valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எவ்வாறு கண்பத் கோதே பாடீல் (ஷிர்டியை சேர்ந்தவர்) என்ற பக்தர் மீது பாபா விருப்பம் செலுத்தினாரோ, அவ்வாறே குசால்சந்தின் சிறிய தகப்பனாரின்மீதும் அவர் மிகப் பிரீதியுடையவராக இருந்தார்

மார்வாடி சமூகத்தவராக இருந்தாலும் அவர் பாபாவை மிக விரும்பினார் இருவரும் அடிக்கடி சந்தித்தனர்; பரஸ்பரம் மகிழ்ச்சியடைந்தனர்.

சில காலத்திற்குப் பிறகு, பெரிய சேட்  ஸ்ரீ ஹரியினுடைய இச்சைப்  படி வைகுண்ட பதவி யடைந்தார் ஆனால், பாபா இந்த நட்பை மறக்க வில்லை. வாஸ்தவத்தில் இக் குடும்பத்தின் மீது பாபா வைத்திருந்த அக்கறை பன்மடங்காகியது.

இதற்குப் பிறகும் பாபா குசால்சந்தின்மேல் வைத்திருந்த பிரேமை வளர்ந்தது. பாபா ஜீவிதமாக இருந்தவரை குசால்சந்தின் நல்வாழ்வை இரவுபகலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

தம் அன்பர்களுடன் சுமார் ஒன்றரை மைலுக்கப்பாலிருந்த  ரஹாதாவிருகுச் சில சமயங்களில் மாட்டுவண்டியிலும் சில சமயங்களில் குதிரை வண்டியிலும் பாபா செல்வார்.

கிராம எல்லையில் வாத்திய கோஷங்களோடு கிராம மக்களால் பாபா வரவேற்கப் படுவார். பிறகு, கிராம மக்கள் பிரேமையுடன் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்குவர்
அங்கிருந்து பாபா ஆனந்தம் பொங்கும் ஆஅடல் பாடல்களுடன் கிராமத்தினுள் மரியாதையாக அழைத்து செல்லப் படுவார்.

பிறகு, குசால்சந்த் பாபாவைத் தம்முடைய இல்லத்தினுள் அழைத்துச் சென்று சுகமான ஆசனத்தில் உட்காரவைத்து விட்டுச் சிதறுண்டு ஏதாவது கொடுப்பார்.

இருவரும் பழைய நினைவுகளை பேசுவர்; மிகுந்த சந்தோஷத்தை அடைவர். அவர்களுடைய மகிழ்ச்சியை யாரால் வர்ணிக்க முடியும்!

மகிழ்ச்சி நிரம்பிய இந்தச் சந்திப்பு, பழ ஆயிரம் சாப்பிடுதல் ஆகியவை முடிந்தபிறகு, பாபா  அன்பர்களோடு தம்மிலே மூழ்கிய ஆனந்தத்துடன் திரும்பி ஷீரடிக்கு வருவார்.

ரஹாதா கிராமம் ஒரு திசையில் இருந்தது; நிம்காங்க்வ் கிராமம் மற்றொரு திசையில் இருந்தது. இரண்டுக்கும் நடுவில் ஷிர்டி கிராமம் இருந்தது.

மையமான ஷிர்டியில் இருந்து பாபா அவருடைய வாழ்நாளில் இவ்விரண்டு கிராமங்களை தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. இருப்பினும் அவருக்கு எங்கு நடக்கும் விஷயங்களும் (எல்லாமே) தெரிந்திருந்தன.

அவர் வேறெந்த ஊருக்கும் போனது கிடையாது; ரயிலையும் பார்த்தது கிடையாது. ஆனால், ரயில்கள் வரும் நேரம், கிளம்பும் நேரம், கால அட்டவணை அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

நேரத்தில் ரயிலைப் பிடிப்பதற்காக பக்தர்கள் ஏற்பாடுகளை மும்முரமாக செய்வார்கள். வீடு திரும்ப பாபாவினுடைய  அனுமதியை வேண்டி அவர்கள் சென்றபோது, "ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்" என்றுதான் கேட்பார் பாபா.



No comments:

Post a Comment