valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 March 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

வாஸ்தவமாக, பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர, பாபாவுக்கு தக்ஷினையால் என்ன உபயோகம்? அவர் உயிர் வாழ்வதற்கு தக்ஷிணையையா  நம்பியிருந்தார். 

பசியாறுவதற்கு அவர் பிச்சை எடுத்தார். ஆகவே, தக்ஷிணை வாங்குவதில் சுயலாப நோக்கம் ஏதும் இருந்திருக்க முடியாது. தக்ஷிணை கொடுப்பதால் பக்தர்கள் நோக்கம் ஏதும் இருந்திருக்க முடியாது. தக்ஷிணை கொடுப்பதால் பக்தர்கள் நோக்கம் ஏதும் இருந்திருக்க முடியாது. தக்ஷிணை கொடுப்பதால் பக்தர்கள் மனத்தூய்மை பெறவேண்டும் என்பதே  ஒரே லட்சியமாக இருந்தது. 

மேலே சொல்லப்பட்ட வேதவசனத்தின்படி, தக்ஷிணை கொடுக்கப்படாமல் குரு பூஜை முடிவு பெறாது. 

போதும் தக்ஷிணையைப்  பற்றி பிரசங்கம்! பேராசையாலோ சுயநலத்துக்காகவோ  தக்ஷிணை கேட்கப்படவில்லை என்பதும் பக்தர்களின் நலனுக்காகவே கேட்கப்பட்டது என்பதுமான முக்கியமான கருத்து நன்கு தெளிவாகி விட்டது. 

ஆகவே, இப்பொழுது ஏற்கெனெவே விரிவாகச் சொல்லப்பட்ட கதையைத் தொடர்வோமாக. சேட்  ரத்தன்ஜி பாபாவுக்கு தக்ஷிணை கொடுத்தபோது பாபா புரிந்த அற்புதமான லீலையைக் கேளுங்கள். 

கேட்பவர்கள் கிருபை கூர்ந்து இந்த அற்புதமான காதையை கவனத்துடன் கேட்கவேண்டும். சாயியின் எங்கும் நிறைந்த தன்மையையும் விசேஷமான குணத்தையும் அவர்களே காணலாம்.

சேட்ஜியை  பாபா தக்ஷிணை கேட்டபோது பழைய நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி பேசினார். ஆனால், அது ஞாபகம் வராததால் சேட்ஜி வியப்படைந்தார். 

"நீர் ஏற்கெனவே மூன்று ரூபாயும் பதினான்கு அனாவும் எனக்குக்  கொடுத்திருக்கிறீர். இப்பொழுது தக்ஷிணையாகக்  கொண்டுவந்த பணத்தில் மீதியைக் கொடும்".

அதுதான் அவர் செய்த முதல் தரிசனமானதால், சேட்ஜி பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார். தம் நினைவுச் சுவடுகளில் தேடித் பார்த்தார். 

"நான் இதற்கு முன் ஷீரடிக்கு வந்ததே இல்லை . எவர்மூலமும் எதையும் கொடுத்தனுப்பியதுமில்லை. இவ்வாறிருக்கும்போது சாயி மகாராஜ் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புதிராக இருக்கிறது! என்று அவர் நினைத்தார். 

அம்மாதிரியான நிகழ்ச்சி (தக்ஷிணை கொடுத்தது) நடந்ததே கிடையாது! ரதன்ஜியை  இது தர்மசங்கட நிலையில் வைத்தது. அவர்  தக்ஷினையைக் கொடுத்துவிட்டு பாதங்களில் வணங்கினார். ஆனால், புதிர் விடுபடாமலேயே இருந்தது. 

இருந்தாலும், இதுவிஷயம் அவ்வண்ணமே நிறுத்தப் பட்டது. ரத்தன்ஜி தாம் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். பாபாவை மறுபடியும் வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு உட்கார்ந்துகொண்டார். 

சேட்ஜி மனத்தளவில்  மிகத் திருப்தியடைந்து சொன்னார், "பாபா, என்னுடைய பூர்வ புண்ணிய பலனால் நான் இன்று உங்களை தரிசனம் செய்கிறேன்.- 


No comments:

Post a Comment