valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 January 2013

ஸ்ரீ ஷிர்டி சாயி சத் சரிதம்

திடீரென்று பாபா சொன்னார், "வாருங்கள், நாம் நால்வரும் சேர்ந்து பஜனை பாடுவோம். பந்தர்பூர் கோவில் கதவுகள்  திறந்திருக்கின்றன. மகிழ்ச்சியுடன் பஜனை செய்து கொண்டே இருப்போம்".

நடந்ததையும் நடப்பதையும் நடக்கப் போவதையும் நன்கறிந்த சாயி, நானா சாந்தோர்கர் வரப் போவதை அறிந்திருந்தார் நானா கிராமத்தின் எல்லையிலிருந்த ஓடையை வந்தடைந்தபோது, பாபா திடீரென்று பஜனை மிகுந்த உற்சாகம் காட்டினார்.

பஜனை
பண்டார்பூருக்கு நான் போவேன், போவேன்,
அங்கேதான் நான் தங்குவேன்,
அங்கேதான் நான் தங்குவேன், தங்குவேன்,
என்னுடைய இறைவனின் வீடு அதுவே!

பாபா தாமே பல்லவியைப் பாடினார்; கூட இருந்த பக்தர்கள் பின்பாட்டுப்  பாடினர். எல்லாருக்கும் பண்டரி விடோபாவின் மேல் அன்பும் பக்தியும் பொங்கியது. திடீரென்று நானா வந்து சேர்ந்தார்.

குடும்பத்தினருடன் பாபாவின் பாதங்களை தொட்டு வணங்கி, "மகாராஜ், எங்களுடன் பண்டர்பூருக்கு வாருங்கள்; அங்கு நிச்சிந்தையாக எங்களுடன் வாழுங்கள்" என்று வேண்டினார்

ஆனால், இந்த வேண்டுகோள் தேவைப் படவில்லை! அங்கிருந்தவர்கள், பாபா பந்தர்பூர் போவதற்குக் காட்டிய உற்சாகத்தைப் பற்றியும் அந்த உற்சாகம் எழுப்பிய பஜனையைப் பற்றியும் நானாவுக்குத் தெரிவித்தார்கள்.

நானா சாந்தோர்கர் பெரு  வியப்படைந்தார். பாபாவினுடைய லீலை அவரைப் பேராச்சரியம் அடையச் செய்தது. உணர்ச்சி வசப்பட்டுத் தொண்டை அடைத்தது. சிரம் தொடுமாறு பாபாவின் பாதங்களில் வணங்கினார்.

பாபாவினுடைய  ஆசிர்வாதங்களையும் ஊதியையும் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டபின், நானா பந்தர்பூர் செல்வதருகு விடைபெற்றுக் கொண்டார்.

இவ்வாறு நான் எல்லாக் காதைகளையும் சொல்லிக் கொண்டே போனால் இக்காவியம் மிக விஸ்தாரமானதாக  ஆகி விடும். ஆகவே பாபா மற்றவர்களுடைய துன்பத்தை நிவாரணம் செய்த லீலைகள் என்னும் பொருளை இத்தோடு  முடித்துக் கொள்கிறேன்.

இந்த அத்தியாத்தை முடித்துக் கொள்வோம்; பாபாவினுடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை அடுத்த அத்தியாத்தில் என்னுடைய நன்மைக்காக பலவிதமான காதைகளை நான் சொல்லப் போகிறேன்.

ஓ , என்னுடைய இந்த அஹங்காரம் எவ்வளவு முயன்றாலும் என்னால் இதை வெல்ல முடியவில்லை. யார் இந்த 'நான்'? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லையே! வாஸ்தவத்தில் சாயியே தம்முடைய காதையை தாமே சொல்லப் போகிறார்.




No comments:

Post a Comment