valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 May 2013

ஷிர்டி சாய்  சத் சரிதம்

"சீக்கிரமாக திரும்பி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, பாபாவினுடைய  அனுமதியைத் தெளிவாகப் பெறாமலேயே கிளம்பி விட்டார். என்ன ஆயிற்று என்று இப்பொழுது  கேளுங்கள்

குதிரைவண்டி சிரித்தும் லேசானதுமானது. குதிரைகள் கட்டுப்பாடில்லாமல் பள்ளம் படுகுழிகளைக் கூடப் பார்க்காமல் மூர்க்கத் தனமாக ஓடின. தாத்யாவிணுடைய  உயிர் மயிரிழையில் தொங்கியது

ஆனால், சாயியினுடைய அருள் அவரைக் காப்பாற்றி விட்டது நல்ல காலமாக, பெரிய ஆபத்து ஏதும் நேராமல், வண்டி ஒரு கருவேலமரத்தின் மேல் மோதி அங்கேயே உடைந்து விழுந்து விட்டது.

அவ்விதமாகவே ஒருசமயம், பெருந்தகையும் கனவாணும் கிருஹச்தருமான ஓர் அங்கிலேயர், மனத்தில் எதோ ஒரு நிச்சய நோக்கத்துடன் பாபாவை தரிசனம் செய்வதற்காக பம்பாயிலிருந்து வந்தார்.

சாந்தொர்க்கரிடமிருந்து  மாதவராவுக்கு விலாசமிடப்பட்ட சிபாரிசுக் கடிதம் ஒன்று கொண்டுவந்தார். தங்குவதற்கு ஒரு கூடாரம் கேட்டு வாங்கிக் கொண்டு அதில் சுகமாகத் தங்கினார்.

பாபாவினுடைய  விருப்பமின்றி, மசூதியின் படிகளில் ஏறித் திருப்தியாக அவரை தரிசனம் செய்வதென்பது முடியாத காரியம் என்பது எல்லாருக்குமே தெரியும்.

மூன்று முறைகள் அந்த கனவான் மசூதியின் படிகளில் ஏற முயன்றார்; ஆயினும், அம்முயற்சிகள் வீண் போயின! வந்தவர் பெரிதும் மனமுடைந்து போனார்

மசூதியின் படிகளில் ஏறி, மண்டியிட்டு வணங்கி, பாபாவின் கைகளை முத்தமிட்டுவிட்டுச் சிறிதுநேரம் அங்கு அமர வேண்டும் என்னும் ஆவல் அவருடைய மனத்தின்  அடித்தளத்தில் இருந்தது.

அவருடைய ஆவல் அவ்வாறு இருந்தாலும், பாபா அவரை அந்த நேரத்தில் மசூதிக்குள் வந்து தம்மருகில் உட்கார அனுமதிக்க விரும்பவில்லை.

அவர் சபா  மண்டபத்தில் இருக்க வேண்டுமென்று பாபா விரும்பினார். விருப்பமிருந்தால் அங்கிருந்தே தரிசனம் செய்யட்டுமென்றும் நினைத்தார் .

ஆகவே, ஆங்கிலேயர் எழுந்து முற்றத்திற்கு வந்து, வீடு திரும்பி போவதற்கு விடை பெற்றுக் கொள்ள முயன்றார். பாபா அவரிடம் கூறினார், "ஏன் இந்த அவசரம்? நீர் நாளைக்குப் போகலாமே".

சுற்றியிருந்த மக்களும் அவரைப் போக வேண்டாம் என்று பலவிதமாக மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். பாபாவின் அனுமதியின்றி வீடு திரும்பியவர்கள் எவ்விதம் வருத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் கூறினார்.

ஆனால், எவருமே விதியை எதிர்த்துச் செயல்பட முடியாது! அவர் அதை ஒப்புக் கொள்ளாது அனுமதியில்லாமலேயே கிளம்பிவிட்டார். சங்கடங்களும் சோதனைகளும் எதிர்கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் குதிரைவண்டி ஒழுங்காகத்தான் ஓடியது. ஆனால், பின்னர்க் குதிரைகள் தடம் மாறி ஓட ஆரம்பித்தன. சாவூல் விஹிர் கிராமத்தை தாண்டிச் சிறிது தூரம் சென்றபோது, திடீரென்று ஒரு சைக்கிள் வண்டி குறுக்கே வந்தது.


No comments:

Post a Comment