொ  இது புரியவில்லை. இது ஒரு சூக்குமமாக தெரிகிறது; என்னால் விடுவிக்க முடியாத புதிர்; நீங்களாவது இதை எனக்குப் புரியவைக்க முடியுமா?"

இது ஒரு மர்மமாகத்தான் இருந்தது! தாசகணு  இதனுடைய சூக்குமம் என்னவாக இருக்குமென்று யோசனை செய்ய ஆரம்பித்தார். மனதில் எந்த சூசகமும் தென்படவில்லை.

சிறிது நேரம் ஆழமாகச் சிந்தித்த பிறகு, அவருக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மௌலி சாஹேப் என்ற முஸ்லீம் ஞானியின் உருவம் அவருடைய மனக்கண்முன் தோன்றியது.

இஸ்லாம் மதத்தில் பிறந்த அவர், வாழ்முறையில் ஒரு ஞானி; பளு தூக்கும் கூலியாளாக வேலை செய்தார்; விதிவசத்தால் அமைந்த வாழ்க்கையை நடத்தினார்.

அவருடைய சரித்திரத்தை இங்கு விவரிக்க புகுந்தால், பிரதமமான காதையில் இருந்து பாதை பிரிந்துவிடுவோம். நாந்தேடில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் தெரியும்.


No comments:

Post a Comment