valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

'இறைவனின் அருள் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் நான் அனைத்தையும் பெறுவேன்" என்னும் பழமொழி சந்தேகமில்லாமல் உண்மையே. ஆனால், அது உணவுக்கும் உடைக்கும் மட்டும்தான் பொருந்தும்.

ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் இந்த விதியைப் பொறுத்த முயல்பவன் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஏமாற்றி போவான். 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்'; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.' இது பாபாவின் விலைமதிக்க முஐடியாத உபதேசம்.

பாபாவின் திருவாய் மொழியைக் கேட்கக் கேட்க, கேட்பவரை அது மேலும் மேலும் ஆனந்தத்தால் ஊஞ்சலாட செய்கிறது. பக்தியுடன் விசுவாசத்துடனும், மண் செழுமையாகவும் தளர்வாகவும் இருப்பின் வேர்கள் ஆழமாக சென்று பாய்கின்றன.

"நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும் - எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்.

"மூன்றரை முழம் உயரமுள்ள இம் மினதக் கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவர்தக்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன். -

"என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமல் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாக தொழுபவன் இரண்டென்னும் மாயையை  வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். -

"வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளை பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருத்து வேறுபட மாட்டான். -

"ஜனன மரணச் சுழலிலிருந்து நிச்சயமாக விடுபடவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன். தர்ம சாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும். -

"பிறர் மனதை புண்படுத்தவோ தாக்கவோகூடிய சொற்களைப் பேசக் கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக் கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாக கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். -

"உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேகத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்ப பட மாட்டான். அவனுக்கு எந்த விதமான பயமும் இல்லை.-

"எவனொருவன் வேறொன்றிலும் நாட்டமில்லாது என்னையே வரித்து, என்னுடைய புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டு, என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாதிருக்கிறானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான். "


No comments:

Post a Comment