valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 June 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆங்கிலேயர் வண்டியில் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார். முன்னால் கட்டப் பட்டிருந்த குதிரைகளோ, திடீரென்று ஏற்பட்ட தடங்கலால், மிரண்டு ஓடின. ஆங்கிலேயர் நிலை தடுமாறிப் பாதையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.

பெரும் பிரயத்தனம் செய்து குதிரை வண்டி நிறுத்தப் பட்டது பாதையில் இழுத்துக்கொண்டு போகப் பட்டவர், தூக்கி நிறுத்தப்பட்டு வண்டியில் உட்கார வைக்கப் பட்டார். குதிரை வண்டி மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தது.

ஐயகோ! ஷிர்டி ஒரு பக்கம் இருக்க, பம்பாய் மற்றொரு பக்கம் இருக்க, கொபர்காங்க்விலிருந்த  மருத்தவமனைக்கு குதிரைவண்டி சென்றது.

பாபாவினுடைய  கட்டளைக்குக் கீழ்ப்படியாத பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ததுபோல, குற்றவுணர்ச்சி யால்   தம்மைத்தாமே நொந்துகொண்டு, ஆங்கிலேயர் சில நாள்கள் அம்மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது .

ஜனங்களுக்கு இம்மாதிரியாக கணக்கற்ற அனுபவங்கள் இருந்தன. அதன் விளைவாக, இம்மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு சந்தேகமும் பயமும் ஏற்பட்டது பபவினுடைய ஆக்ஞைகளுக்கு  கீழ்படிந்து நடந்து கொண்டார்கள்; கீழ்ப்படியாமல் நடப்பதற்கு ஒருவருக்குமே தைரியம் இருக்கவில்லை.

சில சமயங்களில் வண்டியின் சக்கரம் கழன்றோடியது. சில சமயங்களில் குதிரைகள் நேரத்தில் சோர்ந்து போயின; ரயில்கள் தவறவிடப் பட்டன. மக்கள் பட்டினி கிடகும்படியும் விரக்தியில் மனம் புழுங்கிக் குமுரும்படியும் நேர்ந்தது.

அவருடைய ஆக்ஞைக்கு கட்டுப் பட்டு நடந்தவர்கள் ரயிலைத் தவற விடாது நேரத்தில் பிடித்தார்கள்; சில சமயங்களில் ரயில்கள் நேரம் தவறி அவர்களுக்கு சௌகரியமாக வந்தன! இனிமையாகவும் சௌகரியமாகவும் பிரயாணம் செய்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்கவில்லை .

பிச்சையெடுத்துப் பிழைப்பதை பாபா ஏன் பல வருடங்களுக்கு வாழ்நெரியாகக் கொண்டார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், இந்த விவரணத்தைக் கேளுங்கள் .

பாபாவினுடைய  வாழ்நெறியையும் நடத்தையையும் பற்றி முழுமையில் யாராவது சிந்தித்தால், பிச்சை எடுத்துப் பிழைத்ததே பாபாவுக்கு மிக்க ஒப்பிதம் என்பது விளங்கும்.
அவ்வாறு செய்ததால் , ஷிர்டி வாழ் மக்களுக்கு, இல்லறதோருக்கு  விதிக்கப் பட்ட கடமைகளைச் செய்வதற்கு நல்வாய்ப்பளித்தார். அவர்களுடைய நன்மைக்காகச் செய்யப் பட்டு, அவர்களுக்கு ஆனந்தமும் அளித்த நற்செயலாகும் அது.

வேறெதிலும் ஈடு படாத விசுவாசத்துடன், மனம், வாக்கு , உடல், செல்வம், அனைத்தையும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு அத்தியந்த (மிக நெருங்கிய) பக்தராகிறார்.

இல்லறதோர் தாம் சமையில் செய்யும் உணவில் ஒரு சிறிய பகுதியை தினமும் பிரம்மச்சாரிகளையும் சந்நியாசிகளையும் நினைத்துக் கொண்டு ஹோமத்தில் (புனித அக்கினியில்) இட வேண்டும்.

No comments:

Post a Comment