valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

அப்போதிலிருந்து தினமும் உணவு கொண்டு போவதென்ற தவறாத பழக்கம் தம்பதியால் (பாயஜா பாயியும் அவருக்குக் கணவரும்) அனுசரிக்கப் பட்டது. அவர்களுக்குப் பிறகு தாத்யாவால் செய்யப் பட்டது.

எவருடைய இதயத்தில் வாசுதேவன் எப்பொழுதும் உரைகின்றானோ அந்த ஞானி புனிதமானவர்; புனிதமானவர். அரிய  பெரிய அதிர்ஷ்டத்தால் ஞானிகளுடன் புனித சங்கமெனும் வைபவத்தை பெரும் பக்தர்களோ புண்ணிய சாலிகள்.

தாத்யா  ஒரு மகா பாக்கியவான்! மகால்சாபதியும் பூர்வஜன்ம புண்ணியங்கள் பல சேர்த்தவராக இருக்க வேண்டும்! ஏனெனில், அவர்கள் இருவருமே பாபாவுடன் கூட இருப்பதென்னும்  முன்னுரிமையை சரிசமமாக அனுபவித்தார்கள்.

தாத்யா , மஹால்சாபதி , இருவருமே மசூதியில் உறங்கினர். பாபா இவ்விருவர்மீது வைத்த  சரிசமமான பிரீத்தி விவரிக்க முடியாததாகவே இருந்தது.

அவர்கள் மூவருடைய தலைகளும் கிழக்கு, மேற்கு, வடக்கு, என்று மூன்று திசைகளில் இருந்தன பாதங்களோ மத்தயில் பரஸ்பரம் தொட்டுக் கொண்டிருந்தன.

இவ்வாறு அவர்கள் படுக்கை விருப்புகளைப் போட்டுக் கொண்டு பலவிதமான விஷயங்களைப்  பேசிக் கொண்டிருப்பார்கள். யாராவது ஒருவருக்கு தூக்கக் கலக்கம் வருவதுபோலத் தெரிந்தால் மற்றவர் அவரை எழுப்புவார்.

தாத்யா  குறட்டைவிட ஆரம்பித்தால், பாபா சட்டென்று எழுந்து தாத்யாவை  புரட்டிப் போட்டுத் தலையைப் பிடித்து அமுக்குவார்.

மஹால்சாப்தி யையும் சேர்த்துக் கொண்டு இருவரும் தாத்யாவை  கெட்டியாகப் பிடித்து, இறுக்கமாக அணைத்து, கால்களைப் பிடித்துவிட்டு, முதுகையும் பலமாகத் தேய்த்து விடுவர்.

இவ்விதமாக தாத்யா  பதினான்கு முழு ஆண்டுகள் மசூதியில் பாபாவுடன் உறங்கினார் ஓ , எவ்வளவு அற்புதமான காலம் அது! அந்தக் காலம் அவர்களுடைய மனதில் என்றும் மறவாத வாறு பதிந்து விட்டது.

பெற்றோர்களை வீட்டில் விட்டுவிட்டு, பாபாவின் மீதிருந்த பிரேமையால் மசூதியில் உறங்கினார். எந்தப் படியை உபயோகித்து இந்த அன்பை அளப்பது? அந்தக் கிருபையை (பாபாவின்) யாரால் மதிப்பிட முடியும்?

தந்தை காலமான பிறகு, குடும்ப பொறுப்பு தாத்யாவின்  தலையில் இறங்கியது. தாமே ஒரு கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆகி விட்டார். அதன் பிறகு அவர், வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.

நிஷ்டையுள்ள  பாவத்தினால் மட்டுமே சாயி அனுபவம் கிட்டும்; கேட்காமலேயே கிட்டும். பக்தனுக்கு இது ஓர் அற்புதம்.

அதுபோலவே, ரஹாதாவில்  விக்தியாதி பெற்ற தவன்தரும் கிராமத்தின் நகர்சேட்டுமான  குஷால்சண்ட்  என்பவர் இருந்தார்.


No comments:

Post a Comment