valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓம் நமோ குருராயா! வாக்கு முத்துக்களை பிரசாதமாக வழங்கும் மானசரோவர்! நீர்நிலை நீரே! அன்னன்னிய (வேறொன்றிலும் நாட்டமில்லாத ) பக்தர்களாகிய அன்னங்கள் தேவரீர் திருவடிகளை புகலிடமாக நாடுகின்றன.

மஹா உதாரணம் படைத்த நீர், உம்மைப் புகலிடமாக கொண்டவர்களுக்கு உமதருளென்னும் முத்தைத் தின்னக் கொடுத்து நிஜமான விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளித்து, ஜனன மரணச் சூழலில் இருந்து விடுதலை அளிக்கிறீர்.

ஓ! எத்தனை அற்புதமான சித்தாசிரமம் (சித்தர்கள் வாசம் செய்யும் இடம்) இந்த சாயி! வாழ்க்கையின் சிரமங்கள் அவரை தரிசனம் செய்த் மாத்திரத்திலேயே நிவிர்த்தியாகிவிடுகின்றன. அவருடன் ஸஹவாசமாக (கூடவே வசித்தல்) இருப்பவர்கள் பிறவியால் ஏற்பட்ட பிரமைகளில் இருந்து விடுதலை அடைகின்றனர்.

மூல நிலையில் சாயி உருவமற்றவர். பக்தர்களின் மங்களத்திற்காகவே உருவமெடுத்துக் கொண்டார். மாயை என்னும் மாபெரும் நடிகையின் சவாலை ஏற்றுக்கொண்டு, நடிகர் திலகமாக தம்முடைய பங்கையும் நன்கு நிறைவேற்றி விட்டார்.

இவ்வாறான சாயியை நமது மனதுக்குள் கொணர்வோம். மத்தியான ஆராதிக்குப் பின்பு அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனத்துடன் காண்பதற்கு ஒரு கண நேரம் ஷிர்டிக்கு போவோம், வாரீர்!

மத்தியான ஆரத்தி முடித்த பிறகு, பாபா மசூதியின் கைப்பிடிச் சுவரின் மூலைக்கு வந்து நிற்பார். கிருபை கனிந்த பார்வையுடன் பக்தர்களுக்கு உதி விநியோகம் செய்வார்.

பக்தர்களும் பிரேமையின் எழுச்சியால் பாபாவின் பாதங்களை கட்டியணைத்துக்கொள்வர். அங்கேயே நின்றுகொண்டு உதீமழையை அனுபவித்துக் கொண்டு பாபாவின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருப்பர்.



No comments:

Post a Comment